Vadivelu -அண்ணே இதுவரைக்கும் நான் செஞ்சதே இல்லை ஆசையா இருக்கு...ஷூட்டிங்கில் தயாரிப்பாளரிடம் கெஞ்சிய வடிவேலு

சென்னை: Vadivelu (வடிவேலு) தயாரிப்பாளரிடம் நடிகர் வடிவேலு ஒரு விஷயத்துக்காக கெஞ்சிய விஷயம் தெரியவந்திருக்கிறது.

கோலிவுட்டில் தவிர்க்கவே முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் வடிவேலு. ராஜ்கிரண் வடிவேலுவை அறிமுகப்படுத்திய பிறகு தன்னுடைய திறமையால் பல படங்களின் வாய்ப்பை பெற்றார். 90களிலிருந்து 2010ஆம் ஆண்டுவரை வடிவேலு இல்லாத படங்களே கோலிவுட்டில் இல்லை என்ற நிலைமைதான் நிலவியது.

Here is the Details about Vadivelus Unknown side in his Starting Stage

மகா கலைஞன்: மற்றவர்களை மட்டம் தட்டி சிரிக்க வைக்காமல் தன்னைத்தானே தாழ்த்திக்கொண்டு மற்றவர்களை சிரிக்க வைப்பதில் வடிவேலு கில்லாடி. குறிப்பாக அவரது டயலாக்குகளும், பாடி லாங்குவேஜும் தனித்துவமானவை. அதனாலேயே தமிழர்கள் நெஞ்சில் நீக்கமற குடியிருக்கிறார் வைகைப்புயல் வடிவேலு. காமெடி மட்டுமின்றி குணச்சித்திர வேடத்திலும் கலக்கலான நடிகர் அவர்.

பஞ்சாயத்து: ரஜினி, கமல் ஹாசன், விஜய், சூர்யா, விக்ரம் என பல நடிகர்களுடன் காமெடி செய்த வடிவேலுவின் கிராஃப் உச்சத்தில் இருந்தது. சொல்லப்போனால் யாராலும் அசைக்க முடியாத சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கி வைத்திருந்தார். ஆனால் அவர் ஏறிய அரசியல் மேடை அவரது சாம்ராஜ்ஜியத்தை சீட்டுக்கட்டுக்களாய் கலைத்து போட்டது. அதோடு மேலும் சில பஞ்சாயத்துக்களும் சேர்ந்துகொள்ள சினிமாவிலிருந்து ஒதுங்கினார் வடிவேலு.

ரீ என்ட்ரி: ஒருவழியாக அவரை சுற்றி இருந்த பஞ்சாயத்துக்கள் எல்லாம் தீர்த்து வைக்கப்பட்ட நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார் அவர். அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் அடுத்ததாக வெளியான மாமன்னன் படத்தில் அவரது கதாபாத்திரம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அவரது நடிப்பை பார்த்த ரசிகர்கள் வடிவேலு என்னும் மகா நடிகன் இன்னும் இறக்கவில்லை என சிலாகித்தனர்.

கெஞ்சிய வடிவேலு: மேலும் இரண்டாவது இன்னிங்ஸ்லில் வேறு மாதிரியான வடிவேலுவை பார்க்கலாம் என்ற நம்பிக்கையையும் மாமன்னன் படம் ரசிகர்களுக்கு கொடுத்தது. இந்த சூழலில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தயாரிப்பாளரிடம் வடிவேலு கெஞ்சிய விஷயம் தெரியவந்திருக்கிறது. அதாவது தெய்வ வாக்கு என்ற படத்தில் வடிவேலு நடித்திருக்கிறார்.

அந்தப் படத்தில் நடித்தபோது வடிவேலு தனது கரியரின் ஆரம்பகட்டத்தில் இருந்தார். ஷூட்டிங்கில் தயாரிப்பாளர் செலவில் அந்தப் படத்தில் நடித்த சில நடிகர்களுக்கு சிகரெட் வாங்கி கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனை பார்த்த வடிவேலு தயாரிப்பு நிர்வாகியிடம் சென்று எனக்கும் ஒரு சிகரெட் கிடைக்குமா என்று கேட்டிருக்கிறார்.

உடனடியாக அந்த நிர்வாகி தயாரிப்பாளரிடம் சென்று வடிவேலுவும் சிகரெட் கேட்கிறார் என்ன செய்யட்டும் என சொல்லியிருக்கிறார். இதனை கவனித்த வடிவேலு அந்தத் தயாரிப்பாளரிடம் சென்று, 'இல்லை அண்ணே இதுவரை பீடிதான் நான் பிடித்திருக்கிறேன். சிகரெட் பிடித்ததே இல்லை. ஆசையா இருக்கும். அதான் கேட்டேன். வாங்கி கொடுக்க இஷ்டம் இல்லைனா விட்ருங்க அண்ணே' என சொல்லியிருக்கிறார். இதனை கேட்டு ஃபீல் செய்த தயாரிப்பாளர் உடனடியாக ஒரு சிகரெட்டை வாங்கிக்கொடுக்க சொன்னாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X