Ponniyin Selvan - பொன்னியின் செல்வன் வாய்ப்பை மிஸ் செய்த நடிகர்கள் - யார் யார் தெரியுமா?

சென்னை: பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் நேற்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் பொன்னியின் செல்வன் வாய்ப்பை எந்தெந்த நடிகர்கள் மிஸ் செய்தார்கள் என்பது குறித்து பார்க்கலாம்.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க முதலில் எம்ஜிஆர் முயன்றார். ஆனால் அந்த முயற்சி நிறைவேறவில்லை. அதனையடுத்து அவர் சினிமாவிலிருந்து ஒதுங்கி அரசியலுக்குள் நுழைந்ததை அடுத்து பொன்னியின் செல்வனை படமாக்கும் உரிமத்தை கமல் ஹாசன் எம்ஜிஆரிடமிருந்து வாங்கினார். ஆனால் கமல் ஹாசனின் முயற்சியும் பெரிதாக பலிக்கவில்லை. இதனால் பொன்னியின் செல்வனை படமாக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

சாத்தியமாக்கிய மணிரத்னம்: பல வருடங்களுக்கு பிறகு அந்தத் திட்டத்தை கையில் எடுத்தார் மணிரத்னம், லைகா நிறுவனம் தயாரிக்க முன்வந்தது. அதன்படி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு, கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்தது. ஐந்து பாகங்கள் கொண்ட பொன்னியின் செல்வன் நாவல் திரைப்படத்திற்காக இரண்டு பாகம் என சுருக்கப்பட்டது.

Here is the details of Which Actors And Actress Missed Ponniyin Selvan Opportunity

பட்டையை கிளப்பிய பாகங்கள்: பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. 500 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலிக்கவும் செய்தது. அதன் இரண்டாம் பாகம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

படக்குழு எதிர்பார்த்தது போலவே இந்தப் பாகத்திற்கும் ரசிகர்களிடமிருந்து டீசண்ட்டான வரவேற்பே கிடைத்திருக்கிறது. இப்படிப்பட்ட இதற்கு முன்னதாகவே மணிரத்னம் பொன்னியின் செல்வனை படமாக்க திட்டம் தீட்டினார். அந்த சமயத்தில் வாய்ப்பை மிஸ் செய்த நடிகர்கள், நடிகைகள் குறித்து பார்க்கலாம்.

Here is the details of Which Actors And Actress Missed Ponniyin Selvan Opportunity

வந்தியத்தேவனாக விஜய்: கடந்த 2009ஆம் ஆண்டே பொன்னியின் செல்வனை மணிரத்னம் படமாக்கவிருக்கிறார் என பரபரப்பாக பேசப்பட்டது. அப்போது வந்தியத்தேவனாக விஜய்யை நடிக்க வைக்க மணிரத்னம் முடிவு செய்திருந்தார். ஆனால் ஏதோ காரணங்களால் படம் ஆரம்பிக்கப்படாமல் போனதால் விஜய்யால் அந்த கேரக்டரில் நடிக்க முடியவில்லை. இது விஜய் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமே.

Here is the details of Which Actors And Actress Missed Ponniyin Selvan Opportunity

அருண்மொழி சோழனாக மகேஷ் பாபு: அதேபோல் தற்போது ஜெயம் ரவி ஏற்றிருக்கும் அருண்மொழி சோழன் கதாபாத்திரத்திற்கு மணிரத்னத்தின் முதல் சாய்ஸ் மகேஷ் பாபு. ஆனால் அவராலும் நடிக்க முடியாமல் போய்விட்டது. ஜெயம் ரவி இப்போது அந்த கதாபாத்திரத்தை ஏற்று பின்னி பெடலெடுத்திருப்பது பாராட்டுக்குரிய விஷயம்.

Here is the details of Which Actors And Actress Missed Ponniyin Selvan Opportunity

நந்தினியாக் அனுஷ்கா: பொன்னியின் செல்வன் நாவலில் மிக மிக முக்கியமான கதாபாத்திரங்களில் ஒன்று நந்தினி. கல்கியின் புனைவு கதாபாத்திரமான நந்தினிக்குள் அழகும், விஷமும் ஒருசேர பரவியிருக்கும். அப்படிப்பட்ட கதாபாத்திரத்திற்கு முதலில் அனுஷ்காவை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தாராம் மணி. ஆனால் அவரால் நடிக்க முடியாமல் போனது. அதனையடுத்து ஐஸ்வர்யா ராயை கமிட் செய்து அந்த ரோலை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச்சென்றுவிட்டார் மணிரத்னம்.

Here is the details of Which Actors And Actress Missed Ponniyin Selvan Opportunity

பூங்குழலியாக கீர்த்தி சுரேஷ்: அதேபோல் பூங்குழலில் கதாபாத்திரமும் பொன்னிய்ன் செல்வனில் முக்கியமான பாத்திரம். வந்தியத்தேவனுக்கு உதவியாகவும், அருண்மொழி சோழனை மீட்பதில் உதவியாகவும் நாவல் நெடுக பயணிக்கும். அந்தக் கதாபாத்திரத்தில் முதலில் கீர்த்தி சுரேஷ்தான் நடிக்க வேண்டியதாம். ஆனால் ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்ததால் அதற்காக பொன்னியின் செல்வனை வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X