Babloo - அப்பாவுக்கு நேர்ந்த அசிங்கம்.. இட்லி கேட்டதால் அடி... பப்லு பட்ட அவமானம் இவ்வளவா?.. மறுபக்கம் உள்ளே
சென்னை: Babloo Prithveeraj (பப்லு பிருத்விராஜ்) நடிகர் பப்லு பிருத்விராஜ் சினிமாவில் பட்ட அவமானங்கள் பற்றி தெரியவந்திருக்கிறது.
நான்கு சுவர்கள் படத்தின் மூலம் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பப்லு பிருத்விராஜ். அந்தப் படத்துக்கு பிறகு சிறு வயதிலேயே பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், ரஜினிகாந்த், கமல் ஹாசன் என பல ஹீரோக்களுடன் நடித்திருக்கிறார் பிருத்விராஜ்.

சினிமா ஆசை: பப்லுவுக்கு சினிமா ஆசை இருந்ததற்கு முன்பே அவரது தந்தைக்கு சினிமா ஆசை இருந்தது. இன்னும் சொல்லப்போனால் காதலிக்க நேரமில்லை படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது அவர்தான். ஆனால் அவரது கண்ணில் ஒரு குறைபாடு இருந்ததால் அதிலிருந்து நீக்கப்பட்டார். இதை மிகப்பெரும் அசிங்கமாக உணர்ந்த அவரது தந்தை பிறகு போக்குவரத்து காவல் துறையில் உதவி ஆய்வாளராக மாறிவிட்டார் . தன்னை அசிங்கப்படுத்திய சினிமாவுக்குள் மகனை கொண்டு வந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து எப்படியோ பப்லுவை உள்ளே கொண்டு வந்துவிட்டார்.
முன்னணி நடிகர்: குழந்தை நட்சத்திரமாக இருந்த பப்லு வளர்ந்த பிறகும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன்படி அவர் நடித்த பல படங்கள் ஹிட்டாகின. பாண்டிநாட்டு தங்கம், சிகரம், அழகன் என தொடர்ந்து பல படங்களில் நடித்தார். முக்கியமாக 90களில் ஃபேமஸான நடிகராக வலம் வந்தார் அவர். சூழல் இப்படி இருக்க பீனா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
விவாகரத்து; லிவிங் டூ கெதர்: பீனாவுக்கும் பப்லுவுக்கும் ஒரு மகன் இருக்கிறார். அவருக்கு ஆட்டிஸம் குறைபாடு இருக்கிறது. இருந்தாலும் இரண்டு பேரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். பீனாவை பிரிந்த அவர் ஷீத்தல் என்பவருடன் லிவிங் டூ கெதரில் இருந்தார். ஆனால் அந்த ரிலேஷன்ஷிப்பும் முடிந்துவிட்டதாக கடந்த சில நாட்களாகவே டாக் ஆஃப் தி டவுனாக இருக்கிறார்.
அனிமல்: பிருத்விராஜ் சமீபத்தில் வெளியான அனிமல் படத்தில் நடித்தார். அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெய்ன் படத்தில் நடித்துவருகிறார். மேலும் சில படங்களிலும் வெப் சீரிஸ்களிலும் நடித்துவருகிறார் அவர். இந்த சூழலில் அவர் சினிமாவில் பட்ட அவமானம் குறித்து தெரியவந்திருக்கிறது. அதாவது வானமே எல்லை படத்தின் வாய்ப்பு கேட்டு கே.பாலசந்தர் ஆஃபிஸ் சென்றிருக்கிறார் பப்லு.
படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துவிட்டதாம். அப்போது அவருக்கு சாப்பாடு போடப்பட்டிருக்கிறது. காலை உணவாக 100 இட்லிகள் சாப்பிடும் பழக்கம் உடைய அவர் அங்கு சாப்பிடும்போது கூடுதலாக இட்லி கேட்டிருக்கிறார். 6 இட்லி வரை வைத்த ஒருவர் ஒருகட்டத்தில் பப்லுவை ஓங்கி அறைந்து மற்றவர்கள் எல்லாம் சாப்பிட வேண்டாமா நீ மட்டும் சாப்பிட்டால் போதுமா என கேட்டாராம். இது பப்லுவுக்கு பெரிய அவமானமாக போய்விட்டதாம். இதனை அவரே ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











