அந்த இயக்குநருக்காக கொள்கையை தளர்த்திய அஜித்.. காரணம் கமல் ஹாசன்
சென்னை: நடிகர் அஜித்குமார் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவர் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் அந்தப் படத்துக்கான பூஜையும் சமீபத்தில் சென்னையில் போடப்பட்டதாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் தன்னுடைய ஃபேவரைட் இயக்குநருக்காக தனது கொள்கையை அஜித்குமார் தளர்த்திக்கொண்ட விஷயம் தெரியவந்திருக்கிறது.
அஜித்குமார் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். மகிழ் திருமேனி படத்தை இயக்குகிறார். படத்தின் பெயர் வைக்கப்பட்டதோடு சரி அதற்கு பிறகு படத்திலிருந்து வேறு எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. பொங்கல் பண்டிகையையொட்டி ரசிகர்கள் விடாமுயற்சி அப்டேட்டை எதிர்பார்த்திருந்தனர். ஆனால் யானை பசிக்கு சோள பொறி போன்று விடாமுயற்சியின் ஓடிடி உரிமை குறித்த அப்டேட்டை மட்டும் வெளியிட்டுவிட்டு அமைதியாகிக்கொண்டது லைகா நிறுவனம்.

நட்சத்திர பட்டாளம்: இந்தப் படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஆக்ஷன் கதைகளை இயக்குவதில் மகிழ் திருமேனி கில்லாடி என்பதால் இதில் என்ன மாதிரியான ஆக்ஷனை காட்சிப்படுத்தியிருக்கிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறார்கள். படத்தில் இன்ன்ம் 40 சதவீதம் மட்டுமே ஷூட்டிங் இருப்பதாக கூறப்படுகிறது. அநேகமாக படமானது ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜர்பைஜான் ஷெட்யூல் முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித் பாலிசி: அடுத்ததாக அஜித்குமார் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்றும் அதற்கான பூஜை போடப்பட்டுவிட்டதாகவும் சமீபத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது. இப்படி அஜித்தை பற்றியும் அவரது படங்கள் பற்றியும் எவ்வளவுதான் பரபரப்பாக, திடீர் திடீரென தகவல்கள் வெளியானாலும் அஜித்தின் பாலிசி என்பது எப்போதும் அமைதி காத்திருப்பதுதான். பத்திரிகையாளர்களை சந்திப்பது, படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் கலந்துகொள்வது என்பதை அறவே விரும்பாதவர்.
அதேபோல் தன்னை வைத்து படம் இயக்கும் ஒரு இயக்குநர் தன்னுடைய படத்தை முடித்துவிட்டுத்தான் அடுத்த படத்துக்கு செல்ல வேண்டும் என்ற பாலிசியையும் கொண்டிருப்பவர் அவர். ஆனால் அந்த பாலிசியை தனது ஃபேவரைட் இயக்குநர் சரணுக்காக விட்டுக்கொடுத்த சம்பவம் தெரியவந்திருக்கிறது. அதாவது காதல் மன்னன், அமர்க்களம் ஆகிய இரண்டு வெற்றி படங்கள் கொடுத்த பிறகு மூன்றாவதாக அஜித்துடன் சேர்ந்து அட்டகாசம் பட பணிகளை ஆரம்பித்தார் சரண்.
அந்தச் சமயத்தில் கமல் ஹாசனை வைத்து வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு சரணுக்கு கிடைத்திருக்கிறது. ஆனால் அஜித் படத்தை முடிக்காமல் எப்படி செல்வது என்று யோசனையில் இருந்திருக்கிறார் சரண். இதனை தெரிந்துகொண்ட அஜித்குமாரோ, சரணிடம் சென்று, கமல் ஹாசனை வைத்து இயக்கும் வாய்ப்பு எளிதாக கிடைக்காது. அதனால் நீங்கள் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தை முடித்துவிட்டு வாருங்கள். அதுவரை நான் கத்திருக்கிறேன் என்று சொல்லி அனுப்பிவைத்தாராம். பிறகு மூன்று மாதங்கள் கழித்து அட்டகாசம் படத்தை ஆரம்பித்திருக்கிறார் சரண்.


Click it and Unblock the Notifications











