Vikram - விக்ரமை நம்பி ஏமாந்த இயக்குநர்?.. 1 இல்ல 2 இல்ல 3 வருஷமாம்.. என்ன சியான் இது? ரசிகர்கள் கேள்வி

சென்னை: Vikram (விக்ரம்) இயக்குநர் அமீரை நடிகர் விக்ரம் 3 வருடங்கள் காத்திருக்க வைத்ததாக கூறப்படுகிறது.

பாலாவிடம் உதவி இயக்குநராக இருந்த அமீர் மௌனம் பேசியதே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். வழக்கம்போல முதல் பட இயக்குநர்கள் எப்படி அப்போது காதல் ஜானரை தொடுவார்களோ அதேபோல்தான் மௌனம் பேசியதே படத்தையும் அந்த ஜானரில் எடுத்தார். ஆனால் அதில் அமீரின் மேக்கிங் பட்டாசாக இருந்தது. படமும் வணிக ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது.

Here is the Unknown details about Chiyaan Vikram And Director Ameer

சொந்த தயாரிப்பு: முதல் படம் நல்ல வெற்றி பெற்றாலும் அமீர் எதிர்பார்த்தபடி அடுத்த படத்துக்கு பணம் போட எந்த தயாரிப்பாளரும் முன்வரவில்லை. ஏனெனில் அவர் இயக்கிய இரண்டாவது கதை மீது பெரிதாக யாருக்கும் நம்பிக்கை இல்லை. ஆனால் கதை மேல் மட்டும் நம்பிக்கை வைத்து அந்தப் படத்தை தானே தயாரித்தார் அமீர். ஆனால் அவர் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கவில்லை. அதனால் அவருகு கடன் நெருக்கடியும் ஏற்பட்டது.

பருத்திவீரன்: சூழல் இப்படி இருக்க கார்த்தியை வைத்து பருத்திவீரன் படத்தை இயக்கினார் அமீர்..அந்தப் படம்தான் கார்த்திக்கு முதல் படம். தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் பருத்திவீரன் திரைப்படம் எப்போதுமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி கோலிவுட்டில் கிராமத்து கதைகளுக்கான ட்ரெண்டை மீண்டும் செட் செய்தது அந்தப் படம் என்பது கவனிக்கத்தக்கது.

நடிப்பு: பருத்திவீரன் வெற்றிக்கு பிறகு அவர் இயக்கிய ஆதிபகவான் உள்ளிட்ட படங்கள் சரியாக போகவில்லை. இடையில் யோகி படத்தை தயாரித்து நஷ்டமும் அடைந்திருந்தார். இது ஒருபக்கம் இருக்க மறுபக்கம் சூர்யா தரப்போடு பருத்திவீரன் படத்தால் பிரச்னையும் ஏற்பட்டது. அதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. சூழல் இப்படி இருக்க தற்போது அவர் நடிப்பில் தீவிர கவனம் செலுத்திவருகிறார். மேலும் மாயவலை என்ற படத்தை தயாரிக்கவும் செய்திருக்கிறார்.

காத்திருக்க வைத்த வைத்த விக்ரம்: இந்த நிலையில் அமீரின் முதல் பட அனுபவம் குறித்து தெரிய வந்திருக்கிறது. அதாவது சேது படத்தின்போதே விக்ரமுக்கும் அமீருக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டுவிட்டது. அதனையடுத்து தான் முதல் படத்தை இயக்கும்போது விக்ரமை ஹீரோவாக்கலாம் என்ற முடிவில் இருந்தாராம் அமீர். அதன்படி மௌனம் பேசியதே படத்தின் கதையையும் விக்ரமிடம்தான் முதலில் சொன்னாராம்.

ஆனால் அந்தக் கதை மீதும் அமீர் மீதும் நம்பிக்கை இல்லாததால் ஒத்துக்கொள்வதில் இழுத்தடித்துக்கொண்டே இருந்தாராம் விக்ரம். இப்படி ஒன்று அல்ல இரண்டு அல்ல மூன்று வருடங்கள்வரை இழுத்தடித்தாராம். இதனால் டென்ஷனான அமீர் நந்தா படத்தில் பணியாற்றியபோது சூர்யாவுடன் ஏற்பட்ட பழக்கத்தை வைத்து அவரிடம் கதை சொல்லி மௌனம் பேசியதே படத்தில் நடிக்க வைத்தாராம். இந்தத் தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் எதுவாக இருந்தாலும் அமீரிடம் விக்ரம் ஓபனாக சொல்லியிருக்கலாம். இப்படி இழுத்தடித்து கடைசியில் முடியாது என்று சொல்லியிருக்க வேண்டாமே சியான் என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X