Senthil - ரஜினியே பண்ணிடுவார்.. நீ என்ன பண்ணுவ.. கிண்டலடித்த கவுண்டமணி.. சோகத்துடன் சரக்கு போட்ட செந்தில்

சென்னை: நடிகர் செந்தில் 80களில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர். கவுண்டமணியுடன் அவர் சேர்ந்து செய்த காமெடிகள் அனைத்துமே மிகப்பெரிய இன்றுவரை ரசிகர்களால் அதிக அளவு கொண்டாடப்படக்கூடியது. செந்திலின் உடல் மொழியும், அவரது டயலாக் டெலிவிரியும் பாமரத்தனமாக இருந்ததன் காரணத்தாலேயே அவர் பெரும்பாலானோரால் ஏற்றுக்கொள்ளப்பட்டார். இந்தச் சூழலில் அவர் பற்றிய ஒரு விஷயம் தெரியவந்திருக்கிறது.

முதுகுளத்தூர் அருகே இளஞ்சம்பூர் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர் செந்தில். அவருக்கு 13 வயது இருக்கும்போது அவரது தந்தை திட்டியதால் கிராமத்திலிருந்து சென்னைக்கு கிளம்பிவந்தவர். வந்தவருக்கு ஒரு ஆயில் மார்க்கெட்டில் வேலை கிடைத்தது. அதனையடுத்து பிரைவே வைன் ஷாப்பில் சப்ளையர் வேலை கிடைத்தது. நாட்கள் அப்படியே நகர்ந்துகொண்டிருக்க நாடக குழுவில் இடம் கிடைத்தது. அந்தக் குழுவில் சிறிய சிறிய வேடங்களை ஏற்று நடித்துக்கொண்டிருந்தார் செந்தில்.

Here is the unknown Details about Comedy Actor Senthil

சினிமா வாய்ப்பு: தொடர்ந்து நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்த அவருக்கு ஒரு கோயில் இரு தீபங்கள் என்ற படத்தின் மூலம் சினிமா வாய்ப்பு கிடைக்க அதில் சிறிய ரோலில் நடித்தார். அதனைத் தொடர்ந்து கிளிஞ்சல்கள், மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா, கோபுரங்கள் சாய்வதில்லை உள்ளிட்ட பட வாய்ப்புகள் கிடைத்தன. இருந்தாலும் அவர் எதிர்பார்த்தபடியான பெயர் செந்திலுக்கு கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட சூழலில் மலையூர் மம்பட்டியான் படத்தில் நடித்ததன் மூலம் பெரும் வெளிச்சம் கிடைத்தது.

கவுண்டமணி காம்போ: அதனையடுத்து கவுண்டமணியுடன் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார் செந்தில். இரண்டு பேரின் காம்போவும் அதிரிபுதிரி ஹிட்டடித்தது. வைதேகி காத்திருந்தாள், கரகாட்டக்காரன், சின்னக்கவுண்டர் என அவர்கள் நடித்த ஏராளமான படங்கள் இன்றுவரை பலரது ஃபேவரைட். கவுண்டமணி ஒருபக்கம் செந்திலை கவுண்ட்டர் அடிப்பது, உடலில் அடிப்பதும் என இருந்தாலும் செந்தில் எந்த ஈகோவும் பார்க்காமல் நடித்து தன்னையும் ஸ்கோர் செய்துகொண்டிருந்தார்.

வெகுளித்தனமான பேச்சு: செந்திலின் பலங்களில் ஒன்றே அவரது வெகுளித்தனமான பேச்சும், முகமும்தான். ஊர்க்காரர் ஒருவர் நடிப்பது போன்று இருக்கும் அவரது நடிப்பை பார்த்த ரசிகர்கள் அவரை தங்களில் ஒருவராகவே ஏற்றுக்கொண்டனர். முக்கியமாக கவுண்டமணியிடம் அவர் கேட்கும் சந்தேகங்கள், அவ்வப்போது கவுண்டமணியை காண்டாக்கும்படியான வசனங்கள் எல்லாம் சிரிப்பு சரவெடியை பற்ற வைப்பவை. அதேபோல் கவுண்டமணியும், செந்திலும் பிரிந்து சில படங்களில் நடித்தார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி காமெடிகள் ஹிட் ஆகவில்லை. எனவே மீண்டும் இரண்டு பேரும் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார்கள்.

ரீ எண்ட்ரி: ஒருகட்டத்தில் பட வாய்ப்புகள் குறைந்ததன் காரணமாக சினிமாவிலிருந்து ஒதுங்கினார். பிறகு பல வருடங்கள் கழித்து தானா சேர்ந்த கூட்டம் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். தற்போது விஷ்ணு விஷால், விக்ராந்த், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் நடித்து ஐஸ்வர்யா இயக்கியிருக்கும் லால் சலாம் படத்தில் நடித்திருக்கிறார். கண்டிப்பாக இந்தப் படத்தில் செந்திலின் நடிப்பு பலத்த வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கவுண்டமணி கிண்டலடித்ததால் சோகத்துடன் செந்தில் மது அருந்திய விஷயம் தெரியவந்திருக்கிறது.

என்ன நடந்தது: அதாவது கவுண்டமணியும், செந்திலும் பிரிந்து நடித்த காலகட்டத்தில் ரஜினி நடித்த வீரா படத்தில் கமிட்டானார் செந்தில். படப்படிப்பு வெளிமாநிலத்தில் நடந்திருக்கிறது. அப்போது செந்திலிடம் பேசுவதற்காக கவுண்டமணி ஃபோன் செய்திருக்கிறார். ஃபோன் செய்தவர், 'என்ன செந்தில் எங்க இருக்க' என கேட்க; அதற்கு செந்தில், 'வீரானு ஒரு படம் ரஜினிகாந்த் ஹீரோ. அதுல நடிக்க வந்திருக்கேன் அண்ணே' என்று சொல்லியிருக்கிறார்.

கவுண்ட்டர் கொடுத்த கவுண்ட மணி: அதை கேட்ட கவுண்டமணி, ஏன் ப்பா ரஜினியேதான் காமெடி பண்ணிடுவாரே. நீ அந்தப் படத்துல என்ன பண்ணப்போற என்று கிண்டலடித்தாராம். இதனால் விரக்தியான செந்தில், தனது ரூமில் சோகப்பாடல்களை ஒலிக்கவிட்டு மது அருந்திக்கொண்டிருந்தாராம். அவருக்கு பக்கத்து அறையில்தான் ரஜினிகாந்த்தும் தங்கியிருந்திருக்கிறார். சத்தம் கேட்டு செந்தில் ரூமுக்கு சென்றிருக்கிறார் ரஜினி. அவரை பார்த்ததும் செந்தில் மது கோப்பைகளை மறைத்துவிட்டு, தட்டில் இருந்த வறுத்த கறியை நீட்டி இந்தாங்க சார் இது உடம்புக்கு நல்லது என்றாராம். தன்னை பார்த்து கூச்சப்படுகிறார் என்பதை உணர்ந்துகொண்ட ரஜினி அடுத்து தனது ரூமை மாற்றி வேறு ஃப்ளோருக்கு சென்றுவிட்டாராம். இந்தத் தகவலை பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஒரு வீடியோவில் பகிர்ந்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X