அம்மா வேண்டவே வேண்டாம்.. தமிழன் படத்தில் நடிப்பதற்கு அழுத பிரியங்கா சோப்ரா.. என்ன நடந்தது?
சென்னை: நடிகை பிரியங்கா சோப்ரா தமிழன் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர் தொடர்ந்து ஹாலிவுட்டில் நடித்தார். அந்த சமயத்தில் பாடகர் நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பிரியங்காவைவிட ஜோனஸ் பத்து வயது சிறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு மால்டி என்ற மகள் இருக்கிறார். இந்தச் சூழலில் பிரியங்கா சோப்ரா குறித்து ஒரு விஷயம் தெரியவந்திருக்கிறது.
பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக இருந்தவர் பிரியங்கா சோப்ரா. மாடலிங்கில் நுழைந்த அவர் கடந்த 2000ஆம் ஆண்டு நடந்த மிஸ் வேர்ல்ட் போட்டியில் கலந்துகொண்டு வெற்றியாளரானார். அதிலிருந்து பிரியங்கா சோப்ராவின் மீது பலரது கவனம் விழுந்தது. மேலும் சினிமாவில் நுழைந்து பெரும் ரவுண்டு வருவார் என்றும் கணிக்கப்பட்டது.

தமிழன் பிரியங்கா சோப்ரா: அதன்படி முதல்முதலாக விஜய்யுடன் தமிழன் படத்தில் அறிமுகமானார் பிரியங்கா சோப்ரா. தமிழன் படத்தை கூடுதல் ஸ்டார் வேல்யூவுடன் கொடுக்க நினைத்த அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஜிவி, மிஸ் வேர்ல்ட் பட்டம் வென்று சென்சேஷனலாக இருர்ந்த பிரியங்காவை ஹீரோயினாக தேர்வு செய்தார். படம் சுமாரான ஹிட் என்றாலும் உலக அழகி நடித்திருக்கிறார் என்ற பெரும் விளம்பரம் அந்தப் படத்துக்கு பிரியங்கா சோப்ரா மூலம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட்டில் பிரியங்கா: கோலிவுட்டில்தான் தனது கரியரை ஆரம்பித்தாலும் அதன் பிறகு ஏதோ காரணங்களால் தமிழில் அவர் நடிக்கவே இல்லை. அவர் 2003ஆம் ஆண்டு தி ஹீரோ - லவ் ஸ்டோரி ஆஃப் தி ஸ்பை என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக என்ட்ரி ஆனார். அதன் பிறகு அவர் நடித்த படங்கள் ஹிட்டடிக்க பாலிவுட்டில் அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. இதன் காரணமாக முன்னணி நடிகையாக மாறினார் ப்ரியங்கா.
பாலிவுட் டூ ஹாலிவுட்: பாலிவுட்டில் கலக்கிய ப்ரியங்கா சோப்ரா குவாண்ட்டிகோ என்ற தொடர் மூலம் ஹாலிவுட்டில் தடம் பதித்தார். அங்கும் தனது திறமையை அவர் நிரூபித்ததால் ஹாலிவுட்டில் செட்டில் ஆனார். மேலும் நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறார். அவர் கடைசியாக சிட்டாடல் என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார். இந்தியாவிலிருந்து ஹாலிவுட் சென்று வெற்றிக்கொடி நாட்டிய வெகு சிலர்களில் பிரியங்கா முதன்மையானவர் என்ற பெருமையையும் அவர் பெற்றிருக்கிறார்.
அழுத பிரியங்கா சோப்ரா: இந்நிலையில் பிரியங்கா சோப்ரா படங்களில் நடிக்க மாட்டேன் என்று அழுத சம்பவம் தெரியவந்திருக்கிறது. அதாவது, படங்களில் நடிப்பதற்கு முதலில் அவருக்கு விருப்பமே இல்லையாம். தமிழன் பட வாய்ப்பு கிடைத்ததை அவரிடம் அவரது தாய் மது சோப்ரா சொல்லியபோது அழுதுவிட்டாராம் பிரியங்கா சோப்ரா. அழுதுகொண்டே இல்லை அம்மா நான் நடிக்கவில்லை என்று கூறினாராம். ஆனால் அவரது தாய் வற்புறுத்தி கேட்டுக்கொண்டதன் பேரில் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டாராம். இதனை அவரது மது சோப்ரா ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











