Rajinikanth - ரஜினிக்கு சினிமா ஆசை வந்ததற்கு காரணம் அந்தத் தோழிதானா?.. ஆச்சரியமான தகவல் உள்ளே
சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) ரஜினிக்கு முதன்முதலில் எப்போது சினிமா ஆசை வந்தது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
சூப்பர் ஸ்டார் என்ற நாற்காலியில் அமர்ந்திருப்பவர் ரஜினிகாந்த். அவருக்கென்று செலிபிரிட்டிகளிலிருந்து சாமானியர்கள்வரை ரசிகர்களாக இருக்கின்றனர். அவரது நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் மெகா ஹிட்டடித்திருக்கிறது. அதே உற்சாகத்தோடு அடுத்ததாக ஜெய்பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார் ரஜினிகாந்த்.

தலைவர் 171: அதேபோல் இந்தப் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171ஆவது படத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினி. அந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அதன் ஷூட்டிங் மார்ச் அல்லது ஏப்ரலில் தொடங்கவிருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படம் இந்திய அளவில் மெகா ஹிட்டாகும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் இருக்கிறது. ஏனெனில் லோகேஷ் கனகராஜ் தொட்டதெல்லாம் ஹிட் என்பதால் அந்த நம்பிக்கை பெரும்பாலானோரிடம் இருக்கிறது.
நடத்துநர்: ரஜினிகாந்த் அடிப்படையில் ஒரு நடத்துநர் என்பது அனைவருக்கும் தெரிந்தது. கலை தாகத்தோடு அந்த வேலையை உதறிவிட்டு சென்னைக்கு வந்து சினிமா கல்லூரியில் படித்தார். அப்போது பாலசந்தரின் கண்களில் பட்டு மூன்று முடிச்சு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி பிறகு பைரவி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
பயங்கர கஷ்டம்: ரஜினி சென்னை சினிமா கல்லூரியில் பயின்றபோது கடுமையான கஷ்டங்களை அனுபவித்தவர். அப்போதெல்லாம் ரஜினியுடன் பணியாற்றிய நண்பர் ராஜ் பகதூர் மாதா மாதம் அவருக்கு 100 ரூபாய்வரை பணம் அனுப்புவார். அந்த நன்றியை மறக்காத ரஜினிகாந்த் இன்றுவரை ராஜ் பகதூருடன் டச்சில் இருக்கிறார். அதேசமயம் ரஜினியுடனான நட்பை ராஜ் பகதூரும் எந்த இடத்திலும் தவறாக பயன்படுத்திக்கொண்டது இல்லை என்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
புதிய தகவல்: இந்நிலையில் ரஜினிகாந்த்துக்கு முதன்முறையாக சினிமா ஆசை வந்ததற்கான காரணம் குறித்த புதிய தகவல் தெரியவந்திருக்கிறது. அதாவது ரஜினிகாந்த் நடத்துநராக பணியாற்றும்போது அவருக்கு ஒரு தோழி இருந்தாராம். ரஜினியின் வேகம் சுறுசுறுப்பை பார்த்த அவர், உன்னுடைய தோற்றத்துக்கும், ஸ்டைலுக்கும் சினிமாவுக்கு போனால் பெரிய நடிகனாக வருவாய் என கூறி; சென்னை சினிமா கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான விளம்பரத்தை காண்பித்திருக்கிறார்.
இதனையடுத்து இந்த விஷயத்தை ராஜ் பகதூரிடம் ரஜினிகாந்த் சொல்ல; அவருக்கும் ரஜினி நடிகனாக வேண்டும் என்ற ஆசை ஏற்கனவே இருந்ததால் உடனடியாக பணம் கொடுத்து சென்னைக்கு அனுப்பி வைத்தாராம். இந்தத் தகவல்தான் தற்போது இணையத்தில் படு ட்ரெண்டாகிவருகிறது.


Click it and Unblock the Notifications











