Vadivelu - என்னப்பா சௌக்கியமா?.. பிரச்னைக்கு பிறகும் வடிவேலுவை நலம் விசாரித்த விஜயகாந்த்.. ச்ச செம மனுஷன்
சென்னை: வடிவேலு திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறேன் என்ற பெயரில் விஜயகாந்த்தை சரமாரியாக பேசினார். அவரது அந்தப் பேச்சு பலரையும் முகம் சுளிக்க வைத்தது. அப்போதிருந்து விஜயகாந்த்துடனான தொடர்பை முழுவதுமாக துண்டித்துவிட்டார் வடிவேலு. இந்நிலையில் இரண்டு பேருக்கும் இடையே நடந்த ஒரு விஷயம் குறித்து பார்க்கலாம்.
விஜயகாந்த்துக்கு ஏற்பட்ட நுரையீரல் அழற்சி காரணமாக அவர் கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாடையும் சோகக்கடலில் தள்ளியிருக்கிறது. அவரை கடைசியாக பார்ப்பதற்கு தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் இருந்தும் மக்கள் சென்னைக்கு படையெடுக்க ஆரம்பித்தனர்.

பிரபலங்கள் அஞ்சலி: விஜயகாந்த்தின் உடல் தேமுதிக தலைமை அலுவலக வளாகத்தில் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. திரையுலக பிரபலங்களில் விஜய் முதல் இளையராஜாவரை பலரும் நேரில் சென்று விஜயகாந்த்தின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் அவர் பற்றிய நினைவுகளையும் பகிர்ந்துகொண்டனர். விஜய்யோ கண்ணீரே விட்டுவிட்டார். ஆனால் விஜயகாந்த்தால் வளர் நடிகர்களில் ஒருவரான வடிவேலு இறுதி அஞ்சலிக்கு வரவே இல்லை.
இரங்கல் தெரிவித்திருக்கலாம்: விஜயகாந்த் இறப்புக்கு அவர் வந்திருந்தால் தேமுதிக தொண்டர்கள், ரசிகர்கள் எல்லாம் உச்சக்கட்ட உணர்ச்சி கொந்தளிப்பில் இருந்தனர். அந்த மனநிலையில் வடிவேலுவை பார்த்திருந்தால் கண்டிப்பாக தாக்கியிருப்பார்கள் என்று கூறுகிறார்கள் ஒருசிலர். ஆனால் மறுதரப்பினரோ சரி வர வேண்டா. ஒரு இரங்கல் அறிக்கையையாவது வெளியிட்டிருக்கலாமே. இதிலிருந்தே தெரிகிறது வடிவேலுவுக்கு விஜயகாந்த் மீது இருக்கும் வன்மம் என்கிறார்கள்.
இதுதான் பிரச்னை: அதாவது ஒரு கார் நிறுத்தப்பட்ட பிரச்னையில்தான் இருவருக்கும் முட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் விஜயகாந்த்தை வடிவேலு ரொம்பவே தரக்குறைவாக பேசினார். அதற்காக வடிவேலுவுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டதாகவும் ஒரு பேச்சு உண்டு.
விஜயகாந்த்துக்கு வன்மம் இல்லை: வடிவேலு விஜயகாந்த்தை கடுமையாக தாக்கி பேசினாலும் எதிர்க்கட்சி தலைவரான பிறகு வடிவேலு மீது விஜயகாந்த் எந்த வன்மத்தையும் காண்பிக்கவில்லை என்று அவருடன் நெருங்கி பழகியவர்கள் கூறுகிறார்கள். முக்கியமாக வடிவேலு நடிக்காமல் இருந்தபோது அவரை எப்படியாவது நடிக்க சொல்லுங்கப்பா. பிரச்னையை தீர்த்து வையுங்கள் என்று விஜயகாந்த் சொல்லிக்கொண்டே இருந்ததாகவும் பலர் சொல்கிறார்கள்.
என்னப்பா சௌக்கியமா?: இந்நிலையில் விஜயகாந்த்துக்கும் வடிவேலுவுக்கு இடையே நடந்த ஒரு சம்பவம் பற்றி தெரியவந்திருக்கிறது. அதாவது 20011ஆம் ஆண்டுக்கு பிறகு ஒருமுறை வடிவேலு மதுரைக்கு சென்றிருக்கிறார். மதுரை விமான நிலையத்தில் வடிவேலு இருந்தபோது அங்கு விஜயகாந்த்தும் வந்திருக்கிறார். விஜயகாந்த்தை பார்த்துவிட்ட வடிவேலு கண்டுக்காத மாதிரி சென்றிருக்கிறார்.
ஆனால் வடிவேலுவை பார்த்துவிட்ட விஜயகாந்த் எந்த வித ஈகோவும் இல்லாமல் நேராக அவரிடம் சென்று, 'என்னப்பா வடிவேலு செளக்கியமா என கேட்டிருக்கிறார். இதனை எதிர்பார்க்காத வடிவேலு அதிர்ச்சியடைந்து நல்லா இருக்கேன் கேப்டன் என சொல்லிவிட்டு சென்றாராம். இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் இப்படிப்பட்ட மனுஷனைத்தான் வடிவேலு தவறாக பேசினார். மேலும் ஈகோ பார்க்காமல் விஜயகாந்த் இறப்புக்கு வந்திருக்கலாம். அல்லது இரங்கல் அறிக்கையாவது கொடுத்திருக்கலாம் என கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











