அந்த விஷயத்தில் விஜய் எல்லாம் மோசம்.. விஜயகாந்த் அப்படி இல்லை.. பத்திரிகையாளர் சொன்ன ஷாக் நியூஸ்

சென்னை: Vijay (விஜய்) விஜய் குறித்தும் விஜயகாந்த் குறித்தும் பத்திரிகையாளர் ஒருவர் அளித்த பேட்டி இணையத்தில் ட்ரெண்டாகியிருக்கிறது.

விஜயகாந்த் சினிமாவில் நடிக்க வந்தபோது பெரும் போராட்டங்களை சந்தித்தார். வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்தான் என்றாலும் தனது சொந்த காலில் நின்றே ஆக வேண்டும் என்ற வெறியில் எந்த சொகுசையும் அனுபவிக்காமல் ரொம்பவே கஷ்டப்பட்டவர். ஒருவழியாக பட்ட கஷ்டத்துக்கெல்லாம் விமோசனமாக சினிமாவில் வென்று உயர்ந்த இடத்துக்கு சென்றார்.

Here is the unknown Details about Vijay And Vijayakanth

கறுப்பு எம்ஜிஆர்: விஜயகாந்த்தை பொறுத்தவரை தான் வென்றுவிட்டோம் அது போதும் என்று மட்டும் நினைக்காமல் கஷ்டப்பட்ட பெரும்பாலானோருக்கு உதவியதுண்டு. அவரது அலுவலகம் சென்றால் போது வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு வரலாம் என்ற நிலைதான் நிலவியது. விஜயகாந்த் இன்றுவரை அனைவராலும் மதிக்கப்படுவதற்கு அதுவும் ஒரு காரணம். உணவு மட்டுமின்றி பொருளாதார ரீதியாகவும் பல உதவிகளை பலருக்கு செய்திருக்கிறார்.

உணர்வு: வெறும் நடிப்போடு நிறுத்திக்கொள்ளாமல் தமிழ் இன உணர்வு அதிகம் உள்ளவர் விஜயகாந்த். ஈழ படுகொலையை கண்டித்து முதன்முறையாக விஜயகாந்த் தலைமையில்தான் தமிழ் நடிகர்கள் உண்ணாவிரதம் இருந்து போராட்டம் நடத்தினர். அதேபோல் அந்த உணர்வின் வெளிப்பாடாகத்தான் தனது மகனுக்கு பிரபாகரன் என்றும் பெயர் வைத்தார் விஜயகாந்த்.

நெய்வேலி போராட்டம்: அதேபோல் விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்தபோதுதான் கர்நாடகத்துக்கு மின்சாரம் வழங்கக்கூடாது என்று நெய்வேலியில் 2002ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக போராட்டமும் நடைபெற்றது. அதை மிக சிறப்பாக ஒருங்கிணைத்து தமிழ் சினிமா நடிகர்களின் உணர்வுகளை வெளிக்காட்ட செய்தார். தற்போது அந்த சமயத்தில் நடந்த ஒரு சம்பவம் குறித்து தெரியவந்திருக்கிறது.

என்ன நடந்தது?: அதாவது, நெய்வேலி போராட்டத்தில் கலந்துகொள்ள செல்வதற்காக நடிகர்கள் எல்லோரும் நுங்கம்பாக்கத்தில் ஒன்றாக கூடியிருந்தார்களாம். அங்கிருந்து எல்லோரும் புறப்பட தயாராக இருந்த சூழலில் பத்திரிகையாளர்களும் அங்கு கூடியிருந்தனராம். அப்போது விஜயகாந்த் தன்னுடைய காரில் வந்திருக்கிறார். அப்போது பத்திரிகையாளர்களை பார்த்துவிட்ட விஜயகாந்த் உடனடியாக கேட்டில் இருந்தவர்களிடம், 'முதலில் பத்திரிகையாளர்களை உள்ளே அனுப்புங்கள்' என்று கூறி அவர்களுக்கு பின்னால்தான் அவர் வந்தாராம்.

நடிகர்களிலேயே பத்திரிகையாளர்களிடம் முறையாக நடந்து கொள்வது விஜயகாந்த் மட்டும்தானாம். விஜய் எல்லாம் பத்திரிகையாளர்களை பார்த்தாலே கண்ணாடியை ஏற்றிவிட்டு காரில் பறந்துவிடுவாராம். இந்தத் தகவலை பத்திரிகையாளர் ஒருவர் பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X