Vijayakanth - நீங்கள் இப்படி செய்யலாமா டைரக்டரே..எஸ்.ஏ.சந்திரசேகரிடம் வீடு தேடி சென்று சண்டை போட்ட விஜயகாந்த்

சென்னை: விஜயகாந்த்தும், எஸ்.ஏ.சந்திரசேகரும் ரொம்பவே நெருக்கமானவர்கள். இரண்டு பேரும் இணைந்து பத்துக்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியிருக்கிறார்கள். அவற்றில் பெரும்பாலான படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பழக்கத்தின் காரணமாகத்தான் செந்தூரப்பாண்டி படத்தில் விஜயகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்துக்கொடுத்தார்.

நுரையீரல் அழற்சி காரணமாக கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் தள்ளியது. நல்ல மனிதர் போய்விட்டாரே; உதவும் குணம் படைத்த ஒருவர் போய்விட்டாரே என்று பலரும் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திவருகின்றனர். திரையுலக பிரபலங்களும் நேரில் சென்று விஜயகாந்த்தின் உடலுக்கு தங்களது இறுதி அஞ்சலியை செலுத்துகின்றனர்.

 Here is the unknown details about Vijayakanth And S.A.Chandrasekhar Relationship

விஜய் நேரில் அஞ்சலி: விஜயகாந்த்தின் இறப்பை தெரிந்துகொண்ட விஜய் தளபதி 68 ஷூடிங்கை கேன்சல் செய்துவிட்டு நள்ளிரவு சென்னைக்கு வந்து தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது சில நொடிகள் விஜயகாந்த்தின் உடலை பார்த்தபடியே நின்ற விஜய் ஒருகட்டத்தில் கண் கலங்கிவிட்டார். அது அங்கிருந்த ரசிகர்களையும், குடும்பத்தினரையும் மேற்கொண்டு உருக செய்தது. இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் எங்கள் தளபதி நன்றி மறந்தவர் இல்லை என கமெண்ட்ஸ் செய்தனர். இதற்கிடையே விஜயகாந்த்தின் உடல் தேமுதிக தலைமை அலுவலக வளாகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

செந்தூரப்பாண்டி: விஜய் தனது கரியரின் ஆரம்பத்தில் தடுமாறிக்கொண்டிருந்தபோது அவரது வளர்ச்சிக்காக விஜயகாந்த் உறுதுணையாக இருந்தார். அதுவும் தன்னுடைய 100ஆவது படமான கேப்டன் பிரபாகரன் படம் வெளியாகி மெகா ஹிட்டடித்தது. அதற்கு அடுத்து அவர் நடித்த படங்களும் மெகா ஹிட்டானது. ஆனால் அந்தக்காலக்கட்டத்தில் விஜய்க்காக செந்தூரப்பாண்டி படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துக்கொடுத்தார் விஜயகாந்த். அதன் மூலம் விஜய்க்கு பிரபல்யம் கிடைத்தது. 100ஆவது படம் மெகா ஹிட்டாகிவிட்டால் எந்த ஹீரோவும் வளர்ந்துவரும் ஹீரோவுக்காக கெஸ்ட் ரோலில் நடித்துக்கொடுக்கமாட்டார். ஏன் விஜய்யே அதை செய்வார் என்பதற்கு உறுதியில்லை.

சண்டை போட்ட விஜயகாந்த்: செந்தூரப்பாண்டி படத்தில் விஜயகாந்த் நடித்ததால்தான் அந்தப் படம் பலரிடம் சென்று சேர எளிமையாக இருந்தது என்று விஜய்யும் ஒரு பேட்டியில் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் படத்தின்போது நடந்த இன்னொரு சம்பவமும் தெரியவந்திருக்கிறது. அதாவது செந்தூரப்பாண்டி படத்துக்காக விஜயகாந்த் மொத்தம் 15 நாட்களுக்கும் மேல் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். ஆனால் அதற்காக சம்பளமே வாங்கவில்லையாம்.

ஆனால் விஜயகாந்த்தின் வீட்டுக்கு அருகே இருக்கும் இடத்தை அவருடைய பெயரில் பதிவு செய்து பத்திரத்தை பிரேமலதாவிடம் கொடுத்துவிட்டு வந்தாராம். இதனை தெரிந்துகொண்ட விஜயகாந்த் உடனடியாக எஸ்.ஏ.சியிடம் சென்று, 'எனக்கு நீங்கள் சம்பளம் கொடுக்கலாமா?' என சண்டை போட்டாராம். அதற்கு சந்திரசேகரோ 'நீ எனக்கு உதவினாய். நான் சம்பாதித்துவிட்டேன். உனக்கு திருப்பி செய்வது எனது கடமை என சொல்லி விஜயகாந்த்தை சமாதானப்படுத்தினாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X