Vijayakanth - இங்க பாருங்க நான் சாகக்கூடாது.. விஜயகாந்த் சொன்ன விஷயம் இதுதான்.. வெளியான சீக்ரெட்

சென்னை: நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உயிரிழந்துவிட்டார். அவரது உடல் இன்று மாலை தேமுதிக கட்சியின் அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. கடைசியாக அவரது முகத்தை பார்த்துவிடுவதற்காக தமிழ்நாடு முழுவதிலும் இருந்து மக்கள் சென்னைக்கு செல்ல ஆரம்பித்திருக்கின்றனர்.

ரசிகர்களின் பேரன்பை சம்பாதித்தவர் விஜயகாந்த். பார்ப்பதற்கு எளிய தோற்றத்தில் இருந்ததாலோ என்னவோ அவரை மக்கள் தங்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டார்கள். அதனால்தான் அவரால் தமிழ் சினிமா ஹீரோக்கள் ரேஸில் 80கள்,90களில் ரஜினி, கமலுக்கு அடுத்த நிலையில் நிற்க முடிந்தது. மூன்றாவது நிலையில் இருந்தாலும் ரசிகர்கள் மனதில் எப்போதும் முதல் நிலையில் இருந்தார் அவர். முக்கியமாக கிராமத்து மக்கள் மனதில் விஜயகாந்த்தான் முதலிடம்.

Here is the Unknown Details about Vijayakanths Ramana Movie

பெரும் செல்வாக்கு: மக்களிடம் அவருக்கு பெரிய செல்வாக்கு இருந்தது. அதனால்தான் கருணாநிதி, ஜெயலலிதா ஆக்டிவ்வாக இருந்தபோது தைரியமாக அவரால் அரசியலுக்கு வர முடிந்தது. முக்கியமாக தனித்து போட்டியிட்டு தனது பலத்தை மற்றவர்களுக்கு உணர்த்த முடிந்தது. 2011ஆம் ஆண்டு தேர்தலில் வென்று எதிர்க்கட்சி தலைவராக இருந்து; சில காரணங்களால் அரசியலில் சறுக்கலை சந்தித்தார்.

உடல்நலக்குறைவு: அரசியலில் சறுக்கிய பிறகு விஜயகாந்த்துக்கு உடல்நிலையும் சரியில்லாமல் போனது. இதனால் தேவையான சிகிச்சைகளை எடுத்துக்கொண்டு வீட்டில் ஓய்வில் இருந்தார். நிலைமை இப்படி இருக்க அவர் நேற்று காலை 6.10 மணி அளவில் சென்னை மியாட் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இன்று மாலை உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

ரமணா விஜயகாந்த்: அவர் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் ரமணா திரைப்படம் பெரிய மைல் கல். விஜயகாந்த் என்றாலே அதிர பேசுவது போன்றுதான் இயக்குநர்கள் காட்சிப்படுத்துவார்கள். ஆனால் ஏ.ஆர்.முருகதாஸோ ரமணாவில் விஜயகாந்த்தை அமைதியாக்கி; பார்வையில் பேச வைத்திருப்பார். அதனாலேயே அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. முக்கியமாக அந்த படத்தின் க்ளைமேக்ஸில் விஜயகாந்த் இறந்துபோவது போன்ற சீனை பார்த்த ரசிகர்கள் உச்சக்கட்ட சோகத்துக்கு சென்றனர்.

கண்டிஷன் வைத்த விஜயகாந்த்: இந்நிலையில் ரமணா படத்தில் நடித்தபோது விஜயகாந்த் வைத்த கண்டிஷன் தெரியவந்திருக்கிறது. அதாவது அந்தக் கதையை ஏ.ஆர்.முருகதாஸ் சொல்வதற்காக விஜயகாந்த்தை சந்தித்திருக்கிறார். கதை கேட்கும் முன்னரே முருகதாஸிடம் விஜயகாந்த், 'இங்க பாருங்க நான் குழந்தைகளுக்கு அப்பாவாக இருக்கக்கூடாது; கதையில் சாகக்கூடாது' என்ற கண்டிஷனை வைத்துவிட்டுத்தான் கதையை கேட்க ஆர்மபித்தாராம்.

ஆனால் விஜயகாந்த்தை வைத்துதான் இந்தப் படத்தை எடுக்க வேண்டும் என தீர்மானமாக இருந்த முருகதாஸ், இல்லை சார் அப்படி எதுவும் இல்லை என்று சொல்லிவிட்டு கதையை சொல்லிவிட்டாராம். ஷூட்டிங்கும் தொடங்கியிருக்கிறது. ஷூட்டிங்கில் ஏ.ஆர்.முருகதாஸின் அர்ப்பணிப்பையும், கடுமையான உழைப்பையும் பார்த்துவிடு விஜயகாந்த் ரொம்பவே இம்ப்ரெஸ் ஆகிவிட்டாராம்.

ஒருகட்டத்தில் படத்தில் தான் வைத்த கண்டிஷன் குறித்து கவலைப்படாத விஜயகாந்த் குழந்தைகளுக்கு அப்பாவாகவும், க்ளைமேக்ஸில் தான் இறப்பது போன்றும் நடித்துக்கொடுத்தாராம். இந்த விஷயத்தில் கேள்விப்பட்ட பலரும் விஜயகாந்த்தை பொறுத்தவரை ஒருவரின் உழைப்பு பிடித்துவிட்டால் போதும் அவர்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார் என்று சோகத்துடன் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X