Sridevi - முதல் கணவர் இவரா?.. ஸ்ரீதேவி வைத்த கண்டிஷனால்தான் அந்த நடிகர் கழற்றிவிட்டாரா?

சென்னை: Sridevi (ஸ்ரீதேவி) நடிகை ஸ்ரீதேவி ஒரு நடிகரை முதல் திருமணம் செய்துகொண்டதாகவும் ஆனால் அந்த நடிகர் ஒரு காரணத்துக்காக கழற்றிவிட்டார் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்திய அளவில் கலக்கிய நடிகை ஸ்ரீதேவி கந்தன் கருணை படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு துணைவன் படத்தில் அவர் முருகன் கதாபாத்திரம் ஏற்றிருந்தார். தொடர்ந்து தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் குழந்தை நட்சத்திரமாக கலக்க தொடங்கினார். சிறுமியாக இருந்தபோதே தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியவர் அவர்.

Here is the unknown facts about Actress Sridevi Marriage Life

லீடு ரோல்கள்: குழந்தை நட்சத்திரமாக பல மொழிகளில் நடித்து பல விருதுகளை வென்ற அவர்; இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கிய மூன்று முடிச்சு படத்தில் லீடு ரோலில் கதாபாத்திரத்தில் நடித்தார். அந்தப் படத்தில் ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அந்தப் படத்தில் நடித்தபோது ஸ்ரீதேவியைவிடவும் ரஜினிகாந்த்துக்கு சம்பளம் ரொம்பவே குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னகத்தை கலக்கிய மயில்: தொடர்ந்து பல படங்களில் நடித்துவந்த ஸ்ரீதேவிக்கு ஹீரோயினாக பெரும் அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம். அதில் அவர் ஏற்றிருந்த மயில் கதாபாத்திரம் அப்போதைய ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. இதனையடுத்து தென் இந்தியா முழுவதும் தனது சாம்ராஜ்ஜியத்தை விரிவுப்படுத்தி கொடியை உயர பறக்கவிட்டார்.

ஹிந்தியில் ஸ்ரீதேவி: இதனையடுத்து பாலிவுட்டுக்கு சென்ற ஸ்ரீதேவி அங்கும் தனது வெற்றிக்கொடியை நாட்டினார். பல வெற்றி படங்களில் நடித்த ஸ்ரீதேவியின் கால்ஷீட்டுக்காக ஒட்டுமொத்த பாலிவுட்டும் காத்திருக்க ஆரம்பித்தது. தென்னிந்தியாவிலிருந்து பாலிவுட்டுக்கு சென்று கலக்கிய ஸ்ரீதேவியை ஒட்டுமொத்த தமிழ்நாடும் பெருமையாக பார்த்தது. பாலிவுட்டில் பீக்கில் இருந்தபோது தயாரிப்பாளர் போனிகபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஜான்வி, குஷி என்ற இருமகள்கள் இருக்கிறார்கள்.

Here is the unknown facts about Actress Sridevi Marriage Life

திருமணம் பற்றிய புதிய தகவல்: இந்நிலையில் ஸ்ரீதேவி போனி கபூரை திருமணம் செய்துகொள்வதற்கு முன்னதாகவே நடிகர் மிதுன் சக்ரவர்த்தியை ரகசிய திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. அந்தத் தகவலின்படி ஒரு படத்தில் இரண்டு பேரும் நடித்தபோது காதல் உருவாக ஆரம்பித்ததாம். மிதுனை பிரிய விரும்பாத ஸ்ரீதேவி திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து ரகசிய திருமணமும் செய்துகொண்டாராம்.

ஆனால் மிதுன் ஏற்கனவே திருமணம் ஆனவராம். எனவே முதல் மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும் என ஸ்ரீதேவி கண்டிஷன் வைத்தாராம். மிதுனோ ஸ்ரீதேவியை இரண்டாவது மனைவியாக ஏற்றுக்கொள்ள மட்டுமே தயாராக இருந்தாராம். இதனால் வேறு வழியே இல்லாமல்தான் மிதுனை ஸ்ரீதேவி பிரிந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த வலி ரொம்ப காலமாகவே ஸ்ரீதேவியின் மனதுக்குள் இருந்ததாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

கடைசி படம்: ஸ்ரீதேவி கடைசியாக புலி படத்திலும் , ஹிந்தியில் மாம் என்ற படத்திலும் நடித்தார். இந்தச் சூழலில் கடந்த 2018ஆம் ஆண்டு துபாயில் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற அவர் ஹோட்டல் அறையில் இருக்கும் பாத் டாப்பில் உயிரிழந்து கிடந்தார். அவரது உயிரிழப்புக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் இரங்கல் தெரிவித்தது. மேலும் தேசிய கொடி போர்த்தி அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X