Rajini - எனக்கெல்லாம் டிவி இல்லையா?.. ஏவிஎம்மிடம் கேட்ட ரஜினி.. சீஃப் கெஸ்ட்டானாலும் எளிமை போகல
சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) ஏவிஎம் நிறுவனத்திடம் ரஜினிகாந்த் தனக்கு ஒரு டிவி இல்லையா என கேட்ட சம்பவம் தெரியவந்திருக்கிறது.
சினிமா மீது இருக்கும் ஆசையால் நடத்துநர் பணியை உதறிவிட்டு சினிமா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தார். பிறகு கே பாலசந்தர் இயக்கத்தில் அறிமுகமானார். சினிமாவில் அவர் அறிமுகமாகும்போது எந்த பின்னணியும் இல்லை, ஹீரோவுக்கான முக லட்சணம் இல்லை, கறுப்பு நிறத்தவர் என பல கேலிகளையும், பல போராட்டங்களையும் சந்தித்தவர். இப்போது அவர் சூப்பர் ஸ்டாராக அதிக சம்பளம் வாங்கும் ஹீரோவாக இருந்தாலும் ஆரம்பக்காலட்டத்தில் அவர் கடுமையாக அவமானப்பட்டிருக்கிறார்.

சூப்பர் ஸ்டார்: இப்படி பல அவமானங்களையும், போராட்டத்தையும் சந்தித்த ரஜினிகாந்த் தனது திறமையாலும், ஸ்டைலாலும், விடாமுயற்சியாலும் பெரும் வெற்றி கண்டு மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். அவர் இதுவரை 169 படங்களில் நடித்திருக்கிறார். அவற்றில் பெரும்பாலான படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஜெயிலர் மற்றும் லால் சலாம் படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர் அடுத்ததாக ஞானவேல் இயக்கத்தில் நடிக்கிறார். ஜெயிலர் படம் ஆகஸ்ட் பத்தாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.
சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து: பைரவி படத்திலிருந்து அவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கிடைத்தது. இத்தனை வருடங்களாக அந்தப் பட்டம் குறித்த பஞ்சாயத்து வராமல் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும்தான் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது அந்த பட்டத்துக்கான ரேஸில் விஜய்யை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள். அதுகுறித்த பேச்சுதான் கடந்த சில வாரங்களாகவே ஓடிக்கொண்டிருக்கின்றன. ரஜினிகாந்த்துக்கு எதிராக விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டும் அளவுக்கு சென்றிருக்கின்றனர்.
அவர் உருவம் பாரு எளிமை: ஆனால் ரஜினி ரசிகர்களோ எங்கள் தலைவர்தான் ஒரே சூப்பர் ஸ்டார். அவரது எளிமை யாருக்குமே வராது. விஜய் எளிமையாக இருப்பது போல் நடிக்கிறார் என ஓபனாகவே கூறுவதுண்டு. அதேபோல் ரஜினியின் மேடை பேச்சுக்களும், சில நடவடிக்கைகளுமேக்கூட தான் எவ்வளவு எளிமையானவன், ஸ்ட்ரெயிட் ஃபார்வேர்டானவன் என்பதை உணர்த்தும் விதமாகத்தான் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தெரியவந்திருக்கிறது.

என்ன நடந்தது: அதாவது ரஜினி உச்சத்தில் இருந்த சமயம் அது. ஒருமுறை ஏவிஎம்மில் விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருக்கிறார். அது டிவி வழங்கும் நிகழ்ச்சி. ரஜினிதான் அந்த விழாவுக்கு வந்திருந்தவர்களுக்கு டிவிகளை வழங்க வேண்டும். இவரும் ஒவ்வொருவருக்காக டிவியை வழங்கிவிட்டு ஏவிஎம் சரவணனிடம் எல்லோருக்கும் டிவி கொடுத்தீங்க எனக்கு ஒரு டிவி தரலையே என கேட்டிருக்கிறார்.
உண்மையாத்தான் கேட்டேன்: சரவணன் அந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக்கொண்டது போல் காட்டிக்கொள்ளாமல் அந்த நிலைமையை சமாளித்திருக்கிறார். விழா முடிந்து வீடு ரஜினி வீடு திரும்பிய கொஞ்ச நேரத்தில் அழகான டிவி ஒன்று அவரது வீட்டுக்கு வந்திருக்கிறது. உடனடியாக ரஜினியின் மனைவி லதா; ஏவிஎம் சரவணனுக்கு ஃபோன் செய்து, 'ஏன் சார் அவர்தான் ஏதோ விளையாட்டுக்கு கேட்டார்; அதை நீங்க சீரியஸா எடுத்துட்டு டிவியை அனுப்பிருக்கிங்களே? என கேட்டிருக்கிறார்.
உடனே ஃபோனை வாங்கிய ரஜினிகாந்த், இல்லை சரவணன் சார் உண்மையிலேயேத்தான் நான் கேட்டேன். பசங்க வீட்ல இன்னொரு டிவி வேண்டும்னு அடம் பிடிச்சாங்க. அத வாங்கலாம்னு இருந்தேன். சரி எதுக்கும் உங்கள்ட்ட கேட்டு பார்ப்போம்னு கேட்டேன். நீங்க கொடுத்துட்டீங்க. இப்போ எனக்கு டிவி வாங்குற செலவு மிச்சம்' என சொல்லியிருக்கிறார். இந்தத் தகவலை ரஜினியே ஒரு மேடையில் பகிர்ந்துகொண்டார். இதனைப் பார்த்த ரஜினி ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் ஆவதற்கு வியாபாரம் மட்டும் போதாது மனதில் உள்ளதை நேரடியாக பேசும் குணம் வேண்டும். அது எங்கள் தலைவரிடம்தான் இருக்கிறது என கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











