Suriya - சூர்யாவின் வாழ்க்கையை கெடுத்துடாதீங்க.. பயந்துபோன சிவகுமார்..இதுதான் காரணமா
சென்னை: கோலிவுட்டின் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கும் சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக புறநானூறு படத்திலும், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும் நடிக்கவிருக்கிறார். விஜய், அஜித்துக்கு நிகரான வியாபாரம் உடைய நடிகராக சூர்யா இப்போது ஜொலித்துக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யாவின் நடிப்பில் கடைசியாக எதற்கும் துணிந்தவன் படம் ரிலீஸானது. அந்தப் படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. பாண்டிராஜ் இயக்கியிருந்தார். இந்தச் சூழலில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் சூர்யா. ஸ்டூடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா படத்தை தயாரித்திருக்கிறார். எதற்கும் துணிந்தவன் கலவையான விமர்சனத்தை பெற்றதால் இந்தப் படம் மீது பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

பத்து மொழிகளில்:இந்தப் படமானது 100 கோடி ரூபாய்க்கும் மேலான பட்ஜெட்டில் தயாராகிறது. அதுமட்டுமின்றி மொத்தம் பத்து மொழிகளில் 3டியில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவிருக்கிறது. இதுவரை சூர்யா நடித்த படங்களிலேயே இந்தப் படம்தான் அதிக பட்ஜெட் என்பதும் இதுதான் பத்து மொழிகளில் வெளியாகும், முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் சூர்யாவின் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
நம்பிக்கையை காப்பாற்றுவாரா சிவா?: அதேசமயம் சிவா கடைசியாக இயக்கிய அண்ணாத்த படம் படுதோல்வியடைந்தது. அதுமட்டுமின்றி சிவா கிராமத்து பாணியிலான கதைகளை இயக்குபவர். ஆனால் கங்குவா படமோ பீரியட் படமாக உருவாகிறது. எனவே கங்குவா படத்தை சிறப்பாக கொடுத்து தன்னை அவர் நிரூபிப்பாரா என்ற கேள்வியை சூர்யாவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேட்டனர்.
பட்டையை கிளப்பிய க்ளிம்ப்ஸ்: சில மாதங்களுக்கு முன்பு கங்குவா படத்தின் க்ளிம்ப்ஸ் வெளியிடப்பட்டிருக்கிறது. க்ளிம்ப்ஸை பார்த்த ரசிகர்கள் தங்களது சந்தேகத்தை சிவா அடித்து நொறுக்கிவிட்டார். அவ்வளவு அட்டகாசமாக இருக்கிறது என மகிழ்ச்சியை வெளிப்படுத்திவருகின்றனர். படம் பீரியட் மற்றும் இந்த காலத்தில் நடக்கும்படி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
பிஸ்னெஸ்: படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. கோவா, கொடைக்கானல், தாய்லாந்து உள்ளிட்ட பகுதிகளில் ஷூட்டிங் நடந்தது. இதற்கிடையே இதுவரை படத்துடைய வியாபாரம் 500 கோடி ரூபாய்வரை நடந்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே சூர்யாவின் படங்களிலேயே அதிகம் ப்ரீ பிஸ்னெஸ் ஆன படமும் இதுதான் என தகவல் வெளியாகியிருக்கிறது.
பயந்த சிவக்குமார்: இந்நிலையில் சூர்யாவை நினைத்து சிவக்குமார் பயந்த சம்பவம் தெரியவந்திருக்கிறது. அதாவது சூர்யா முதன்முதலில் நேருக்கு நேர் படத்தின் மூலம் அறிமுகமானார். வசந்த் அந்தப் படத்தை இயக்கியிருந்தார். முதலில் அஜித் தான் அதில் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அந்தப் படத்திலிருந்து அஜித் விலகிவிட்டார். இதனையடுத்து யாரை ஹீரோவாக போடலாம் என்ற யோசனையில் இருந்த வசந்த்திடம் சுஹாசினி சிவக்குமாருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரை ட்ரை செய்யலாமா என கேட்டிருக்கிறார்.
இதனையடுத்து அதுதொடர்பான பேச்சுவார்த்தை சிவக்குமாரிடம் தொடங்கியிருக்கிறது. அப்போது சிவக்குமாரோ, 'சூர்யா கார்மெண்ட் கம்பெனியில் வேலை செய்துவருகிறார். விரைவில் புதிய கம்பெனி தொடங்கும் முனைப்பில் இருக்கிறார். அவரை சினிமாவில் நடிக்க வைக்கிறேன் என்று சொல்லி வாழ்க்கையை கெடுத்துடாதீர்கள்' என கூறினாராம். தொடர்ந்து சிவக்குமாரை வசந்த் எப்படியோ சமாதானம் செய்து சூர்யா நடிப்பதற்கு சம்மதத்தையும் வாங்கிவிட்டாராம்.


Click it and Unblock the Notifications











