Vadivelu - சம்பளத்தை குறைக்க சொன்ன விஜயகாந்த்.. வடிவேலுவின் தெனாவட்டு பதில்.. இப்படியுமா இருப்பார்

சென்னை: ஒரு படத்துக்காக வடிவேலுவிடம் விஜயகாந்த் சம்பளத்தை குறைத்துக்கொண்டு நடித்து கொடேன் என்று கேட்டதற்கு வடிவேலு கூறிய தெனாவட்டான பதில் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் இப்படியுமா ஒரு மனிதன் வளர்த்துவிட்டவரையே அவமானப்படுத்துவார். வடிவேலுவுக்கு ஏன் இந்த மனது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விஜயகாந்த்துக்கு ஏற்பட்ட நுரையீரல் அழற்சி காரணமாக அவர் கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகக்கடலில் தள்ளியிருக்கிறது. அவரை கடைசியாக பார்ப்பதற்கு தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் இருந்தும் மக்கள் சென்னைக்கு படையெடுக்க ஆரம்பித்தனர்.

Here is the unknown side from vadivelu and Vijayakanth issue

பிரபலங்கள் அஞ்சலி: விஜயகாந்த்தின் உடல் தேமுதிக தலைமை அலுவலக வளாகத்தில் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. திரையுலக பிரபலங்களில் விஜய் முதல் இளையராஜா வரை பலரும் நேரில் சென்று விஜயகாந்த்தின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் அவர் பற்றிய நினைவுகளையும் பகிர்ந்துகொண்டனர். விஜய்யோ கண்ணீரே விட்டுவிட்டார். ஆனால் விஜயகாந்த்தால் வளர் நடிகர்களில் ஒருவரான வடிவேலு இறுதி அஞ்சலிக்கு வரவே இல்லை.

இரங்கலாவது: விஜயகாந்த் இறப்புக்கு அவர் வந்திருந்தால் தேமுதிக தொண்டர்கள், ரசிகர்கள் எல்லாம் உச்சக்கட்ட உணர்ச்சி கொந்தளிப்பில் இருந்தனர். அந்த மனநிலையில் வடிவேலுவை பார்த்திருந்தால் கண்டிப்பாக தாக்கியிருப்பார்கள் என்று கூறுகிறார்கள் ஒருசிலர். ஆனால் மறுதரப்பினரோ சரி வர வேண்டாம். ஒரு இரங்கல் அறிக்கையையாவது வெளியிட்டிருக்கலாமே. இதிலிருந்தே தெரிகிறது வடிவேலுவுக்கு விஜயகாந்த் மீது இருக்கும் வன்மம் என்கிறார்கள்.

என்ன பிரச்னை: அதாவது ஒரு கார் நிறுத்தப்பட்ட பிரச்னையில்தான் இருவருக்கும் முட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் விஜயகாந்த்தை வடிவேலு ரொம்பவே தரக்குறைவாக பேசினார். அதற்காக வடிவேலுவுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டதாகவும் ஒரு பேச்சு உண்டு.

விஜயகாந்த்துக்கு வன்மம் இல்லை: வடிவேலு விஜயகாந்த்தை கடுமையாக தாக்கி பேசினாலும் எதிர்க்கட்சி தலைவரான பிறகு வடிவேலு மீது விஜயகாந்த் எந்த வன்மத்தையும் காண்பிக்கவில்லை என்று அவருடன் நெருங்கி பழகியவர்கள் கூறுகிறார்கள். முக்கியமாக வடிவேலு நடிக்காமல் இருந்தபோது அவரை எப்படியாவது நடிக்க சொல்லுங்கப்பா. பிரச்னையை தீர்த்து வையுங்கள் என்று விஜயகாந்த் சொல்லிக்கொண்டே இருந்ததாகவும் பலர் சொல்கிறார்கள்.

சொக்கத்தங்கம்: வடிவேலு வளர்ந்த காலத்தில் அவருக்கு தொடர்ந்து தன்னுடைய படங்களில் வாய்ப்பு கொடுத்தவர் விஜயகாந்த். சின்னக்கவுண்டர் படத்தில்கூட வடிவேலுவை போடக்கூடாது என கவுண்டமணி கண்டிஷன் வைக்க; விஜயகாந்த்தான் தன்னுடைய முயற்சியில் நடிக்க வைத்தார். காலம் செல்ல செல்ல வடிவேலுவின் வளர்ச்சி அபாரமாக இருந்தது. அதனை பார்த்து விஜயகாந்த் சந்தோஷம்தான் பட்டார்.

இந்த சூழலில் வடிவேலு வளர்ந்த பிறகு விஜயகாந்த்தை அவர் இன்சல்ட் செய்த விஷயம் என்று ஒன்று கூறப்படுகிறது. அதாவது மணிரத்னத்தின் அண்ணன் கம்பெனியான ஜிவி பிலிம்ஸ் நீண்ட காலத்துக்கு பிறகு படம் தயாரிக்க முடிவு செய்திருக்கிறது. அப்படி உருவானதுதான் சொக்கத்தங்கம் திரைப்படம். பாக்யராஜ் டைரக்டர் விஜயகாந்த் ஹீரோ. அந்த சமயத்தில் வடிவேலு உச்சத்தில் இருந்தார்.

எனவே அவரை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என அவரிடம் தயாரிப்பு தரப்பிலிருந்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். அப்போது வடிவேலு மிகப்பெரிய தொகை ஒன்றை சம்பளமாக கேட்டாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நிறுவனம் இந்த விஷயத்தை விஜயகாந்த்திடம் சொல்லியிருக்கிறார்கள். அந்த சமயத்தில் மதுரையில் வடிவேலுவை சந்தித்த விஜயகாந்த், ஜிவி பிலிம்ஸ் பெரிய நிறுவனம் கொஞ்சம் சம்பளத்தை குறைத்துக்கொண்டு நடி என சொல்லியிருக்கிறார்.

அதற்கு வடிவேலுவோ, 'அப்படியா.. சரி நான் ஒரு படம் சொல்கிறேன். அந்தப் படத்தில் உங்களது சம்பளத்தை குறைத்துக்கொண்டு நடிக்கிறீர்களா' என எகத்தாளமாக கேட்டாராம். இதனால் அப்செட்டான விஜயகாந்த் ஒன்றுமே சொல்லாமல் கடந்து சென்றுவிட்டாராம். அதற்கு பிறகுதான் அப்படத்தில் கவுண்டமணியும், செந்திலும் நடித்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X