Raghuvaran - மகன் கேட்டால் எதை வேண்டுமானாலும் செய்வார் போல.. ரகுவரனின் மறுபக்கம் தெரியுமா?
சென்னை: Raghuvaran (ரகுவரன்) மறைந்த நடிகர் ரகுவரன் தனது மகனுக்காக செய்த சம்பவம் குறித்த தகவல் தெரியவந்திருக்கிறது.
கோலிவுட் எத்தனையோ நடிகர்களை கண்டிருக்கிறது. ஆனால் ரகுவரன் போல் இதுவரை யாரையும் கோலிவுட்டால் கண்டெடுக்க முடியவில்லை. ஏனெனில் ரகுவரன் நடிப்பில் பல வேரியஷன்களை காண்பிக்கக்கூடியவர். அப்படி அவர் பல வேரியஷன்களை காட்டி நடித்த படங்கள் ஏராளம்.

ஏழாவது மனிதன்: ரகுவரன் சினிமா கல்லூரியில் இணைந்து படித்தார். அங்கு சினிமா தொடர்பான விஷயங்களையும், நடிப்பையும் கற்றுக்கொண்ட அவர் தொடர்ந்து வாய்ப்புகள் தேட ஆரம்பித்தார். முயற்சியின் பலனாக ஏழாவது மனிதன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். அந்தப் படமும் தேசிய விருது வென்றது.
வில்லன் ரகுவரன்: கோலிவுட்டில் ஒரு விதி இருந்தது. அதாவது வில்லன் என்றால் ஆஜானுபாகுவாக, மற்றவர்களை உருவத்தை வைத்தே பயப்பட வைக்க வேண்டும் என்பதுதான் அது. ஆனால் ரகுவரனோ அதற்கு நேர்மாறானவர். ஒல்லியான தேகம், குழி விழுந்த கன்னம், அளவுக்கு அதிகமான உயரம் என வில்லனுக்கு அதுவரை கோலிவுட் எழுதியிருந்த ஃபார்முலாவை மீறி இருந்தார். தனது உடல் மொழி, வாய்ஸ், பார்வை என அனைத்தையும் வைத்து வில்லனாக ஒரு கலக்கு கலக்கினார்.
மார்க் ஆண்டனி: ரஜினிகாந்த் ஸ்க்ரீனில் வந்தால் அவரைத் தவிர்த்து வேறு யார் மீதும் கண்கள் போகாது. ஆனால் அந்த விதியையும் மாற்றிக்காட்டியவர் ரகுவரன். பாட்ஷா படத்தில் அவர் ஏற்றிருந்த மார்க் ஆண்டனி கதாபாத்திரம் எல்லாம் இனிமேல் யாரும் செய்ய முடியாதது. பாட்ஷாவாக நடிக்க நான் இருக்கிறேன். ஆனால் மார்க் ஆண்டனியாக இனி யாராலும் நடிக்க முடியாது என ரஜினியேக்கூட ஒரு மேடையி புகழ்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
குணசித்திர வேடம்: பொதுவாக வில்லன் நடிகர்கள் குணசித்திர வேடத்துக்கு மாறும்போது மெல்லிய தடுமாற்றம் ஒன்று ஏற்படும். ஆனால் ரகுவரனோ அதற்கும் விதிவிலக்கானவர். முகவரி, சிவப்பதிகாரம், யாரடி நீ மோகினி, சிவாஜி என அவர் குணச்சித்திர வேடங்களிலும் தனது தனித்துவமான நடிப்பை காண்பித்து அசால்ட்டாக ஸ்கோர் செய்திருப்பார்.
திருமணமும், பிரிவும்: நடிகை ரோகிணியை ரகுவரன் காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ரிஷி என்ற ஒரு மகனும் இருக்கிறார். ஆனால் சில மன கசப்புகளால் ரோகிணியும், ரகுவரனும் பிரிந்துவிட்டார்கள். இருந்தாலும் இருவரும் மகன் மீது அதீத பாசம் வைத்திருந்தனர். குறிப்பாக ரகுவரனுக்கு ரிஷி மீது அளவு கடந்த பாசம். ரிஷி எதை கேட்டாலும் உடனே வாங்கிக்கொடுத்துவிடுவார். அப்படி ஒரு சம்பவம்தான் தற்போது தெரியவந்திருக்கிறது.
என்ன நடந்தது?: அதாவது ஒரு நாள் இரவு ரகுவரன் வீட்டுக்கு முன்பு ஒரு குதிரை வந்து நின்றிருக்கிறது. அதனை பார்த்த ரிஷி ரகுவரனிடம் அப்பா எனக்கு அது வேண்டும் என கேட்டிருக்கிறார். அப்போது எதையும் சொல்லாமல் அந்த நேரத்தை கடந்திருக்கிறார் ரகுவரன். மறுநாள் காலை ரிஷி தூங்கி எழுந்து பார்க்கும்போது அவர் முதல்நாள் கேட்ட குதிரை வீட்டில் நின்றிருக்கிறது. இதை பார்த்த ரோகிணி அவன் சின்ன பையன் என்ன கேட்டாலும் வாங்கி கொடுத்துடுவீங்களா. இந்தப் பழக்கத்தை மாற்றுங்கள் என அறிவுரை சொன்னாராம். ஆனால் ரகுவரன் அந்தப் பழக்கத்தை மட்டும் மாற்றிக்கொள்ளவே இல்லையாம்.


Click it and Unblock the Notifications











