நடிகையின் திமிரை அடக்க நினைத்த விஜயகாந்த்.. ஓபனாக சொல்லவும் செஞ்சிருக்காரு.. கேப்டன் வேற மாதிரி
சென்னை: கேப்டன், புரட்சி கலைஞர் என்று மக்களால் கொண்டாடப்பட்ட விஜயகாந்த் கடந்த 2023ஆம் ஆண்டு உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவர் உயிரோடு இருந்தபோது அவரை கடுமையாக எதிர்த்தவர்கள்கூட அவர் இறந்த பிறகு கலங்கிப்போனார்கள். மேலும் அவர் உயிரிழந்ததிலிருந்து அவர் பற்றிய புது புது தகவல்களையும் அவரோடு பணியாற்றியவர்கள் சொல்லி அவர் மீதான வியப்பை அதிகப்படுத்துகின்றனர்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் பீக்கில் இருந்தபோது திரைத்துறைக்கு வந்த விஜயகாந்த்; அவர்களுக்கு கடும் போட்டியை திரைத்துறையில் கொடுத்தவர். சினிமாவில் எப்படி அவர்களுக்கு இணையான செல்வாக்கை பெற்றிருந்தாரோ அதேபோல் அரசியலில் கருணாநிதி, ஜெயலலிதா ஆக்ட்டிவ்வாக இருந்தபோது உள்ளே வந்து அவர்களுக்கும் சொல்லிக்கொள்ளும்படியான அழுத்தத்தை கொடுத்தார். ஒருகட்டத்தில் தன்னுடன் அவரை இணைத்துக்கொள்வதற்கு இரண்டு பேருமே போட்டிப்போட்டார்கள் என்பதை மறக்க முடியாது.
அரசியலில் நடந்த துரோகம்: சினிமாவில் எப்படி தனக்கான இடமும், தன்னுடன் இருந்தவர்களும் நிலையாக இருந்தார்கள் அதேபோல் அரசியலிலும் இருக்கும் என்றுதான் நினைத்தார் விஜயகாந்த். ஆனால் அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக நடந்தது. அவருடன் இருந்த சிலர் பெரிய துரோகத்தை செய்துவிட; அதனை எதிர்பார்க்காத கேப்டன் மன உளைச்சலுக்கு ஆளானார். ஒருகட்டத்தில் உடல்நல குறைவும் ஏற்பட்டது.

உயிரிழந்த விஜயகாந்த்: அதற்காக அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சையும் பெற்று மெல்ல மெல்ல மீண்டார். இருந்தாலும் முன்னர் போல் சுறுசுறுப்பாக இயங்க முடியவில்லை. இப்படிப்பட்ட சூழலில் கடந்த 2023ஆம் ஆண்டு அவருக்கு மீண்டும் உடல்நல குறைவு ஏற்பட; மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு அனைவரையும் உச்சக்கட்ட சோகத்தில் ஆழ்த்தியது.
அவர் உயிரோடு இருந்தபோது எதிர்த்தவர்கள்கூட மறைவுக்கு கலங்கினார்கள். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் விஜயகாந்த்தை நினைத்து வருத்தப்பட்டனர். இந்நிலையில் அவர் உயிரிழந்ததிலிருந்து சினிமாவில் பணியாற்றியபோது அவர் செய்த பல சம்பவங்கள் தெரியவந்து அனைவரையும வியப்பில் ஆழ்த்திவருகிறது. அந்தவகையில் நடிகை ரோஜாவுடன் நடந்த சம்பவம் ஒன்றும் இப்போது தெரியவந்திருக்கிறது.
என்ன நடந்தது?: அதாவது பாரதிராஜா இயக்கத்தில் விஜயகாந்த்தும், ரோஜாவும் தமிழ்ச்செல்வன் படத்தில் நடித்தார்கள். அந்தப் படத்தின் ஷூட்டிங்போது நடிப்பு வராதவர்களுக்கு தலையில் கொட்டி கொட்டி நடிப்பு சொல்லித்தருவாராம் விஜயகாந்த். ஆனால் மற்றவர்களைவிடவும் ரோஜா சீனியர் என்பதால் அவரிடம் அப்படி விஜயகாந்த்தால் நடந்துகொள்ள முடியவில்லையாம். இதுகுறித்து ரோஜாவிடமே, 'நான் மட்டும் உன்னுடைய முதல் படத்தில் நடித்திருந்தால் இப்படி கொட்டி கொட்டி சொல்லிக்கொடுத்திருப்பேன்' என சொல்வாராம்.
அதுமட்டுமின்றி முதன்முறையாக ஷூட்டிங்கில் ரோஜாவை பார்த்தபோது அவர் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தாராம். விஜயகாந்த் வந்தபோதும் இறக்கவில்லையாம். அதனைப் பார்த்த கேப்டனோ, ' இந்தப் பொண்ணுக்கு சரியான திமிரு. அதை எப்படியாவது அடக்க வேண்டும்' என்று நினைத்தாராம். அதையும் ரோஜாவிடம் சொல்லியிருந்தாராம். இதனை ரோஜா சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துகொண்டிருந்தார்.


Click it and Unblock the Notifications











