என்ன சார் பெரிய அலைபாயுதே லவ் ப்ரோபோசல்?..லதாவிடம் ரஜினி ப்ரோபோஸ் செஞ்சத பாருங்க.. சினிமா தோத்துடும்

சென்னை: ரஜினிகாந்த்துக்கு இப்போது 74 வயதானாலும் ஓயாமல் உழைத்துவருகிறார். கூலி படத்தை முடித்து ஜெயிலர் 2வில் நடித்துவரும் அவர் அடுத்ததாக கமலின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். முதலில் அதனை சுந்தர்.சி இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் அந்த அறிவிப்பு வந்த சில நாட்களிலேயே படத்திலிருந்து வெளியேறிவிட்டார் அவர். அதனையடுத்து புதிய இயக்குநரை தேடும் படலம் நடந்துவருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த பல வருடங்களாக கோலிவுட்டில் நம்பர் ஒன் இடத்தில் நீடித்துவருகிறார். தர்பார், அண்ணாத்த ஆகிய இரண்டு படங்கள் இடையில் படுதோல்வியை சந்தித்தன. அதன் காரணமாக இனி ரஜினி அவ்வளவுதான் என்று பலரும் சொன்னார்கள். ஆனால் இதுமாதிரியான பேச்சுக்கள் அதிகம் வரும் சூழலில் ஒரு மெகா ஹிட்டை கொடுத்து வழக்கமுடைய ரஜினி; ஜெயிலர் படத்தை மெகா ப்ளாக் பஸ்டராக கொடுத்து பேச்சுக்களை அடக்கினார்.

கூலி கொடுத்த அடி: ஜெயிலர் படத்தின் வெற்றி அவருக்கு மிகப்பெரிய தெம்பை கொடுத்தது. அந்த உற்சாகத்தோடு நடித்த வேட்டையன், கூலி இரண்டு படங்களுமே ஜெயிலர் அளவுக்கு ரெஸ்பான்ஸை பெறவில்லை. அதிலும் கூலி படத்தின் நிலைமையை சொல்லவே வேண்டாம். லோகேஷ் கனகராஜின் கரியரிலேயே வொர்ஸ்ட்டான படம் என்ற பெயரை பெற்றுவிட்டது. இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்துவருகிறார்.

How Rajinikanth Proposed to Latha here are details about Unknown Love Story
Photo Credit:

கமலுடன் கூட்டணி: ஜெயிலர் 2 படத்தை முடித்துவிட்டு கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்தப் படத்தை முதலில் சுந்தர்.சி இயக்குவதாக இருந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் வெளியேற; இப்போது புதிய இயக்குநரை தேடும் பணி மும்முரமாக நடந்துவருகிறது. இப்படி 74 வயதிலும் கோலிவுட்டில் தன்னை பிஸியாக வைத்திருக்கும் ரஜினிகாந்த் லதா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டது அனைவரும் அறிந்தது. ஆனால் அந்தக் காதலை அவர் எப்படி ப்ரோபோஸ் செய்தார் என்பது பலரும் அறியாதது.

எப்படி சொன்னார்?: அதாவது ஒரு படத்தின் ஷூட்டிங்கில் ரஜினியை பேட்டி எடுக்க வந்தபோதுதான் லதாவுக்கும், ரஜினிக்கும் முதல் அறிமுகம். பார்த்ததுமே காதலில் விழுந்துவிட்டார் ரஜினி. ஆனாலும் எப்படி காதலை சொல்வது என்று தெரியாமல் இருந்திருக்கிறார். அப்போது லதா, 'நான் கேட்ட ஒரு கேள்விக்கு குடும்ப பாங்கான பெண் கிடைத்தால் திருமணம் செய்துகொள்வேன் என்று சொன்னீர்கள். குடும்ப பாங்கு என்றால் என்ன அர்த்தம். அதை நீங்களே கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்களேன்" என்று ரஜினியிடம் கேள்வியை முன்வைத்திருக்கிறார்.

ரஜினி சொன்ன சூப்பர் பதில்: அதற்கு ரஜினியோ இதுதான் சந்தர்ப்பம் என்று மனதில் நினைத்துக்கொண்டு, 'குடும்ப பாங்கான பெண் என்றால் அழகாக இருக்க வேண்டும். கம்பீரமாக இருக்க வேண்டும். அதேபோல் மென்மையாகவும் இருக்க வேண்டும். இவை மட்டுமின்றி புத்தி கூர்மையாகவும் இருக்க வேண்டும். அதாவது உன்னை மாதிரி ஒரு பெண் வேண்டும். அப்படி இருந்தால் உடனடியாக நான் திருமணம் செய்துகொள்வேன்' என்றாராம். இதனை கேட்டு லதா மட்டுமின்றி அருகே இருந்தவர்களும் ஷாக்காகிவிட்டார்களாம்.

நடிகர் ஒய்.ஜி மகேந்திரனின் உறவுக்கார பெண்தான் லதா. எனவே விஷயத்தை அவரிடம் ரஜினி சொல்ல; அடுத்தடுத்த நடவடிக்கைகள் எல்லாம் ஜரூராக நடக்க; லதா வீட்டில் நீண்ட தயக்கத்துக்கு பிறகு சம்மதம் கிடைத்தது. அதனையடுத்து திருப்பதியில் வைத்து திருமணம் செய்துகொண்டார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X