திரிஷாவிடம் எந்த நடிகரின் ஃபோன் நம்பர் இல்லை தெரியுமா?.. ரசிகர்கள் உச்சக்கட்ட ஆச்சரியம்
சென்னை: கோலிவுட்டில் 20 வருடங்களுக்கும் மேலாக கோலோச்சிவரும் நடிகை திரிஷா. அவர் நடித்த ஏகப்பட்ட படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கின்றன. கடைசியாக அவரது நடிப்பில் விடாமுயற்சி படம் வெளியானது. அதனைத் தொடர்ந்து குட் பேட் அக்லி வரவிருக்கிறது. இந்தச் சூழலில் அவர் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. அதனைப் பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்திருக்கிறார்கள்.
கோலிவுட்டின் முன்னணி நடிகையாக கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக இருப்பவர் திரிஷா. ஜோடி படத்தில் சின்ன வேடத்தில் தலை காட்டிய அவர் அதற்கு பிறகு ஹீரோயினாக மாறினார். ஹீரோயினானவுடன் வரிசையாக அவருக்கு வாய்ப்புகள் வந்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட திரிஷா தனது திறமையை படத்துக்கு படம் மெருகேற்றினார். இதன் காரணமாக தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறினார். முன்னணி ஹீரோக்களுடன் தொடர்ந்து ஜோடி போட்டு நடித்தார்.

மற்ற மொழிகளில்: தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட படங்களிலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் ஹிந்தியில் மட்டும் அவர் எதிர்பார்த்தபடி அவரால் வெற்றிபெற முடியவில்லை. அக்ஷய் குமாருக்கு ஜோடியாக அவர் நடித்த படம் சரியாக ஓடவிலை. அதேசமயம் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, ராணா டகுபதி, பிரபாஸ் என தெலுங்கிலும் முன்னணி ஹீரோக்கள், இளம் ஹீரோக்கள் என ஜோடி போட்டு ஃபுல் ஃபார்மில் நடித்துக்கொண்டிருந்தார்.
திரிஷாவுக்கு சறுக்கல்: சூழல் இப்படி இருக்க திடீரென சில வருடங்களுக்கு முன்பு திரிஷாவுக்கு வாய்ப்புகள் வருவது குறைய ஆரம்பித்தன. அதன் காரணமாக அவரது கரியர் முடிந்துவிட்டது என்று சிலர் கூறினார்கள். ஆனால் பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த 96 படத்தில் திரிஷா ஹீரோயினாக நடித்தார். அந்த ஜானு கதாபாத்திரம் திரிஷாவின் மார்க்கெட்டை மீண்டும் உயர்த்தி பிடித்தது. அதிலிருந்து லைம் லைட்டுக்கு வந்த அவர் மீண்டும் பிஸியாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
அடுத்த படங்கள்: 96க்கு பிறகு நடித்த படங்களில் பொன்னியின் செல்வனும் திரிஷாவுக்கு பெரிதும் உதவியது. கடைசியாக அவரது நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் வெளியானது. அந்தப் படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. அடுத்ததாக கமல் ஹாசனுடன் தக் லைஃப், தெலுங்கில் விஸ்வம்பரா, தமிழில் குட் பேட் அக்லி என வரிசையாக படங்கள் அவர் கைவசம் இருக்கின்றன. இவற்றில் குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதியும், தக் லைஃப் திரைப்படம் ஜூன் மாதமும், விஸ்வம்பரா இந்த வருடத்துக்குள் ரிலீஸாகின்றன.
அஜித் நம்பர் இல்லை: இந்நிலையில் திரிஷா கொடுத்த பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. அவர் கொடுத்த பேட்டியில் என்னிடம் பெரும்பாலான நடிகர்களின் நம்பர்கள் இருக்கின்றன. ஆனால் அஜித்தின் ஃபோன் நம்பர் மட்டும்தான் என்னிடம் இல்லை என்றார். அவரது இந்தப் பேட்டியை பார்த்த ரசிகர்கள் இருவரும் சேர்ந்து ஐந்து படங்களில் நடித்திருக்கும் நிலையில் அஜித்தின் நம்பர் திரிஷாவிடம் இல்லையா என்று ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











