நான் ப்ளே பாய்தான்.. ஓபனாக போட்டுடைத்த விஜய்.. பக்கத்தில் இருந்த திரிஷா கொடுத்த ரியாக்ஷன் செம

சென்னை: சங்கீதா கேட்ட விவாகரத்து எவ்வளவு பரபரப்பை ஏற்படுத்தியதோ; அதைவிட அதிகம் பேசுபொருளானது விஜய்யும், திரிஷாவும் ஒன்றாக வந்ததுதான். தேர்தல் நேரத்தில் அவர் இப்படி செய்திருக்கவே கூடாது என்பது தவெகவினர் உட்பட அனைவரது கருத்தும். இருப்பினும் இந்த விஷயம் எல்லாம் எங்கள் தளபதியின் வெற்றியை தேர்தலில் எதுவும் செய்யாது என நம்பிக்கையை இழக்காமல் இருக்கிறார்கள் ரசிகர்கள். அதேசமயம் திரிஷாவையும் அவர் விமர்சனம் செய்வதற்கு தவறவில்லை.

தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்திருக்கும் விஜய்; அடுத்த மாதம் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து நிற்கப்போவதாகவே இப்போதுவரை தெரிகிறது. ஆனால் அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால்; அவர் பாஜக - அதிமுகவின் என்டிஏ கூட்டணிக்கு செல்ல வாய்ப்புகள் அதிகம் என கருதப்பட்டது. அதனை திட்டவட்டமாக மறுத்துவிட்டது தவெக. இது ஒருபக்கம் இருக்க அவரை சுற்றி இப்போது பெரிய பிரச்னையாக இருப்பது சங்கீதா, திரிஷா விவகாரம்தான்.

I m a Playboy Vijay s Throwback Video With Trisha Suddenly Trends Again
Photo Credit:

சங்கீதா கேட்ட விவாகரத்து: சங்கீதா தனது கணவரிடமிருந்து விவாகரத்து கேட்பார் என்று யாருமே நினைத்து பார்க்கவில்லை. கடந்த ஐந்து வருடங்களாகவே இரண்டு பேரும் பிரிந்துதான் வாழ்ந்திருக்கிறார்கள். அதனால்தான் விஜய் தொடர்பான எந்த நிகழ்ச்சிகளிலும் சங்கீதாவை பார்க்க முடியாமல் இருந்திருக்கிறது. அவர் விவாகரத்து கேட்டதோடு இன்னொரு அதிர்ச்சியையும் கொடுத்திருந்தார். அதாவது, நடிகையுடன் தனது கணவருக்கு திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக ஒரே போடாக போட்டார்.

Also Read
பிள்ளைகள் எவ்வளவு வருத்தப்படுவார்கள்?.. சங்கீதாவுக்காக விஜய் அதை செய்திருக்க வேண்டும்.. அமீர் ஓபன்
பிள்ளைகள் எவ்வளவு வருத்தப்படுவார்கள்?.. சங்கீதாவுக்காக விஜய் அதை செய்திருக்க வேண்டும்.. அமீர் ஓபன்

திரிஷாவுடன் ஜோடி: அனைவருமே யார் அந்த நடிகை என்று கேள்வி கேட்ட சூழலில்; அடுத்த ட்விஸ்ட்டாக, திரிஷாவுடன் மேட்சிங்காக ட்ரெஸ் போட்டுக்கொண்டு திருமணத்தில் கலந்துகொண்டு ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்தார் தளபதி. அவ்வளவுதான் ஒட்டுமொத்த சோஷியல் மீடியாவும் பற்றிக்கொண்டது. தவெகவினர் உச்சக்கட்ட அப்செட் ஆனார்கள். சங்கீதா தூக்கி போட்ட குண்டையே உங்களுக்காகத்தான் எதிர்த்து நின்றோம்; இப்போது நீங்களே இப்படி ஒரு செயலை செய்துவிட்டீர்களே என்று கலங்காத குறையாக தங்களது கோபத்தை வெளிப்படுத்தினார்கள். ஆனால் அனைத்துக்கும் அமைதியாகவே இருந்தார்.

வொர்த் இல்லையா தளபதி?: விஜய் தனது மௌனத்தை கலைக்க வேண்டும் என்று நாலா பக்கத்திலிருந்தும் வலியுறுத்தல்கள் வந்தன. அப்போது கூட்டம் ஒன்றில் பேசிய் அவர், 'சமீபத்தில் நடந்துகொண்டிருக்கும் பிரச்னைக்காக நீங்கள் ஹர்ட் ஆகாதீர்கள். அதெல்லாம் அவ்வளவு வொர்த் இல்லை' என பேசியதை பார்த்த கட்சியினர், ம்ம்க்கும் இதற்கு இவர் வாயே திறக்காமல் இருந்திருக்கலாம்; இதெல்லாம் என்ன மாதிரியான பேச்சோ என்று அலுத்துக்கொண்டார்கள். இப்படி அவரது பெர்சனல் வாழ்க்கை பல பிரச்னைகளை சந்தித்துக்கொண்டிருக்கிறது.

தேர்தலில் தாக்கம் ஏற்படுமா?: எனவே இந்த விஷயங்கள் எல்லாம் தேர்தலில் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஆனால் அவருக்கு இருந்த மிஸ்டர் க்ளீன் இமேஜ் பெண்கள் மத்தியில் சுக்குநூறாக உடைந்துவிட்டது என்பது உண்மை. இதையெல்லாம் எப்படி சரிக்கட்டி தேர்தலில் வெல்லப்போகிறாரோ என்பதும் தவெகவினரின் கவலைகளில் ஒன்றாக இருக்கிறது. அதை அவர்கள் வெளியே காட்டிக்கொள்வதில்லை அவ்வளவுதான்.

ட்ரெண்டாகும் விஜய்யின் பேட்டி: இந்நிலையில் விஜய்யின் பழைய பேட்டி ஒன்று திடீரென ட்ரெண்டாகியுள்ளது. அதாவது திரிஷாவுடன் விஜய் டிவியில் காஃபி வித் அனு நிகழ்ச்சியில் ஒருமுறை கலந்துகொண்டார். அப்போது அவரிடம் விளையாட்டு மீது இருக்கும் ஆர்வம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 'நான் தீராத விளையாட்டு பிள்ளைதான்.. ஆனால் ஸ்போர்ட்ஸில் இல்லை' என சொல்லிவிட்டார். அதை கேட்டு பக்கத்தில் இருந்த திரிஷாவோ, 'ஆஹா இவர் அதை சொல்கிறாரே' என்பதை புரிந்துகொண்டு விழுந்து விழுந்து சிரித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X