Ilaiyaraaja: சொந்த தம்பியையே ஸ்டுடியோவில் இருந்து விரட்டிய இளையராஜா... தெறித்து ஓடிய கங்கை அமரன்!
சென்னை: இந்திய திரையுலகின் மிக முக்கியமான இசையமைப்பாளர்களில் இளையராஜாவும் ஒருவர்.
அவரது இசையில் சமீபத்தில் வெளியான விடுதலை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
அதேநேரம் இளையராஜா குறித்து அடிக்கடி பல சர்ச்சையான செய்திகளும் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், இளையராஜாவின் தம்பியான கங்கை அமரனே அவரைப் பற்றி சர்ச்சையான சம்பவத்தை குறிப்பிட்டுள்ளது வைரலாகி வருகிறது.
கங்கை அமரனை விரட்டிய இளையராஜா
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகியுள்ள விடுதலை படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேபோல், இப்படத்தின் இளையராஜாவின் இசைக்கு வரவேற்பு, விமர்சனம் என இரண்டுமே கலவையாக கிடைத்தன.
இந்நிலையில், இளையராஜாவின் உடன்பிறந்த தம்பி கங்கை அமரன் ஒரு பிளாஷ்பேக் ஸ்டோரி ரசிகர்களுக்கே ஷாக்கிங் கொடுத்துள்ளார். இளையராஜாவை தெரிந்தவர்களுக்கு கங்கை அமரனை தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. இருவருமே சினிமாவில் ஒன்றாக அறிமுகமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இளையராஜா இசையமைப்பாளராக கொடிக் கட்டி பறந்த நேரத்தில், கங்கை அமரன் இயக்குநர், பாடகர், பாடலாசிரியர், நடிகர் என வெரைட்டி காட்டினார்.

முக்கியமாக கங்கை அமரன் இயக்கிய 'கரகாட்டக்காரன்' திரைப்படம் கோலிவுட்டில் மிகப் பெரிய சாதனைகளை படைத்துள்ளது. இயக்குநராக பிஸியாக வலம் வந்த கங்கை அமரன் சில படங்களுக்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இதற்கு மலேசியா வாசுதேவன் தான் பிள்ளையார் சுழியும் போட்டு தொடங்கி வைத்துள்ளார்.
அதாவது, மலேசியா வாசுதேவன் ஒரு படத்திற்கு கதை எழுதி, அதில் அவரே ஹீரோவாகவும் நடித்தார். அப்போது அந்தப் படத்திற்கு இளையராஜாவை இசையமைப்பாளராக போட்டால் சம்பளத்திற்காக அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கும் என மலேசியா வாசுதேவன் கூறியுள்ளார். அதனால், அவருக்குப் பதிலாக கங்கை அமரனை அந்தப் படத்திற்கு இசையமைத்தால் நன்றாக இருக்கும் எனவும் மலேசியா வாசுதேவன் கூறியுள்ளார்.
ஆனால் எனக்கு மியூசிக் பத்தி எதுவுமே தெரியாதுன்னு சொல்லியும் மலேசியா வாசுதேவன் விடவே இல்லை. அதன் பிறகு தயாரிப்பாளரிடம் சென்று அட்வான்ஸ் வாங்கியதும், அந்தப் படத்தின் விளம்பர போஸ்டர் நியூஸ் பேப்பரில் வெளியானது. அதில் இசையமைப்பாளர் கங்கை அமரன் என்ற பெயரை பார்த்ததும் இளையராஜா டென்ஷன் ஆகிவிட்டாராம். அப்போது ஸ்டுடியோவுக்கு போன கங்கை அமரனை இளையராஜா விரட்டிவிட்டுள்ளார்.

ஸ்டுடியோவில் பார்த்ததும், "என்னடா மியூசிக் பண்ண போறீயாமே... உனக்கு மியூசிக் பத்தி என்ன தெரியும்... கிட்டார தூக்கிட்டு இப்படியே ஓடிடு" என விரட்டியுள்ளார். இதனால் கடுப்பான கங்கை அமரனும் அங்கிருந்து கிளம்பிவிட்டாராம். அதன்பிறகு அவர்களது குரு ஜி.கே. வெங்கடேஷ் இளையராஜாவிடம் சமாதானம் பேசியுள்ளாராம். உனக்கு பதிலா வேறு யாராவது மியூசிக் பண்ண போறாங்க. அதுக்கு கங்கை அமரனே பண்ணட்டும் எனக் கூறியுள்ளார். இதனை கங்கை அமரன் தற்போது ஒரு பேட்டியில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











