அம்மாவுக்கு எதுவுமே செய்யவில்லை.. நாங்கள் செட்டில் ஆனோம்.. இளையராஜா ஓபன் டாக்
சென்னை: இசைஞானி இளையராஜா தலைமுறைகள் தாண்டி கொண்டாடப்படுபவர். ஏராளமான படங்களுக்கு இசையமைத்திருக்கும் அவர்; இந்த வயதிலும் பல படங்களுக்கு இசையமைத்து தன்னை பிஸியாக வைத்திருக்கிறார். அதுமட்டுமின்றி சிம்பொனியும் உருவாக்கி பட்டையை கிளப்பினார். அவருக்கு கடந்த ஆட்சியில் பாராட்டு விழாவெல்லாம் நடைபெற்றது. இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு அவர் கொடுத்த பேட்டி ஒன்று திடீரென இப்போது ட்ரெண்டாகியிருக்கிறது.
இந்திய சினிமாவின் இசை அடையாளமாக திகழ்ந்துகொண்டிருப்பவர் இளையராஜா. கடந்த 50 வருடங்களாக இசையமைத்துவரும் அவர் இதுவரை 1500 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இத்தனை படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் ஒரு படம் மாதிரியே இன்னொரு படத்துக்கு இசையமைக்காதது அவரது தனி சிறப்பு. அதுமட்டுமின்றி இந்தக் கால தலைமுறையினரும் அவரது இசையை கொண்டாடிவருகிறார்கள்.

சிம்பொனி இளையராஜா: சினிமாவில் இசையமைத்துவந்த அவர் கடந்த வருடத்தில்கூட லண்டனுக்கு சென்று சிம்பொனி இசையையும் அரங்கேற்றிவிட்டு வந்தார். இந்தியாவிலிருந்து முதன்முறையாக சிம்பொனியை அரங்கேற்றியவர் என்ற பெருமையையும் அவர் அதன் மூலம் பெற்றார். அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்த சூழலில்; ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு சார்பிலும் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு அப்படியே நடத்தவும் பட்டது.
இப்போதும் பிஸி: தனக்கு எத்தனை பாராட்டு விழாக்கள் நடத்தப்பட்டாலும் இளையராஜா அதோடு தேங்கிவிடுவதில்லை. இப்போது இன்னொரு சிம்பொனியை உருவாக்கும் பணியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி லெனின் பாண்டியன் என்ற படத்துக்கும் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில்கூட அந்தப் படத்தின் இசை வெகுவாக கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இளையராஜா சில வருடங்களுக்கு முன்பு கொடுத்த பேட்டி ஒன்று திடீரென தற்போது ட்ரெண்டாகியிருக்கிறது.
இளையராஜா பேட்டி: அந்தப் பேட்டியில் அவர், "நாங்கள் சென்னைக்கு வரும்போது ரேடியோவை விற்று 400 ரூபாய் பணம் கொடுத்தார் எங்கள் அம்மா. அந்தப் பணத்தை எங்களிடம் கொடுத்துவிட்டு இது போதுமா என்றும் கேட்டார். நாங்களோ வீட்டு செலவுக்குகூட 50 ரூபாய் அம்மாவுக்கு கொடுக்காமல் மொத்த பணத்தையும் வாங்கிக்கொண்டு வந்துவிட்டோம். இசையமைப்பாளராக நான் வந்த பிறகும் எனது மனைவி பிள்ளைகள் என அனைவரும் செட்டில் ஆகிவிட்டோம். அப்போதும் அம்மாவுக்கு புடவை, வளையல், நகை என எதுவுமே வாங்கிக்கொடுத்ததில்லை" என்றார் வேதனையுடன்.


Click it and Unblock the Notifications
