சத்குருனு சொல்றவன்லாம் சத்குரு கிடையாது.. ஃபயர் மோடில் இளையராஜா.. இசைஞானி விளாசிட்டாரு
சென்னை: தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாதவர் இளையராஜா. 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கும் அவர் இளம் இசையமைப்பாளர்களுக்கும் போட்டியாக திகழ்ந்துகொண்டிருக்கிறார். கடந்த வருடத்தி ஒரு சிம்பொனியை அரங்கேற்றிய அவர்; சமீபத்தில் இன்னொரு சிம்பொனியையும் எழுதி முடித்திருக்கிறார். இந்நிலையில் அவர் பேசிய வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கிறது.
இசைஞானி என்று கொண்டாடப்படுபவர் இளையராஜா. அன்னக்கிளி படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான அவர் முதல் படத்திலேயே தமிழ்நாட்டின் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துவிட்டார். அவர் இசையமைத்த பிறகுதான் நமக்கான இசையும் திரைப்படங்களில் வரும் என்று கடைக்கோடி ரசிகனும் உணர தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு படத்திலும் புது புது இசையை கொடுத்து அனைவரையும் கவர்ந்த அவர்; அறிமுகமான சில வருடங்களிலேயே நூற்றுக்கணக்கான படங்களுக்கு இசையமைத்தார்.
ஒரே நாளில் நிறைய படங்கள்: முக்கியமாக பாடலுக்கு இசையமைப்பதைவிடவும் படத்துக்கு ரீ ரெக்கார்டிங் செய்வது ரொம்பவே கஷ்டமான ஒன்று. ஆனால் அதையும் அசால்ட்டாக செய்தார் இளையராஜா. ஒரே நாளில் மூன்று படங்களுக்கு அவர் இசையமைத்த சம்பவம் எல்லாம் உண்டு. அதுமாதிரி வேறு யாரும் செய்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதில் சிறப்பு என்னவென்றால் ஒரு படத்தில் இருந்த இசை இன்னொரு படத்துக்கு இருக்காது.

சிம்பொனி முடித்த இளையராஜா: இதுவரை 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இப்போது இருக்கும் இளம் தலைமுறையினர் இசையமைப்பாளர்களுக்கும் சரி சமமான போட்டியை தனது 82ஆவது வயதில் கொடுத்துக்கொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி கடந்த வருடத்தில் ஒரு சிம்பொனியை லண்டனில் அரங்கேற்றி கெத்து காண்பித்த அவர்; சமீபத்தில் தனது இரண்டாவது சிம்பொனியை எழுதி முடித்திருக்கிறார். அதை பார்த்து பலரும் ஆச்சரியமடைந்திருக்கிறார்கள்.
தீவிரமான ஆன்மீகவாதி: இளையராஜா தீவிரமான ஆன்மீகவாதி ஆவார். அவரது ஸ்டூடியோவில் ரமண மகரிஷி புகைப்படம் எல்லாம் அலங்கரிக்கும். அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் இளையராஜாவை சாமி என்றுதான் அழைப்பார். சினிமாவுக்கு இசையமைத்தது மட்டுமின்றி ஆன்மீகம் தொடர்பாகவும் ஏகப்பட்ட பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் ராஜா பேசியிருக்கும் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
இளையராஜா பேசியது: ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், "எல்லோருக்கும் பேதம் இல்லாத அன்பை காட்டுபவன்தான் சத்குரு. சத்குருனு சொல்லிக்கொள்பவன் எல்லாம் சத்குரு கிடையாது. சத்தியமாக ஆக முடியாது" என்றார். அவர் அப்படி சொன்னபோது அந்த அரங்கமே கைத்தட்டல்களால் அதிர்ந்தது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்களோ, 'ஈஷா யோகா மையம் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவைத்தான் இசைஞானி இப்படி போட்டு பொளந்துவிட்டார்' என கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











