படம் வந்தும் ரூ.50 லட்சம் நஷ்டம்... ராஜா ராஜாதான்.. இளையராஜா மேஜிக்கால் பெத்த லாபம்!

சென்னை: ராஜா கைய வச்சா அது ராங்கா போனது இல்லை. ராங்கா பூடுமா டேய் என்ற வரிகளுக்கேற்ப இசைஞானி இளையராஜா ஹார்மோனி பெட்டியில் கையை வைத்தால் இசைமழை கொட்டும். அது எப்போதும் ராங்கா போனது கிடையாது. 80களில் பல திரைப்படங்கள் ஓடியதற்கு காரணம் இளையராஜா. இயக்குனர்கள் தங்களின் படம் வெற்றியடைய தங்களை 50 சதவீதம் நம்பினால் மீது 50 சதவீதம் இளையராஜாவையே நம்புவார்கள். ராஜாவின் பாடல்களும், பின்னணி இசையும் படத்தை வெற்றி பெற செய்துவிடும் என உறுதியாக இருந்தனர்.

இசைக்கு வயது 83: சினிமா பிரபலங்கள் பலரும் வியந்து பார்க்கும் விசயம் என்னவென்றால் இளையராஜா இன்றும் எறும்பை போல் சுறுசுறுப்பாக இசையமைக்கிறார். 1 பாட்டிற்கு குறைந்தது 5 நிமிடம் தான். 83 வயது ஆகிவிட்டாலும் படங்களுக்கு இசையமைப்பது, இசை நிகழ்ச்சிகளை நடத்துவது, சிம்பொனி இசையமைப்பது என பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். விடுதலை படத்தில் இடம்பெற்ற தினம் தினமும் பாட்டு காதல் மயக்கத்தில் கடத்தி சென்றது.

ilaiyaraja avatharam nazar

பின்னணி இசை: உதாரணத்திற்கு இயக்குநர் பாரதிராஜா முதல் மரியாதை படத்தை பற்றி சிலாகித்து பேசியிருப்பார். இளையராஜாவிற்கு முதல் மரியாதை திரைப்படம் பிடிக்கவில்லை. ஆனால், அவரது பின்னணி இசை, பாட்டும் சக்க போடு போட்டன. அந்த நிலாவத்தான் கையில பிடிச்சேன், பூங்காற்று விரும்புமா என ஒவ்வொரு பாடலும் ரசிகர்களின் மனதை உலுக்கி எடுத்துவிட்டது. பின்னணி இசை என்றால் அது இளையராஜா தான். மேஸ்ட்ரோ என்ற பட்டமும் இதனால் கிடைத்தது தான். பெரிய இயக்குநர்களில் சிலர் நாம் படத்தை எடுத்துவிட்டோம். மிச்சத்தை ராஜா பார்த்துக்கொள்வார் என நினைத்துள்ளனர். அந்த அளவிற்கு இளையராஜாவும் அர்ப்பணிப்போடு இசையை கொடுத்தார். இயக்குனர் ஒரு காட்சியில் சொல்ல வரும் உணர்வுகளை ராஜா தனது பின்னணி இசை மூலமே கடத்திவிடுவார்.

அவதாரம்: சில படங்கள் மொக்கையாக இருந்தாலும் இளையராஜாவின் இசையால் பல படங்கள் வெற்றியடைந்துள்ளன. அதேபோன்று தான் நாசர் இயக்கி நடித்த அவதாரம் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஆனால், இளையராஜாவின் இசையால் அப்படம் தயாரிப்பாளருக்கு பெரிய லாபத்தை ஈட்டு தந்துள்ளது. இப்படத்தில் தென்றல் வந்து தீண்டும் போது பாடல் உருவான விதத்தை நாசரே பல மேடைகளில் பேசி சிலாகித்து ரசித்து பேசியிருப்பார். ரசிகர்களுக்கும் அருமையான அனுபவமாகவும் இது இருந்தது. தயாரிப்பாளர் இல்லாமல் இப்படத்தை எடுத்து முடித்ததாகவும் நாசரே தெரிவித்திருப்பார். இளையராஜா என்றால் கண்ணீர் வந்துவிடும் என்று கூறியுள்ளார். எவர்கிரீன் ஹிட் பாடல்களில் தென்றல் வந்து தீண்டும் போது பாடல் இடம்பிடித்துள்ளது. அவதாரம் பல துயரங்களை தாண்டி வென்றுள்ளது. நாசரின் பன்முத்தன்மையை வெளிப்படுத்திய படமும் இதுதான்.

ilaiyaraja avatharam nazar

கூத்து தொழிலை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியிருந்தார் நாசர். ஆனால், இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. எனவே, தயாரிப்பாளருக்கு 50 லட்சம் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், இளையராஜாவின் பாடல்களை ஒரு ஆடியோ நிறுவனத்திடம் விற்றவகையில் ஒரு கோடியே 50 லட்சம் லாபம் கிடைத்ததாம். இப்படி பல படங்கள் நஷ்டமாகி இளையராஜாவின் இசையால் தயாரிப்பாளர்களுக்கு லாபம் அடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X