Ilaiyaraja: இளையராஜாவைக் காப்பாற்றிய ஏ.ஆர். ரகுமானின் அப்பா.. இசைஞானியே உண்மையைச் சொல்லிட்டாருப்பா!
சென்னை: இசைஞானி இளையராஜா கடந்த சில வாரங்களாகவே தலைப்புச் செய்திகளில் இடம் பெற்று வருகிறார். காரணம் அவர் லண்டனில் அரங்கேற்றம் செய்த சிம்பொனி மிகவும் முக்கிய காரணம். சில தினங்களுக்கு கூட பிரதமரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். இது மட்டும் இல்லாமல், தமிழ்நாடு அரசு இவருக்கு பாராட்டு விழா நடத்தவுள்ளது. இப்படியான நிலையில் இளையராஜா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானிடம் அவரது தந்தை ஆர்.கே. சேகர் குறித்து பேசினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இசைஞானி இளையராஜா, தமிழ் சினிமாவில் அறிமுகமான காலத்தில் இருந்து அடுத்த 20 ஆண்டுகளுக்கு கொடி கட்டிப் பறந்து கொண்டு இருந்தார். ஆனால் அவரது திரைவாழ்க்கைக்கு சவாலை ஏற்படுத்தியவர் என்றால் அது, ஏ.ஆர். ரகுமான். இவர் இசைஞானியிடம் அசிஸ்டெண்டாக பணியாற்றியவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால், இவர்களுக்கு இடையில் தொழில் பகை உள்ளது. இளையராஜாவுக்கு ஏ.ஆர். ரகுமானின் வளர்ச்சி பிடிக்கவில்லை என்ற கட்டுக் கதைகள் எல்லாம், இன்றளவும் திரையுலகில், உலா வருகிறது.

ஏ.ஆர். ரகுமான்: ஆனால், ஏ.ஆர். ரகுமானின் வளர்ச்சி குறித்து இளையராஜா எப்போது தனிப்பட்ட அக்கறையை செலுத்தி வந்துள்ளார் என்பதற்கு, பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. அதாவது, ரோஜா படத்திற்கு இசைக்கு தேசிய விருது வழங்கும் போதும், தேர்வுக்குழு கமிட்டியில் இருந்த அனைவரும் வாக்கு செலுத்திய போது இளையராஜாவுக்கும் ஏ.ஆர். ரகுமானுக்கும் ஒரே அளவிலான வாக்குகள் செலுத்த பட்டிருந்தது. அப்போது தேர்வுக் குழுவின் தலைவராக இருந்த பாலு மகேந்திரா, தனக்கு இருந்த இரண்டு வாக்குகளையும், ஏ.ஆர். ரகுமானுக்கு செலுத்தினார். இதன் மூலம் ஏ.ஆர். ரகுமான் தனது முதல் படத்திலேயே தேசிய விருது வாங்கினார். இது குறித்து தெரிந்து கொண்ட இளையராஜா, பாலுமகேந்திராவைப் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக பாலுமகேந்திரா பேட்டி ஒன்றில் தெரிவித்து உள்ளார்.

இளையராஜா: அதேபோல் ஏ.ஆர். ரகுமான் ஆஸ்கார் வென்று வந்தபோது, அவரை மனதார பாராட்டியவர்களில் இளையராஜாவும் ஒருவர். இப்படி இருக்கும்போது, இளையராஜா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது, ஏ.ஆர் ரகுமானின் தந்தையான சேகர் குறித்து பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் இப்போதும் உலா வருகிறது.
ஏ.ஆர். ரகுமானின் அப்பா: ஏ.ஆர். ரகுமான் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, " உனக்கு துரை பகவான் எனும் இயக்குநரைத் தெரியாது ரகுமான். உனது அப்பா, சேகர் சாருக்கு அவரை நன்றாகத் தெரியும். நாங்கள் மலையாளப் படத்திற்கு இசையமைத்து கொண்டு இருப்போம். அப்போது இசைக் கலைஞர்கள் என்னிடம் வந்து எதாவது கேள்வி கேட்பார்கள். உடனே உன்னுடைய அப்பா, சேகர் சார், அங்க எல்லாம் எதுவும் கேட்காதீங்க, அவரு ( இளையராஜா) மாஸ்டரின் ஸ்டூடண்ட். நான் இசை கற்றுக் கொள்ளும் மாஸ்டரின் (தன்ராஜ் மாஸ்டர்) ஸ்டூடண்ட் எனச் சொல்லி, என்னை மற்றவர்களிடம் இருந்து காப்பாற்றுவார்" என பேசியுள்ளார். இளையராஜா பேசியதைக் கேட்ட ஏ.ஆர். ரகுமான் நெகிழ்ச்சியோடு அமர்ந்திருந்தார். இளையராஜாவின் இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இளையராஜா பேசிய வீடியோவும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











