யுவன் ஷங்கர் ராஜாவை அடித்த இளையராஜா.. என்ன காரணம் தெரியுமா?.. கோபக்காரர்தான் போல

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் ஷங்கர் ராஜா. அவரது இசையமைப்பில் கடைசியாக GOAT திரைப்படம் வெளியானது. அதில் அவரது இசை ஓரளவுக்குத்தான் கொண்டாடப்பட்டது, பல வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் யுவன் இணைந்ததால் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பு பூர்த்தியாகவில்லை. இந்தச் சூழலில் யுவன் ஷங்கர் ராஜாவை இளையராஜா அடித்த சம்பவம் குறித்து தெரியவந்திருக்கிறது.

தமிழ் சினிமாவின் இசை போக்கை மாற்றி வைத்த பெருமை இளையராஜாவை சேரும். அவரது இரண்டாவது மகன் யுவன் ஷங்கர் ராஜாவும் கோலிவுட்டில் மிகச்சிறந்த இசையமைப்பாளராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அரவிந்தன் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான அவர் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். 90ஸ் கிட்ஸ் மட்டுமின்றி இப்போதைய 2K கிட்ஸையும் யுவன் தனது இசையால் பெரிதாக கவர்ந்திருக்கிறார்.

throwback stories yuvan shankar raja ilayaraaja

பிரச்னைகளை தாண்டிய யுவன்: யுவன் ஷங்கர் ராஜா பீக்கில் இருந்தபோது அவரது பர்சனல் வாழ்க்கையில் சில பிரச்னைகள் வந்தன. முக்கியமாக அவரது தாய் ஜீவா உயிரிழந்தது அவரை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. அதோடு சேர்த்து திருமண தோல்விகளும் அவருக்கு ஏற்பட்டன. சூழல் இப்படி இருக்க ஹிந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்துக்கு மாறி திருமணம் செய்துகொண்டார். அவருக்கு இப்போது ஒரு மகள் இருக்கிறார். அவரது திருமண வாழ்க்கை குறித்தும் சில சர்ச்சைகள் எழுந்தன. ஆனால் யுவன் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளவில்லை.

இளையராஜாவின் ரியாக்‌ஷன்: யுவன் மதம் மாறியது இளையராஜாவுக்கு பிடிக்கவில்லை; அதனால்தான் அவரது திருமணத்துக்கு செல்லவில்லை என்ற கடந்த பல வருடங்களாகவே ஒரு பேச்சு இருந்தது. ஆனால் இதுகுறித்து விளக்கமளித்த யுவன், 'தான் மதம் மாறியபோது அப்பா எதுவுமே சொல்லவில்லை. ஒரு நாளைக்கு மூன்று முறை கடவுளை கும்பிடும் மதத்துக்கு மாறுகிறேன் என்று சந்தோஷம்தான் பட்டார். உன்னுடைய திருமணத்துக்கு நான் வந்தால் அங்கிருப்பவர்களுக்கு அசௌகரியம் ஏற்படும் என சொல்லித்தான் திருமணத்துக்கு வரவில்லை' என கூறினார்.

GOAT யுவன்: இப்படி பல விஷயங்களை கடந்து வந்திருக்கும் யுவன் ஷங்கர் ராஜா கடைசியாக விஜய் நடிப்பில் உருவான GOAT படத்துக்கு இசையமைத்திருந்தார். புதிய கீதை படத்துக்கு பிறகு இப்போதுதான் விஜய்க்கு மீண்டும் அவர் இசையமைத்ததால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை யுவனின் இசை பூர்த்தி செய்யவில்லை. பாடல்களிலும், ரீ ரெக்கார்டிங்கிலும் யுவன் சுமார் ரகமாய்த்தான் வேலை செய்திருக்கிறார் என்று பேச்சு பலமாக எழுந்தது.

யுவனை அடித்த இளையராஜா: இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜாவை இளையராஜா அடித்த சம்பவம் தெரியவந்திருக்கிறது. அதாவது யுவன் சிறு வயதாக இருந்தபோது அவரை கடற்கரைக்கு அழைத்து செல்வதாக இளையராஜா கூறி கிளம்பிக்கொண்டிருந்தாராம். அந்த சமயம் பார்த்து ஒரு இயக்குநர் ராஜாவின் வீட்டுக்கு வந்து கதையை சொல்ல ஆரம்பித்துவிட்டாராம். யுவனோ ஆர்வத்துடன் காரில் அமர்ந்திருக்க; இளையராஜா கதை கேட்பதில் மூழ்கிவிட்டாராம். ஆனால் யுவனோ காரில் தொடர்ந்து ஹாரனை அழுத்திக்கொண்டே இருந்தாராம்.

இப்படி தொடர்ந்து யுவன் செய்துகொண்டே இருக்க; இளையராஜாவுக்கு கதை கேட்பதில் டிஸ்டர்ப் ஏற்பட்டதாம். பொறுத்து பொறுத்து பார்த்த இளையராஜா நேராக காருக்கு வந்து யுவனை அடி வெளுத்துவிட்டாராம். அந்த ஒருமுறை மட்டும்தான் இத்தனை வருடங்களில் இளையராஜாவிடம் யுவன் ஷங்கர் ராஜா அடி வாங்கியிருக்கிறாராம். இதனை யுவனே ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X