ஒழுங்கா இங்கிருந்து கிளம்பிடு.. தயாரிப்பாளரை திட்டிய இளையராஜா.. என்ன நடந்தது தெரியுமா?
சென்னை: இசைஞானி என்று ரசிகர்களால் போற்றப்படுபவர் இளையராஜா. சுமார் 1500 படங்களுக்கும் மேல் இசையமைத்திருக்கும் அவர் கடைசியாக ஜமா மற்றும் விடுதலை 2 படத்துக்கு இசையமைத்திருந்தார். இரண்டு படங்களின் இசையும் நல்ல வரவேற்பையே பெற்றன. இந்தச் சூழலில் தயாரிப்பாளர் ஒருவரை இளையராஜா திட்டிய சம்பவம் தெரியவந்திருக்கிறது.
தமிழ் திரையிசையில் இளையராஜாவின் பங்கு மிக பெரியது. அவர் வந்து இசையமைத்த பிறகு பாட்டு பாட பாமரனும் வாயை திறந்தான். அன்னக்கிளியில் அவர் இசையமைத்த ஒவ்வொரு பாடலும் முத்து ரகத்தில் இருப்பவை. அந்தப் பாடல்களை கேட்ட பிறகு அட இது என்ன ப்பா நம்ம ஊர் இசையால்ல இருக்கு என்று பலரும் ரசிக்க தொடங்கினார். எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு பிறகு தமிழ் திரையிசையின் முகத்தை பெரிதாக மாற்றிக்காட்டியவர் இளையராஜா மட்டும்தான் என்பது யாராலும் மறக்க முடியாதது.

தொட்டதெல்லாம் ஹிட்: இளையராஜா முதன்முதலாக அன்னக்கிளியில் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட். அதற்கு பிறகு இளையராஜாவின் கோட்டையாக தமிழ் சினிமா திகழ்ந்தது. மற்ற இசையமைப்பாளர்கள் அந்த கோட்டைக்குள் நுழைந்தாலும் ராஜாவின் சாம்ராஜ்ஜியத்தை அசைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இளையராஜாவும் தனது ஒவ்வொரு இசையிலும் வெரைட்டி காண்பித்து ரசிகர்களை தனது தளபதியாக வைத்துக்கொண்டார்.
அவ்வளவு பிஸி: இளையராஜா போல் வேறு எந்த இசையமைப்பாளரும் பிஸியாக இருந்திருப்பார்களா என்பது சந்தேகமே. ஒருநாளைக்கு கிட்டத்தட்ட நான்கு படங்களுக்கு இசையமைத்த வரலாறு எல்லாம் உண்டு. பாடல்கள் மட்டுமின்றி ரீ ரெக்கார்டிங்கும் அதில் சேரும். அதேபோல் ஒரு பண்டிகைக்கு இளையராஜா இசையமைத்த படங்கள் மட்டுமே ஏராளம் வந்தது உண்டு. அந்த அளவுக்கு இளையராஜா பிஸியாக இருந்தார்.
1500 படங்கள்: இளையராஜா இதுவரை 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். ஒவ்வொரு பாடலின் ட்யூனும் இன்னொரு பாடலுக்கு ரிப்பீட் ஆகாமல் இதுவரை அவர் இசையமைத்துவருவது எட்டாவது அதிசயம் என்று அவரது ரசிகர்கள் கூறுவார்கள். இப்படி புகழின் உச்சியில் இருந்தாலும் இளையராஜா தலைக்கனம் பிடித்தவர் என்று ஒருதரப்பினர் கூறுவார்கள். அவர் மீது விமர்சனங்கள் பல வந்தாலும் எந்தவிதமான ரியாக்ட்டையும் அவர் செய்துகொள்வதில்லை.
தயாரிப்பாளரை திட்டிய இளையராஜா: இந்நிலையில் தயாரிப்பாளர் ஒருவரை இளையராஜா திட்டிய சம்பவம் தெரியவந்திருக்கிறது.அதாவது மலையாள படம் ஒன்றுக்கு இசையமைத்தாராம் இளையராஜா. அப்போது அவருக்கு சம்பளம் கொடுக்க அந்தத் தயாரிப்பாளரால் முடியவில்லையாம். என்ன செய்வதென்று தெரியாமல் தனது மனைவியின் தாலியை ஒரு டப்பாவில் போட்டு கொடுத்தாராம். அதனை பார்த்த ராஜாவோ உச்சக்கட்ட கோபமாகி இதை எடுத்துட்டு இங்கிருந்து ஒழுங்கா போயிடு என்று திட்டிவிட்டாராம்.


Click it and Unblock the Notifications











