ஒவ்வொரு வீடா என்னுடைய பாடல்கள்.. இளையராஜா வாழ்வில் நடந்த செம சம்பவம்.. படத்தில் சீனாகவே வைக்கலாம்
சென்னை: இசைஞானி என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் இளையராஜா. இதுவரை 1000க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கும் அவர் சமீபத்தில் லண்டனில் இருக்கும் அப்பல்லோ அரங்கத்தில் வேலியன்ட் என்கிற பெயரில் சிம்பொனியை அரங்கேற்றினார். இந்தியாவிலிருந்து சிம்பொனியை அரங்கேற்றிய முதல் நபர் என்கிற பெருமையை அவர் பெற்றிருக்கிறார். இந்நிலையில் இளையராஜா தனது வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் குறித்து பேசியது ட்ரெண்டாகியிருக்கிறது.
இளையராஜா என்றாலே அறிமுகம் தேவையில்லை. அந்த அளவுக்கு அவர் இந்தியர்களின் மனதில் இடம்பிடித்திருக்கிறார். அவரது இசை இல்லாமல் ஒரு நபர்கூட ஒரு நாளினை கடந்தது இல்லை. இன்பம், துன்பம், தோல்வி, வெற்றி, கொண்டாட்டம் என மனிதனின் அத்தனை உணர்வுகளுக்கும் அவரது இசைதான் எப்போதும் துணையிருக்கக்கூடியவை. எத்தனையோ இசையமைப்பாளர்கள் வந்தாலும் அவர்கள் அனைவருமே; இளையராஜா போட்டுக்கொடுத்த பாதையில்தான் தாங்கள் போய்க்கொண்டிருக்கிறோம் என்று ஓபனாகவே சொல்வதுண்டு.
இந்த வயதிலும் உழைப்பு: இளையராஜாவுக்கு தற்போது 82 வயது ஆகிறது. இந்த வயதில் பலரும் ஓய்வெடுக்கத்தான் விரும்புவார்கள். ஆனால் ராஜாவோ ஓய்வுக்கு ஓய்வு கொடுத்து தனது உழைப்பை கொட்டிவருகிறார். தேடலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார். அவர் தலைக்கனம் பிடித்தவர் என்று ஒருதரப்பினர் கூறினாலும்; அவரை கொண்டாடாமல் இருக்க முடியாது என்பதுதான் உண்மை. தன்னை தலைக்கனம் என்று சொல்பவர்களுக்கெல்லாம் தனது இசையால் தொடர்ந்து பல வருடங்களாக பதிலளித்துக்கொண்டே இருக்கிறார்.

சிம்பொனி உருவாக்கிய ராஜா: சூழல் இப்படி இருக்க அவர் வேலியன்ட் என்கிற பெயரில் சிம்பொனி ஒன்றை உருவாக்கினார். அந்த சிம்பொனியை லண்டனில் அரங்கேற்றம் செய்ய இளையராஜா முடிவு செய்தார். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர், நடிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் அவரை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்தினை தெரிவித்தார்கள். மேலும் கண்டிப்பாக இளையராஜா இந்த சிம்பொனியை அரங்கேற்றி தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்ப்பார் என்றும் ரசிகர்கள் கூறினார்கள்.
சிம்பொனியை அரங்கேற்றிய ராஜா: ஃபிக்ஸ் செய்யப்பட்டபடி லண்டனில் இருக்கும் அப்பல்லோ அரங்கத்தில் சிம்பொனி இசையை அரங்கேற்றினார் ராஜா. மொத்தம் நான்கு பகுதிகளாக கொண்ட அந்த சிம்பொனியை மொத்தம் 80 இசை கலைஞர்கள் இசைத்தார்கள். ஒவ்வொரு பகுதி முடிந்த பிறகும் அரங்கில் கூடியிருந்தவர்கள் மெய் சிலிர்த்துப்போய் இளையராஜாவை கொண்டாடி தீர்த்தார்கள். உலகளவில் இந்தியாவிலிருந்து சிம்பொனி அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்கிற பெருமையை பெற்றிருக்கிறார் அவர். அதேபோல் இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு பாராட்டு விழாவையும் நடத்தவிருக்கிறது.
ட்ரெண்டாகும் பேட்டி: அந்த சிம்பொனியை பல நாடுகளிலும் இசைத்து காண்பிக்க முடிவு செய்திருக்கிறார். இந்நிலையில் அவர் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. ஒரு விழாவில் பேசிய அவர், "நான் இசையமைத்திருந்த அன்னக்கிளி திரைப்படம் ரிலீஸானது. எல்லா பாட்டுக்களும் ஹிட்டாகின. நான் ஒரு ஏரியாவில் தங்கியிருந்தேன். அந்த சமயத்தில் அன்னக்கிளி பாடல்களை ஆல் இந்தியா ரேடியோவில் போட்டுக்கொண்டே இருப்பார்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் எல்லாம் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் அன்னக்கிளி பாடல்கள் போட்டுட்டாங்க என்று சொல்வார்கள்.
ஒலித்த பாடல்கள்: அதற்கு பிறகு ஒவ்வொருவரும் அந்தப் பாடலை கேட்பார்கள். நான் அந்த சாலையில் நடந்து ஒவ்வொரு வீட்டையும் கடக்க கடக்க அன்னக்கிளி பாடல்கள் முழுக்க ஒலித்துக்கொண்டிருப்பது என் காதுகளில் கேட்கும். நான் சாதாரணமாக நடந்து போய்க்கொண்டிருப்பேன். ஆனால் அவர்களுக்கெல்லாம் நான்தான் அந்தப் பாடல்களை உருவாக்கினேன் என்று அப்போது தெரியாது" என்றார்.


Click it and Unblock the Notifications











