இளையராஜவுக்கும், ரஞ்சிதாவுக்கும் இப்படி ஒரு தொடர்பா?.. அதுவும் முதல் படத்திலேயே நடந்த விஷயம் தெரியுமா?
சென்னை: நடிகை ரஞ்சிதா தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர். கார்த்திக், சத்யராஜ் உள்ளிட்ட ஹீரோக்களுடன் நடித்த அவர் இப்போது நித்தியானந்தாவிடம் ஐக்கியமாகியிருக்கிறார். அவர்கள் இரண்டு பேரும் நெருக்கமாக இருந்த வீடியோ ஒன்று கடந்த 2010ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. சூழல் இப்படி இருக்க கடந்த சில நாட்களாக ரஞ்சிதா பற்றிய தகவல்களும், அவர் அளித்த பேட்டிகளும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளன.
ரஞ்சிதா என்ற பெயரை தமிழ்நாடு அவ்வளவு சீக்கிரம் மறந்துவிடாது. 90களில் சினிமாவில் நடிக்க வந்த அவர் தனது அழகாலும், திறமையாலும் தொடர்ந்து படங்களில் நடித்தவர். அவர் நடித்த நாடோடி தென்றல், அமைதிப்படை, ஜெய்ஹிந்த் உள்ளிட்ட ஏராளமான படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தவை. கண்டிப்பாக ரஞ்சிதா தமிழ் சினிமாவில் பெரிய ரவுண்டு வருவார் என்று கணிக்கப்பட்டது. ஆனால் ஏதோ காரணங்களால் அவருக்கான சினிமா வாய்ப்புகள் திடீரென குறைய ஆரம்பித்தன.

நித்தி - ரஞ்சிதா: அவர் நடிப்பில் கடைசியாக ராவணன் படம் வெளியானது. அந்தப் படத்தில் பிரபுவுக்கு மனைவியாக நடித்திருந்தார். அதற்கு பிறகு சினிமாவுக்கு ஒட்டுமொத்தமாக முழுக்கு போட்ட அவர் ஆன்மீக வழியில் பயணப்பட ஆரம்பித்தார். அந்தவகையில் நித்தியானந்தாவின் சீடராக மாறி அவரிடமே ஐக்கியமானார். அப்படிப்பட்ட சூழலில்தான் அவரும், நித்தியும் ஒரு அறையில் படு நெருக்கமாக இருந்த வீடியோ ஒன்று தனியார் சேனலில் லீக்கானது.
பெரும் பரபரப்பு: அந்த வீடியோ வெளியே வரும்வரை தமிழ்நாட்டில் நித்தியானந்தா செல்வாக்கு மிகுந்தவராக இருந்தார். அவரது ஆன்மீக உரையும் சில தனியார் சேனல்களில் ஒளிபரப்பப்பட்டது. இந்த வீடியோ வெளியான பிறகு நித்தியானந்தாவுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. அதேபோல் நடிகை ரஞ்சிதாவையும் பலர் வறுத்தெடுத்தனர். ஆனால் வீடியோவில் இருப்பது தான் இல்லை என்பதை தொடர்ந்து காத்திரமாக பதிவு செய்துகொண்டே வந்தார் ரஞ்சிதா.
பிரதமர் ரஞ்சிதா: சூழல் இப்படி இருக்க நித்தியானந்தா தனது சீடர்கள் கூட்டத்துடன் தமிழ்நாட்டிலிருந்து பெங்களூருக்கு சென்று; அங்கிருந்து தனி தீவுக்கு சென்றுவிட்டார். அந்தத் தீவுக்கு கைலாசா என்று பெயர் வைத்து நாடாகவும் பிரகடனப்படுத்திக்கொண்டார். அந்த நாட்டுக்கு ரஞ்சிதாவை பிரதமராகவும் நியமித்தார். இப்போது கைலாசாவின் பிரதமராக ரஞ்சிதா பொறுப்பு வகித்துவருவதாக பரவலாக பேசப்படுகிறது.
ட்ரெண்டான பேட்டி; கடந்த சில வருடங்களாகவே ரஞ்சிதாவை மக்கள் மறந்திருந்தார்கள். ஆனால் சில நாட்களுக்கு முன்பு ரஞ்சிதா அளித்த பழைய பேட்டி ஒன்று திடீரென ட்ரெண்டானது. அதில் அவர், 'அந்த வீடியோவால் எனது வாழ்க்கையே போய்விட்டது. என்னுடைய கணவரும் என்னைவிட்டு பிரிந்துவிட்டார். நான் நித்தியானந்தவுடன் தான் இருக்கிறேன். ஆன்மீக வழியில்தான் பயணிப்பேன். ஊடகங்கள்தான் எனது விஷயத்தை பொதுவெளியில் துகில் உரித்துவிட்டார்கள்' என்று வேதனையுடன் குறிப்பிட்டிருந்தார்.
இளையராஜா, ரஞ்சிதா: அவரது இந்தப் பேட்டி ட்ரெண்டானதை அடுத்து மீண்டும் ரஞ்சிதா லைம் லைட்டுக்கு வந்திருக்கிறார். இந்நிலையில் அவரது முதல் படமான நாடோடி தென்றல் படம் பற்றி சில விஷயங்கள் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. அதாவது அந்தப் படத்தை பாரதிராஜா இயக்கியிருந்தார். கார்த்திக் ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால் அந்தப் படத்தின் கதை இசையமைப்பாளர் இளையராஜா எழுதியது. வசனங்களை எழுத்தாளர் சுஜாதா எழுதியிருந்தார். இதனை கவனித்த ரசிகர்கள், அட ரஞ்சிதா முதல் படத்திலேயே இளையராஜாவின் கதையில் நடித்திருக்கிறாரே. இது அவ்வளவு சூப்பரான விஷயம். ஆனால் நித்தியானந்தாவால் இப்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லையே என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











