விஜயகாந்த்தை பார்த்து பதறிப்போன ரஜினிகாந்த் - எதற்காக தெரியுமா?.. குட்டி ப்ளாஷ் பேக்

சென்னை: நடிகர் விஜயகாந்த்தை பார்த்து ரஜினிகாந்த் பதறிப்போன சம்பவம் ஒன்று ரஜினியின் வீட்டிலேயே அரங்கேறியிருக்கிறது

ரஜினி, கமல் ஹாசன் கோலோச்சியிருந்த காலத்தில் சினிமாவில் நுழைந்தவர் விஜயகாந்த். அதேபோல் கருணாநிதி, ஜெயலலிதா ஆக்டிவ்வாக அரசியலில் இருந்தபோது தனிக்கட்சி ஆரம்பித்து அதகளம் செய்தவர் விஜயகாந்த். இப்போது உடல்நல குறைவு காரணமாக ஓய்வில் இருக்கிறார்.

தொடர் ஹிட்டுகள் கொடுத்த விஜயகாந்த்

தொடர் ஹிட்டுகள் கொடுத்த விஜயகாந்த்

ரஜினி, கமல் கோலோச்சியிருந்த காலகட்டத்தில் விஜயகாந்த் திரைத்துறைக்குள் நுழைந்ததால் அவரால் தாக்குப் பிடிக்க முடியுமா என்றுதான் பலரும் யோசித்தனர். ஏனெனில் அவரது நிறம், உயரம் என வெறும் உடலை வைத்து விஜயகாந்த்தை கணக்கிட்டு வந்த யோசனை அது. ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத விஜயகாந்த் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதை சிறப்பாக கொடுத்தார். அதனால் வைதேகி காத்திருந்தாள், மாநகர காவல், ஊமை விழிகள், கேப்டன் பிரபாகரன் என தொடர் ஹிட்டுகளை கொடுத்து ரஜினி, கமலுக்கு போட்டியாக வளர்ந்தார்.

ஈழத்துக்காக உண்ணாவிரதம் இருந்த விஜயகாந்த்

ஈழத்துக்காக உண்ணாவிரதம் இருந்த விஜயகாந்த்

ஈழம், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பெயரை கேட்டாலே பதறிய தமிழ் சினிமாவில் விஜயகாந்த் மட்டும்தான் ஈழ மக்களுக்காக முதலில் உண்ணாவிரதம் இருந்தவர். அதேபோல், தனது மகனுக்கும் பிரபாகரன் என பெயர் சூட்டியவர். அதுமட்டுமின்றி கலைஞர் கருணாநிதிக்கு தங்க பேனா கொடுத்தால் ஜெயலலிதா கோபித்துக்கொள்வார் என சிலர் அட்வைஸ் கூற அதனால் என்ன அவருடைய தமிழுக்கு நான் தங்க பேனா கொடுக்கிறேன் என பெரும் விழா அமைத்து அந்த பேனாவை பரிசளித்தவர். நடிப்பு மட்டுமின்றி இப்படி அரசியல், சமூகம் சார்ந்த விஷயங்களில் முன்னணி நடிகராக இருக்கும்போதே அதிகம் தலையிட்டவர் விஜயகாந்த்.

நடிகர் சங்க தலைவராக கெத்து காண்பித்த விஜயகாந்த்

நடிகர் சங்க தலைவராக கெத்து காண்பித்த விஜயகாந்த்

தென்னிந்திய நடிகர் சங்கம் கடனில் இருந்தபோது அந்த சங்கத்துக்கு தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட விஜயகாந்த்; அந்தக் கடனை அடைப்பதற்கு ஏகப்பட்ட யோசனைகளை செய்தார். அதில் ஒன்றுதான் சிங்கப்பூர், மலேசியாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதுவரை யாரும் அப்படி ஒரு நிகழ்வை அரங்கேற்றியதில்லை என்பதுதான் உண்மை. ரஜினி, கமலில் தொடங்கி அப்போது அறிமுகமான ஹீரோ ஷாம்வரை அனைவரும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருப்பர்.

ரஜினி வீட்டு ஹாலில் தர்ணா செய்த விஜயகாந்த்

ரஜினி வீட்டு ஹாலில் தர்ணா செய்த விஜயகாந்த்

சீனியர், ஜூனியர் நடிகர்கள், நடிகைகள் என அனைவரும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கு ஒரே காரணம் விஜயகாந்த் மட்டும்தான். அந்த கலை நிகழ்ச்சிக்கு அனைவரையும் ஒருங்கிணைத்த விஜயகாந்த் ரஜினிகாந்த்தையும் அழைக்க திட்டமிட்டாராம். ஆனால் ரஜினிகாந்த் வரமாட்டார் என சிலர் கூற; நேராக ரஜினியின் வீட்டுக்கு சென்றாராம் விஜயகாந்த். உள்ளே சென்றவுடன் ரஜினி வீட்டின் ஹாலில் தரையில் அமர்ந்துவிட்டார் விஜயகாந்த்.

அதைக் கண்டு பதறிய ரஜினிகாந்த், ‘என்ன விஜி கீழ உட்காருறீங்க சேர்ல உட்காருங்க' என வேண்டுகோள் வைத்திருக்கிறார். உடனடியாக விஜயகாந்த், 'நீங்கள் கலை நிகழ்ச்சிக்கு வரேனு ஒத்துக்குட்டாதான் நான் சேர்ல உட்காருவேன் என கூறியிருக்கிறார். அதனையடுத்துதான் ரஜினிகாந்த் அந்த கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்தத் தகவலை நடிகர் மீசை ராஜேந்திரன் பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டார்.

நடிகர் சங்கத்துக்காக சண்டை செய்த விஜி

நடிகர் சங்கத்துக்காக சண்டை செய்த விஜி

அதேபோல், சிங்கப்பூரில் நடந்த கலை நிகழ்ச்சி முடிந்த பிறகு ஏஜென்சியின் தலைவர் டிக்கெட் விற்பனையில் 70 லட்சம் ரூபாய் ஏமாற்ற பார்த்தது. அதனை தெரிந்துகொண்ட விஜயகாந்த், ஹோட்டலில் வைத்து பணத்தை ஏமாற்ற முயன்ற ஏஜென்சிக்காரரை அடித்து பணத்தை மீண்டும் பெற்றுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X