சரண்யா - பொன்வண்ணனின் காதலின் ஆரம்ப புள்ளி தெரியுமா? மகளுக்கே நிச்சயமானாலும் காவிய காதல் தான் போல

சென்னை: நடிகை சரண்யா பொன்வண்ணின் மகள் திருமண நிச்சயதார்த்தம் குறித்த தகவல்கள் இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளன. ஒரு சிலர் சரண்யா பொன்வண்ணின் மூத்த மகளுக்கு நிச்சயதார்த்தமா? இல்லை இளைய மகளுக்கு நிச்சயதார்த்தமா என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள். மூத்த மகளுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இது இளையமகள் சாந்தினியின் நிச்சயதார்த்தம் என்று விளக்கமும் கொடுக்கிறார்கள்.

மேலும் ஒரு சிலரோ மாப்பிள்ளை என்ன செய்கிறார்? இது காதல் திருமணமா இல்லை பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமா என்ற கேள்வியைக் கேட்டு வருகிறார்கள். இதற்கு சிலரோ, சரண்யாவும் பொன்வண்ணுமே காதல் திருமணம் தான் செய்து கொண்டார்கள். அப்படி இருக்கும்போது அவர்களின் மகளுக்கும் காதல் திருமணம் ஆகத்தான் இருக்கும் என்றும் பதில் அளிப்பவர்களையும் பார்க்க முடிகிறது. இந்நிலையில் சரண்யாவுக்கும் அவரது காதல் கணவர் பொன்வண்ணனுக்கும் இடையிலான காதல் கதை குறித்து காணலாம்.

நடிகை சரண்யாவின் காதல் கணவர் பொன்வண்ணன் அடிப்படையில் ஓவியர். அதன் பின்னர் தான் அவர் இயக்குநர் மற்றும் நடிகர். இப்படி இருக்கும்போது பழைய பேட்டி ஒன்றில், சரண்யா மீதான முதல் இம்பர்சன் குறித்து பொன்வண்ணன் தெரிவித்துள்ளார். அதாவது, " ஒரு நாள் படப்பிடிப்புத் தளத்தில் அவரது அறையில் சரண்யா தரையில் அமர்ந்து கொண்டு, ஒரு சார்ட்டில் வரைந்து கொண்டிருந்தார். நான் அடிப்படையில் ஓவியன் என்பதால் அவர் என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்ற கேள்வியை முன் வைத்தேன்.

Interesting Love Story And 25 Years Marriage Life Between Saranya and Ponvannan Throwback

காதலின் முதல் புள்ளி: அதற்கு, தான் ஒரு டிசைனிங் கல்லூரியில் படித்துக் கொண்டு இருப்பதாகவும், இவை எல்லாம் தனது ஹோம்- ஒர்க் என்றும், அதை போகும்போது சமர்பிக்க வேண்டும், அதனால் தான் அதை இங்கு கொண்டு வந்து செய்து கொண்டு இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். சரண்யா இப்படி சொன்னதும் எனக்கு அவர் மீது மரியாதை ஏற்பட்டுவிட்டது. அதன் பின்னர் தான் திருமணம் என்ற பந்தத்தை நோக்கி நாங்கள் நகர்ந்தோம். ஆனால் அவர் மீதான இந்த முதல் பார்வைதான் திருமணம் நோக்கி எங்களை நகர்த்தி இருக்கும்,. 25 ஆண்டு கால இல்லற வாழ்க்கையின் ஆரம்பப் புள்ளி இதுதான் என்று தெரிவித்துள்ளார்.

தையல் கலை: சரண்யா பொன்வண்ணன், இப்போதும் நடித்து வந்தாலும் அவருக்கு தையல் கலையின் மீது பெரும் ஆர்வம் இருக்கிறது. குறிப்பாகச் சொல்லப்போனால் அவரது வீட்டில் அனைவருக்கும் சரண்யா தான் ஆடைகள் தைத்து கொடுக்கிறாராம். மிகவும் டிசைனாக, மார்டனாக அதேபோல் அழகாகவும் ஆடைகள் தைத்து கொடுத்துக் கொண்டு வருகிறாராம். சரண்யா டி - சாஃப்ட் என்ற தையல் பயிலகத்தைத் தொடங்கி பலருக்கும் பயிற்றுவித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X