Ajith - அஜித்தை அதிமுகவுக்கு அழைத்த ஜெயலலிதா?.. அதற்கு அஜித் கொடுத்த பதில் என்ன தெரியுமா?

சென்னை: Ajith (அஜித்) முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அஜித்தை அதிமுகவுக்கு வரும்படி அழைத்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.

தமிழ் திரையுலகின் டாப் 5 நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். ஆசை நாயகன், அல்டிமேட் ஸ்டார், தல என அழைக்கப்பட்டுவந்த அஜித் தற்போது ஏகே. சினிமா பின்னணி இல்லாமல் திரையுலகுக்குள் வந்து பல இடங்களில் அடிப்பட்டு தற்போது உயர்ந்த இடத்தை அவர் பிடித்திருக்கிறார்.

பின்னணி இல்லை இருந்தும் முன்னணி: சினிமா பின்னணி இருக்கும் குடும்பத்திலிருந்து ஒருவர் வந்து திரையுலகில் நிலைப்பதே கடினம். அப்படி பின்னணி இருந்தும் சினிமாவுக்குள் வந்து காணாமல் போன ஹீரோக்களை கோடம்பாக்கம் நிறையவே பார்த்திருக்கிறது. ஆனால் அஜித்தோ யாரின் தயவும் இல்லாமல் திரையுலகுக்குள் வந்து தனக்கான சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.

ஆசை நாயகன் அஜித்: திரையுலகுக்குள் வந்த புதிதில் அஜித்தை வழிநடத்த யாரும் இல்லை என்பதுதான் உண்மை. அவரே கதைகளை கேட்டு தேர்ந்தெடுத்து நடித்தார். அதில் சில படங்கள் வெற்றியடைந்தன பல படங்கள் தோல்வியடைந்தன. இந்தச் சூழலில் இயக்குநர் வசந்த்தின் இயக்கத்தில் அவர் நடித்த ஆசை படம் மெகா ஹிட்டானது. அதிலிருந்து அவர் ஆசை நாயகன் ஆனார்.

அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார்: தொடர்ந்து படங்களில் நடித்துவந்த அஜித்துக்கு பக்கா கமர்ஷியல் ஹிட்டானது அவரது 25ஆவது படமான அமர்க்களம். இந்தப் படத்திலிருந்துதான் ஷாலினிக்கும், அவருக்கும் காதல் மலர்ந்தது. சரண் இயக்கிய அந்தப் படம் மெகா ஹிட்டாக அஜித் அல்டிமேட் ஸ்டார் ஆனார். இருப்பினும் கார் ரேஸ், பைக் ரேஸ் என அவரது கவனம் பல வழிகளில் போக மீண்டும் தோல்வி வழிக்கு வந்தார் அஜித்.

It has been reported that former Chief Minister Jayalalithaa invited Ajith to join AIADMK.

ஏகே : அதனைத் தொடர்ந்து நடித்த தீனா, வில்லன், வரலாறு, அட்டகாசம் உள்ளிட்ட படஙக்ள் அவருக்கு வெற்றி படங்களாக அமைந்தன. ஆனால் மீண்டும் அவர் தொடர் தோல்விகளை சந்தித்தார். பிறகு மீண்டு வந்து பில்லா படத்தில் வெற்றி கண்டார். அதன் பிறகும் அசல், ஏகன் தோல்வி படங்களாக அமைய மங்காத்தா இண்டஸ்ட்ரி ஹிட்டானது.

அவரது 50ஆவது படமான மங்காத்தாவிற்கு பிறகு அஜித்திற்கு பெரும்பாலும் ஹிட் படங்களே அமைந்தன. சமீபத்தில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அவர் நடித்த துணிவு படம் சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. அவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்கவிருக்கிறார்.

அஜித்தின் மறுபக்கம்: பொதுவாக அஜித்குமார் யாருடைய பிரச்னைக்கும் செல்வதில்லை என்ற பிம்பம் இருக்கிறது. அதேபோல் அரசியல் சார்ந்த கருத்துக்களையும் அவர் தெரிவிப்பதில்லை.குறிப்பாக பாசத்தலைவனுக்கு பாராட்டு விழாவில் அவர் பேசிய பேச்சு சர்ச்சையாக மாற ஒட்டுமொத்தமாக அரசியல் விஷயங்களிலிருந்தும், மீடியாக்களில் இருந்தும் ஒதுங்கிவிட்டார்.

அழைத்த ஜெயலலிதா: அஜித் ஜெயலலிதாவின் ஆதரவாளர் என்ற கருத்து பொதுவாக பலரிடம் இருந்தது. ஜெயலலிதா மறைவுக்குக்கூட அவர் வெளிநாட்டிலிருந்து வந்ததால் அதை பலர் உறுதியும் செய்தனர். ஆனால் அஜித் அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என அவரது ரசிகர்கள் திடமாக நம்புகின்றனர். இந்தச் சூழலில் அஜித்தை ஜெயலலிதா அரசியலுக்கு அழைத்ததாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

மறுத்த அஜித்: அதாவது, அஜித்தின் தைரியமான செயல்களும், வெளிப்படையான பேச்சுக்களும் ஜெயலலிதாவுக்கு ரொம்பவே பிடிக்குமாம். எனவே அதிமுகவுக்கு நீங்கள் வந்துவிடுங்கள் பெரிய பொறுப்பு தருகிறேன் என ஜெயலலிதா அஜித்திடம் கூறியதாக ஒரு பேச்சு பரவலாக திரைத்துறையில் பேசப்பட்டதாம். ஆனால் ஜெயலலிதாவின் அழைப்பை ஏற்க மறுத்த அஜித், இல்லை மேடம் அரசியலுக்குள் வர விரும்பவில்லை என டீசண்ட்டாக மறுத்துவிட்டாராம். இந்தத் தகவலை பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X