Rajini And Ajith - விழாக்களில் அஜித் கலந்துக்காத காரணம் இதுவா?.. எல்லாத்துக்கும் ரஜினியின் அட்வைஸ்தான் ரீசனா?

சென்னை: Rajini and Ajith (ரஜினி மற்றும் அஜித்) அஜித்குமாருக்கு ரஜினிகாந்த ஃபோன் செய்து அட்வைஸ் செய்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அஜித்குமார் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். படங்கள் ஹிட்டடித்தாலும், தோல்வியடைந்தாலும் அவருக்கென்ற ரசிகர கூட்டம் அப்படியேத்தான் இருக்கும். இன்னும் சொல்லப்போனால் பேட்டி கொடுப்பது, பங்களின் ப்ரோமோஷனில் கலந்துகொள்வது வெளியில் தலையை எப்போது காண்பிக்கமாட்டார். அவரைப் பார்க்க வேண்டுமென்றால் அவரது படம் ரிலீஸாகும்போதுதான் பார்க்க முடியும்.

It has been reported that Rajinikanth called Ajith Kumar and advised him.

விடாமுயற்சி: அவரது நடிப்பில் கடைசியாக துணிவு படம் வெளியானது. படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ஹிட்டடித்தது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே அவர் தனடு 62ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார். அதை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்து பிறகு மகிழ் திருமேனி உள்ளே வந்தார். படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஷூட்டிங்கே இல்லை: படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டதோடு சரி அதற்கு பிறகு எந்த அப்டேட்டும் படம் குறித்து வரவில்லை. அஜித்தோ பைக்கில் உலகத்தை சுற்றிக்கொண்டிருக்கிறார். லேட்டஸ்ட் தகவலின்படி படத்தின் ஷூட்டிங் அபுதாபியில் இந்த மாத இறுதியில் தொடங்கும் என கூறப்படுகிறது. அதற்கேற்றபடி அஜித்தும் இப்போது ஓமனில் பைக் ரைட் செய்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் செய்த சம்பவம்: அஜித்தை பொறுத்தவரை தன்னுடைய வேலையை செவ்வென செய்பவர். அவர் கடைசியாக கலந்துகொண்ட நிகழ்ச்சி என்றால் பாசத்தலைவனுக்கு பாராட்டு விழாதான். முதலமைச்சராக இருந்த கருணாநிதியிடம் நேரடியாக, "ஐயா எங்களை நிகழ்ச்சிகளுக்கு வர சொல்லி மிரட்டுறாங்க. அதை நீங்கள்தான் தடுத்து நிறுத்தணும்" என கூறினார். அதற்கு ரஜினிகாந்த்தும் எழுந்து நின்று கைத்தட்டினார்.

சந்திப்பு: அந்த விவகாரம் அப்போது பெரும் பூதாகரமாக வெடித்தது. மறுநாள் காலை அஜித்தை அழைத்துக்கொண்டு கோபாலபுரத்துக்கு சென்று முதலமைச்சர் கருணாநிதியை சந்திக்க வைத்தார் ரஜினிகாந்த். பிறகு கருணாநிதி அறிக்கை விட்டது பூதாகரமான விவகாரம் அடங்க ஆரம்பித்தது. அப்போதிருந்து அஜித் திமுகவுக்கு எதிரானவர் என்ற நிலைப்பாடு எழுந்துவிட்டது கவனிக்கத்தக்கது.

ரஜினி அட்வைஸ்: இந்நிலையில் அஜித்துக்கு ரஜினிகாந்த் அட்வைஸ் செய்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, "அஜித்துக்கு ரஜினிகாந்த் இந்த பிரச்னை சமயத்தில் ஃபோன் செய்தாராம். அப்போது அஜித்திடம் ரஜினி, வெளிப்படையாக பேசுவது நல்லதுதான். ஆனாலும் பொது நிகழ்ச்சிகளில் அவ்வாறு பேசாமல் இருந்தால் எந்த பிரச்னையும் இருக்காது என்று கூறினாராம். அதனையடுத்து கலந்துகொண்டால்தானே பிரச்னை பேசாமல் கலந்துக்கவே வேண்டாம் என்றுதான் அதிரடி முடிவு எடுத்தாரம் அஜித்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X