Vijay - வீடு தேடி சென்று வாய்ப்பு கேட்ட விஜய்.. உதாசீனப்படுத்திய இயக்குநர்.. இப்படியும் நடந்துருக்கா?
சென்னை: Vijay (விஜய்) இயக்குநர் பாரதிராஜாவிடம் வீடு தேடி சென்று விஜய் வாய்ப்பு கேட்ட சம்பவம் தெரியவந்திருக்கிறது.
இந்திய சினிமாவில் அதிகம் வியாபாரம் நடக்கும் ஹீரோக்களில் ஒருவர் விஜய். அவரது படங்கள் விமர்சன ரீதியாக பின்னடைவை சந்தித்தாலும் வசூல் ரீதியாக சக்கைப்போடு போடுகிறது என்பதுதான் திரையுலகினரின் பேச்சு. அவரது நடிப்பில் கடைசியாக வெளியான லியோ மற்றும் அதற்கு முன்னர் வெளியான வாரிசு, பீஸ்ட் ஆகிய படங்களும் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டியிருக்கின்றன.
தளபதி 68: லியோ படம் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியானாலும் விஜய் ரசிகர்களை தவிர்த்து மற்றவர்களை பெரிதாக திருப்திப்படுத்தவில்லை. இதனால் விஜய்யும் கொஞ்சம் அப்செட் என்றுதான் கூறப்படுகிறது. எனவே அடுத்த படத்தை விமர்சன ரீதியாகவும் செம படமாக கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறாராம் தளபதி. அடுத்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்.

டைம் ட்ராவல்?: வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, மீனாட்சி சௌதரி, மைக் மோகன், ஜெயராம், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படமானது டைம் ட்ராவலை மையமாக வைத்து கமர்ஷியலாக உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது.
எங்கு ஷூட்டிங்?: சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் படத்தின் பூஜை போடப்பட்டது. அதனையடுத்து தாய்லாந்து சென்ற படக்குழு அங்கு சில வாரங்கள் முகாமிட்டு சண்டை காட்சிகளையும் பிற காட்சிகளையும் எடுத்தது. பிறகு சென்னை வந்து குட்டி ரெஸ்ட் எடுத்துவிட்டு தற்போது துருக்கிக்கு சென்றிருக்கிறார்கள் படக்குழுவினர். அங்கு சில முக்கியமான காட்சிகளை எடுக்கவிருக்கிறார்களாம்.
விஜய்யின் ஆசை: தற்போது விஜய் கமர்ஷியல் பாதையில் ராஜபாட்டை நடத்தி வந்தாலும் ஆரம்பத்தில் எதார்த்தமான படங்களிலும் நடித்திருக்கிறார். அந்த சமயத்தில் அவருக்கு ஒரு ஆசை இருந்ததாம் அதாவது பாரதிராஜா இயக்கத்தில் நடித்துவிட வேண்டும் என்பதுதான் அது. இதை தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் விஜய் சொன்னவுடன் விஜய்யை அழைத்துக்கொண்டு சந்திரசேகர் பாரதிராஜா வீட்டுக்கு சென்றாராம்.
மறுத்த பாரதிராஜா?: பாரதிராஜாவின் வீட்டுக்கு சென்று உங்கள் படத்தில் நடிக்க எனக்கு ஆசையாக இருக்கிறது என்று விஜய் கேட்டாராம். ஆனால் அதற்கு பாரதிராஜாவோ விஜய்யை இயக்க மறுத்துவிட்டாராம். இதனால் தளபதி ரொம்பவே வருத்தப்பட்டாராம். பின்னர் சில வருடங்கள் கழித்து விஜய்யிடம் பாரதிராஜா, நீ அன்னைக்கு வந்திருந்தப்போவே உன்னை இயக்கியிருக்கணும் மிஸ் ஆகிடுச்சு என்றாராம். அதற்கு விஜய் ஆமாம் சார் எனக்கு அந்த நாள் நல்லாவே நியாபகம் இருக்கு என்று சொன்னாராம்.. இந்தத் தகவலை பாரதிராஜா ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











