Silk Smitha - சில்க் ஸ்மிதா கடித்த ஆப்பிள்.. எவ்வளவுக்கு ஏலம் போனது தெரியுமா?.. என்னா மவுசு பாருங்க

சென்னை: Silk Smitha (சில்க் ஸ்மிதா) சில்க் ஸ்மிதா கடித்த ஆப்பிள் எவ்வளவு ரூபாய்க்கு ஏலம் போனது என்பது குறித்த விஷயம் தெரியவந்திருக்கிறது.

சில்க் ஸ்மிதாவை தவிர்த்துவிட்டு தமிழ் சினிமாவை பேச முடியாது. ஏனெனில் அவர் கோலிவுட்டில் ஏற்படுத்திய தாக்கம் ரொம்பவே அதிகம். தமிழில் அவர் வினுசக்கரவர்த்தி இயக்கிய வண்டிச்சக்கரம் படம் மூலம் அறிமுகமானார். முதல் படத்தில் அவர் ஏற்றிருந்த சில்க் என்ற கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் கட்டுண்டதால் ஸ்மிதா என்ற பெயருடன் சில்க் என்ற பெயரும் ஒட்டிக்கொண்டது. அப்போதிருந்து அவர் சில்க் ஸ்மிதாவாக மாறினார். அழைக்கப்பட்டார்.

It has been revealed that the apple bitten by Silk Smitha was auctioned for Rs 200

சில்க் ஸ்மிதா கால்ஷீட்: சில்க் ஸ்மிதாவின் கால்ஷீட்டுக்கு ஒட்டுமொத்த கோலிவுட்டும் காத்துக்கிடந்தது என்பதுதான் உண்மை. குறிப்பாக படத்தை வாங்கும் விநியோகஸ்தர்கள் அனைவருமே படத்தில் சில்க் ஸ்மிதா பாட்டு இருக்கா என கேட்டுவிட்டுத்தான் அந்தப் படத்தை வாங்குவதும்; அப்படி இல்லையென்றால் சில்க் பாட்டு ஒன்ன வைங்க என சொல்வதும் அரங்கேறியது. அந்த அளவு ரூல் செய்தார் சில்க் ஸ்மிதா.

இன்னமும் அவர் ஆட்சிதான்: சில்க் ஸ்மிதா உயிரிழந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. இருந்தாலும் அவரது பெயரை கேட்டாலோ, புகைப்படத்தை பார்த்தாலோ ரசிகர்கள் கட்டுண்டு விடுகிறார்கள். உதாரணமாக கடந்த வாரம் வெளியான மார்க் ஆண்டனி படத்தை எடுத்துக்கொள்ளுங்கள். சில்க் ஸ்மிதா போன்றே இருக்கும் ஒரு பெண்ணை பிடித்து நடிக்க வைத்தார்கள். அவர் ஸ்க்ரீனில் வரும் காட்சிக்கு அவ்வளவு ரெஸ்பான்ஸ் தியேட்டரில் இருந்தது.

கடித்த ஆப்பிள்: இந்நிலையில் சில்க் ஸ்மிதா கடித்த ஆப்பிள் எவ்வளவுக்கு ஏலம் போனது என்பது குறித்து தெரியவந்திருக்கிறது. அதாவது ஒரு படத்தின் ஷூட்டிங்கில் சில்க் ஸ்மிதா ஒரு ஆப்பிளை கடித்துவிட்டு தன் அருகில் வைத்திருக்கிறார். அதை கவனித்த ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த ஒருவர் அந்த ஆப்பிளை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டாராம்.

பலே யோசனை: அதனையடுத்து அவருக்கு ஒரு யோசனை தோன்றியிருக்கிறது. அதாவது அந்த ஆப்பிளை சில்க் கடித்த ஆப்பிள் என்று ஒரு இடத்தில் வைத்து ஏலம் விட்டிருக்கிறார். அந்த ஏலத்தில் சில்க் கடித்த ஆப்பிள் கிட்டத்தட்ட 200 ரூபாய்வரை சென்றதாம். இது அந்தக் காலத்தில் பரபரப்பான விஷயமாக பேசப்பட்டது. அந்த அளவுக்கு சில்க் மீதான மோகம் ரசிகர்களுக்கு இருந்தது. இந்தத் தகவலை செய்யாறு பாலு ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X