Siddharth - தாய்லாந்து போன சித்தார்த் பீச்சில் இப்படியும் பண்ணிருக்காரா?.. அடேங்கப்பா தில்லு அதிகம்தான்

சென்னை: Siddharth (சித்தார்த்) தாய்லாந்து சென்றபோது சித்தார்த் பீச்சில் செய்த சம்பவம் குறித்து தெரியவந்திருக்கிறது.

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக நடித்துவரும் சித்தார்த் ஒரு மெகா ஹிட் கிடைத்துவிடாதா என்று ஏங்கிக்கொண்டிருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான டக்கர் படமும் தோல்வியையே சந்தித்தது. சூழல் இப்படி இருக்க அவர் இப்போது சித்தா என்ற படத்தில் நடித்திருக்கிறார். படத்தை அருண்குமார் இயக்க நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

It has come to light about the incident Siddharth did on the beach when he went to Thailand.

பாராட்டை பெற்ற சித்தா: சித்தா திரைப்படம் சமீபத்தில் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்திருக்கின்றனர். இயக்குநரின் மேக்கிங் ஒருபுறம் சிறப்பாக இருக்க சித்தார்த்தின் நடிப்பு மறுபக்கம் அட்டகாசமாக இருக்கிறது என்று புகழும் ரசிகர்கள் இது கண்டிப்பாக சித்தார்த்தின் பெயர் சொல்லும்படியான படமாக அமைந்துவிட்டது என பாராட்டுகின்ரனர்.

கமல் ஹாசன் பாராட்டு: சித்தா படத்துக்கு சாமானிய ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் தங்களது பாராட்டை தெரிவித்தனர். அதன்படி கமல் ஹாசன் படத்தை பார்த்துவிட்டு படத்தின் இறுதியில் அழுத்தத்துடன் ரசிகர்கள் வெளியே வராமல் இப்படி நடக்கிறது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்ற உணர்வு வந்திருக்கிறது. மகாநதி படத்தைவிட இது நன்றாக இருக்கிறது என்று பாராட்டினார். அதேபோல் இயக்குநர் மணிரத்னமும் சித்தா படத்தை பாராட்டியிருக்கிறார்.

ரஜினியும் பாராட்டு: சித்தா படத்தை பார்த்த ரஜினிகாந்த்தும் பாராட்டு தெரிவித்திருக்கிறார். விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் படத்துக்கு நல்ல வரவேற்பே கிடைத்திருக்கிறது. பல நாட்களுக்கு பிறகு சித்தார்த்துக்கு இந்த ஹிட் கிடைத்திருப்பதால் அவர் மகிழ்ச்சியில் இருக்கிறார். இந்த சூழலில் எப்போதும் தனது மனதில் பட்டதை பேசும், செய்யும் சித்தார்த் தாய்லாந்து பீச்சில் செய்த சம்பவம் தெரியவந்திருக்கிறது.

என்ன நடந்தது?: அதாவது கடந்த வரும் சித்தார்த் தாய்லாந்துக்கு சென்றிருக்கிறார். அப்போது ஒரு பைக்கை எடுத்துக்கொண்டு அங்கிருக்கும் பீச்சுக்கு சென்றாராம். இரவு நேரத்தில் அங்கு இருந்த லோக்கல் மீனவரிடம் பேசிக்கொண்டிருந்தாராம். அதில் நேரம் போனதே தெரியவில்லை. ஒருகட்டத்தில் பேச்சு முடிந்த பிறகு அந்த மீனவரிடம் சித்தார்த் இங்கே தூங்க இடம் இருக்கா என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்த மீனவரோ இது உன்னுடைய பீச்தான் இங்கேயே படுத்து தூங்கு என சொல்ல; அவரும் அங்கேயே தூங்கிவிட்டாராம்.

மறுநாள் காலை சூரிய உதயத்தின்போது வந்த ஒளி அவரை எழுப்பியதாம். மேலும் அதனை வீடியோ எடுத்து இன்ஸ்டாவிலும் போட்டிருக்கிறார். இதனை சித்தார்த் ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் வெளிநாட்டில் பீச்சில் தனியாக தூங்குவதற்கு ஒரு தில்லு வேண்டும் என கமேண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X