Deva - அஜித் படத்துக்காக தேவா போட்ட ட்யூன் ரஜினிக்கு அடையாளமாக மாறிய கதை தெரியுமா?

சென்னை: Music Director Deva (இசையமைப்பாளர் தேவா) அஜித் படத்துக்காக தேவா போட்ட ட்யூன் ஒன்று ரஜினி படத்தில் ஹிட்டடித்த சம்பவம் குறித்து தெரிய வந்திருக்கிறது.

தமிழ் சினிமா உலகில் தேனிசை தென்றல் என்ற அடைமொழிக்கு சொந்தக்காரர் தேவா. கானா பாடல்களில் கில்லியான அவர் தனது மெலோடிகளாலும் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர். அவரது பாடல்களை இப்போது கேட்டாலும் 90ஸ் கிட்ஸ் தங்களுடைய பால்ய காலத்திற்கு சென்றுவிட்டு திரும்புவார்கள். அந்த அளவு 90ஸ் கிட்ஸுகளுடன் தனது இசையின் மூலம் ஒட்டி உறவாடியிருக்கிறார் தேவா.

It has come to light that a tune composed by Deva for Ajiths film became a hit in Rajinis film

அனைத்தும் ஹிட்: இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஒருபக்கம் கொடிகட்டி பறந்துகொண்டிருக்க தேவாவும் அவர்களுக்கு போட்டிப்போட்டுக்கொண்டு உழைத்தார். அப்போதைக்கு முன்னணி ஹீரோக்களாக இருந்த ரஜினி, கமல், வளர்ந்துவரும் ஹீரோக்களாக இருந்த அஜித், விஜய், பிரசாந்த், சூர்யா என அனைவரது படங்களுக்கும் தேவா இசையமைத்துக்கொண்டிருந்தார். ஒவ்வொரு இசையும் வேறு வேறு மாதிரி இருந்ததால் அத்தனையும் ஹிட்டடித்தன.

அண்ணாமலை தேவா: ரஜினிகாந்த்துக்கு முதன்முதலாக அண்ணாமலை படத்துக்காக இசையமைத்தார் தேவா. அந்தப் படத்தின் தயாரிப்பாளர் பாலசந்தருக்கும், இளையராஜாவுக்கும் மோதல் என்பதால்தான் இந்தப் படத்துக்குள் தேவா கொண்டு வரப்பட்டார் என்றும் தகவல் பல காலமாக ஓடியது. அதேபோல் இளையராஜாபோல் தனக்கு தேவா ஹிட் கொடுத்துவிடுவாரா என்ற சந்தேகமும் ரஜினிகாந்த்துக்கு இருந்திருக்கிறது.

தங்க சங்கிலி: ஆனால் ரஜினிகாந்த்தின் சந்தேகத்தை தனது இசையின் மூலம் அடித்து நொறுக்கினார் தேவா. அந்தப் படத்தின் இசையையும், பாடல்களையும் கேட்டுவிட்டு தேவாவுக்கு தங்க சங்கிலியை ரஜினி பரிசளித்தார். அதுமட்டுமின்றி சூப்பர் ஸ்டார் ரஜினி என்ற பெயரோடு வரும் இசையை தேவா அந்தப் படத்துக்காகத்தான் முதன்முறையாக அமைத்தார். அது இன்றுவரை ரஜினியோடு தொடர்ந்துகொண்டிருக்கிறது.

It has come to light that a tune composed by Deva for Ajiths film became a hit in Rajinis film

ரஜினியுடன் தேவா: அண்ணாமலை இசையில் இம்ப்ரெஸ் ஆன ரஜினி தொடர்ந்து தேவாவை பாட்ஷா, அருணாச்சலம் உள்ளிட்ட படங்களில் கமிட் செய்தார். தேவாவும் தன்னுடைய உழைப்பை 100 சதவீதம் கொடுத்து பாடல்களை ஹிட்டாக்கினார். இந்தச் சூழலில் அஜித்தின் படத்துக்காக போடப்பட்ட ட்யூன் ரஜினிகாந்த் படத்தில் பயன்படுத்தப்பட்டு மெகா ஹிட்டான சம்பவம் குறித்து தெரியவந்திருக்கிறது.

என்ன நடந்தது?: அதாவது வசந்த் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான ஆசை படத்துக்காக ஒரு ட்யூனை போட்டிருக்கிறார் தேவா. ஆனால் அந்த ட்யூன் வசந்த்துக்கு பிடிக்காததால் வேண்டாம் என்று சொல்லிவ்ட்டார். அந்த ட்யூனை பாட்ஷா பட வேலைகளின்போது சுரேஷ் கிருஷ்ணாவிடம் தேவா காண்பிக்க அதை சுரேஷ் கிருஷ்ணா பயன்படுத்திக்கொண்டார். அந்த மெட்டுக்கு வைரமுத்து பாடல்கள் எழுதினார். அந்தப் பாடல்தான் பாட்ஷா படத்தில் இடம்பெற்ற ஸ்டைலு ஸ்டைலுதான் பாடல். அந்தப் பாடல் இன்றுவரை ரஜினியின் அடையாளங்களில் ஒன்றாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X