AR Rahman - வாலியிடம் கண்டிஷன் போட்ட ஏ.ஆர்.ரஹ்மான்.. என்ன நடந்தது தெரியுமா?.. இப்படியெல்லாம் நடந்திருக்கா
சென்னை: AR Rahman (ஏ.ஆர்.ரஹ்மான்) ஒரு பாடலுக்காக பாடலாசிரியர் வாலியிடம் ஏ.ஆர்.ரஹ்மான் கண்டிஷன் போட்ட சம்பவம் தெரியவந்திருக்கிறது.
கண்ணதாசன், உடுமலை நாராயண கவி, மருதகாசி உள்ளிட்டோர் கோலோச்சியிருந்த காலத்தில் பாடல்கள் எழுத சினிமாவுக்குள் வந்தவர் பாடலாசிரியர் வாலி. ஆரம்பத்தில் ரொம்பவே சிரமப்பட்ட வாலி ஒருவழியாக பலராலும் அறியப்படும் பாடலாசிரியர் ஆகி பிறகு வெகு பிரபலமாகிவிட்டார்.

ஐந்து தலைமுறை: சிவாஜி - எம்ஜிஆருக்கு எழுத ஆரம்பித்த வாலி ரஜினி - கமல், விஜய் - அஜித், சிம்பு - தனுஷ், விஜய் சேதுபதி - சிவகார்த்திகேயன் என ஐந்து தலைமுறைகளுக்கு பாடல் எழுதிய பெருமைக்கு சொந்தக்காரர். வாலிக்கு வயதானாலும் அவரது வரிகளுக்கு எப்போதும் வயது ஆனதில்லை. கம்ப்யூட்டரில் காதல் செய்யும் காலம் இனி என தற்போது காதல் சென்றுகொண்டிருக்கும் நடைமுறையை முன்னமே கணித்து கூறியவர் வாலி. அதேபோல் பாஸ்போர்ட்டே இல்லாத கவிஞர். எந்த வெளிநாட்டுக்கும் செல்லாதவர்.
வாலிப வாலி: ஆனால் அவரால் நியூயார்க் நகரத்தை தனது பாடலுக்குள் வர்ணிக்க முடிந்தது. . கவிஞர் வாலி தனது இறுதிக்காலம்வரை அப்டேட்டாகவும், இளமையாகவும் தனது வரிகளை எழுதியதால்தான் அவரை அனைவரும் வாலிப வாலி என்று அழைக்கிறார்கள்.
ரஹ்மான் கூட்டணி: பாடலாசிரியர் வாலி பெரும்பாலும் அனைத்து இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றிவிட்டார். இளையராஜாவுடன் இணைந்து ஏராளமான ஹிட் பாடல்களை கொடுத்தவர் ஏ.ஆர்.ரஹ்மானுடனும் கூட்டணி அமைத்து மெகா ஹிட்டுகளை கொடுத்திருக்கிறார். அப்படி ஒரு ஆல்பம்தான் சில்லுனு ஒரு காதல். சூர்யா நடிப்பில் கிருஷ்ணா இயக்கிய அந்தப் படத்தின் பாடல்கள் அனைத்துமே க்ளாசிக் ஹிட்.
ம செண்ட்டிமெண்ட்: ஏ.ஆர்.ரஹ்மானும், வாலியும் இணைந்து ஏராளமான ஹிட்டுகளை கொடுத்திருக்கின்றனர். அவற்றி ம வரிசையில் ரஹ்மான் ட்யூனுக்கு முதல் வரியை வாலி எழுதினால் அந்தப் பாடல் மெகா ஹிட்டாகிவிடும் என்ற செண்ட்டிமெண்ட் இரண்டு பேருக்குமே இருந்தது. உதாரணமாக முக்காலா முக்காபுல்லா, முஸ்தஃபா முஸ்தஃபா, முன்னாள் முன்னாள் வாடா என அந்த பட்டியலில் குறிப்பிடத்தக்க பாடல்கள் உண்டு.

ரஹ்மானின் கண்டிஷன்: அந்தவகையில் ம வரிசையில் முதல் வரியை எழுதுங்கள் என ரஹ்மான் கண்டிஷன் போட்டதற்கிண்டங்க வாலி ஒரு பாடலை எழுதியிருக்கிறார். அதாவது இளைஞர்களின் ஆல்டைம் ஃபேவரைட் பாடலான முன்பே வா என் அன்பே வா பாடலை முதலில் வாலி அன்பே வா என் முன்பே வா என்றுதான் எழுதினாராம். ட்யூனின் மீட்டருக்கும் அது செட் ஆகியிருக்கிறது.
இருந்தாலும் ஏ.ஆர்.ரஹ்மான் நம்முடைய கூட்டணியில் ம வரிசையில் தொடங்கும் பாடல்கள் அனைத்துமே ஹிட்டாகியிருக்கின்றன. எனவே இந்தப் பாடலையும் ம வரிசையில் வரும்படி ஆரம்பிக்க வேண்டும் என கண்டிஷன் போட்டிருக்கிறார். உடனே வாலி, அவ்வளவுதானே மாத்திட்டா போச்சு என்ற தொனியில் பார்த்துவிட்டு முன்பே வா என் அன்பே வா என்று எழுதினாராம்.


Click it and Unblock the Notifications











