Rajini - ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினியின் முகத்தில் எச்சில் துப்பிய இயக்குநர்.. காரணம் யார் தெரியுமா..?
சென்னை: Rajini (ரஜினி) ரஜினியின் முகத்தில் இயக்குநர் பாரதிராஜா எச்சில் துப்பிய சம்பவம் தெரியவந்திருக்கிறது.
கமல் ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிவிட்டதால் அவருக்கான போராட்டங்கள் சினிமாவில் கொஞ்சம் குறைவாகத்தான் இருந்தது. ஆனால் ரஜினிக்கு அப்படி இல்லை. எந்த பின்னணியும் இல்லை, ஹீரோவுக்கான முக லட்சணம் இல்லை என விமர்சனங்களையும், பல போராட்டங்களையும் சந்தித்தவர். இப்போது அவர் சூப்பர் ஸ்டாராக அதிக சம்பளம் வாங்கும் ஹீரோவாக இருந்தாலும் ஆரம்பக்காலட்டத்தில் அவர் கடுமையாக அவமானப்பட்டிருக்கிறார்.

ஜெயிலர் வசூல்: பல அவமானங்களையும், போராட்டத்தையும் சந்தித்த ரஜினிகாந்த் தனது திறமையாலும், ஸ்டைலாலும், விடாமுயற்சியாலும் பெரும் வெற்றி கண்டு மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். அவர் இதுவரை 169 படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம்கூட மெகா ஹிட்டாகி 700 கோடி ரூபாய்வரை வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தலைவர் 170: ரஜினிகாந்த் இப்போது தன்னுடைய 170ஆவது படத்தில் நடித்துவருகிறார். அந்தப் படத்தை ஜெய்பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்குகிறார். இந்தப் படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த். இந்த சூழலில் ரஜினியின் ஆரம்பகாலகட்டத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரின் முகத்தில் பாரதிராஜா எச்சில் துப்பிய சம்பவம் தெரிய வந்திருக்கிறது.
என்ன நடந்தது?: அதாவது ரஜினிக்கு 16 வயதினிலே படம் ரொம்பவே முக்கியமானது. அதில் அவர் ஏற்றிருந்த பரட்டை கதாபாத்திரம் அவரை பட்டித்தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது. அந்தப் படத்தில் ஸ்ரீதேவி ரஜினியை துப்புவது போன்ற காட்சி இருந்திருக்கிறது. முதலில் ஸ்ரீதேவி ரஜினியின் முகத்தில் துப்புவது போன்ற காட்சியை படமாக்கிவிட்டாராம் பாரதிராஜா.

துப்புங்கள் தலைவரே: அடுத்ததாக ரஜினியின் முகத்தில் எச்சில் இருப்பது போன்ற காட்சியை எடுக்க வேண்டும். அதற்காக சோப்பு நுரையை ரஜினியின் முகத்தில் வீசி படமாக்கியிருக்கிறார் பாரதிராஜா. இருந்தாலும் அந்தக் காட்சி ரியலாக இல்லை என ஃபீல் செய்திருக்கிறார் இயக்குநர். இதனை கவனித்த ரஜினி என்ன விஷயம் என்று பாரதிராஜாவிடம் விசாரிக்க; தனக்கு அந்தக் காட்சியில் திருப்தி இல்லை என்று சொல்லியிருக்கிறார்.
உடனே எதையுமே யோசிக்காத ரஜினிகாந்த், 'தலைவரே நீங்கள் என் முகத்தில் துப்புங்கள்' (ரஜினியும், பாரதிராஜாவும் தலைவரே என்றுதான் அழைத்துக்கொள்வார்கள்) என கூறியிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த பாரதிராஜா யோசித்தபடி நிற்க விடாத ரஜினி தொடர்ந்து வலியுறுத்தியிருக்கிறார். அதன் பிறகு பாரதிராஜா உண்மையாகவே ரஜினியின் முகத்தில் எச்சிலை துப்பி அந்தக் காட்சியை எடுத்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











