ஜோதிகாவால் கண் கலங்கிய ரஜினிகாந்த்.. எல்லாத்துக்கும் அதுதான் காரணம்.. இப்படியும் நடந்திருக்கா?

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக திகழ்ந்தவர் ஜோதிகா.மும்பையை பூர்வீகமாகக் கொண்ட அவர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு தேவ் என்ற மகனும், தியா என்ற மகளும் இருக்கிறார்கள். குழந்தைகள் பெற்றுக்கொண்டு சில காலம் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். கடைசியாக அவர் ஹிந்தியில் சைத்தான் படத்தில் நடித்தார். இந்தச் சூழலில் அவர் நடித்த ஒரு படத்தை பார்த்து ரஜினிகாந்த் கண் கலங்கிய சம்பவம் தெரியவந்திருக்கிறது.

ஜோதிகா கோலிவுட்டின் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர். சிம்ரனுக்கு போட்டியாக தனது கொடியையும் கோடம்பாக்கத்தில் பறக்கவிட்டார். துறு துறு நடிப்பு, பப்ளியான உருவம் என தமிழ் ரசிகர்களை தனது அழகு மற்றும் நடிப்பால் கட்டிப்போட்டவர் அவர். ஜோதிகா முதலில் திரையில் தோன்றியது எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியான வாலி திரைப்படத்தில். அந்தப் படத்தில் சிறிது நேரமே வந்தாலும் சோனா என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார். இதனால் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன.

It has come to light that Rajinikanth got emotional after watching the Jyotika starrer Mozhi movie

முன்னணி நடிகை: வாலி படத்துக்கு பிறகு வசந்த் இயக்கத்தில் சூர்யா நடித்த பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடித்தார். அந்தப் படம்தான் இருவரும் இணைந்த நடித்த முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படமும் ஹிட்டாக தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் ஜோதிகாவுக்கு குவிந்தன. 90களின் இறுதியிலும், 2000த்தின் ஆரம்பத்திலும் ஜோதிகா முன்னணி நடிகையாக மாறினார். அவருக்கு போட்டியாக சிம்ரனும் வர, சிம்ரன் - ஜோதிகா என்ற போட்டி உருவானது. இருவருமே சரிசமமாக ஹிட் படங்களை கொடுத்தனர்.

சிறந்த நடிகை ஜோதிகா: ஹீரோவுடன் டூயட், கிளாமர் என்ற ரூட்டில் மட்டும் பயணிக்காத ஜோதிகா சிறந்த கதையம்சம் உள்ள படங்களிலும் அவர் நடித்தார். அப்படி அவர் நடித்த மொழி படம் அவரின் கேரியரில் முக்கியமான ஒன்று. வாய் பேச முடியாத, காது கேட்காத கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவர் தனது நடிப்பில் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்தார். அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதேபோல் சந்திரமுகி படத்திலும் அவரது நடிப்பு அனைவரையும் மெர்சலாக்கியது.

மொழி: அதேபோல் ஜோதிகாவின் நடிப்பில் உச்சம் தொட்ட படங்களில் ஒன்று மொழி. ராதாமோகன் இயக்கத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் மொழி. வாய் பேச முடியாத், காது கேட்காத கேரக்டரில் ஜோதிகா நடித்திருப்பார். முக்கியமாக வசனமே இல்லாமல் மோனோ ஆக்டிங்கில் அதகளம் செய்திருப்பார் அவர். இந்தச் சூழலில் அந்தப் படத்தை பார்த்து ரஜினிகாந்த் கண்கலங்கிய சம்பவம் தெரியவந்திருக்கிறது.

என்ன நடந்தது: அதாவது மொழி திரைப்படத்தை குடும்பத்துடன் பார்க்க வேண்டும் என இயக்குநர் ராதாமோகனிடம் கேட்டாராம். அதன்படி அவருக்கென்று ஸ்பெஷல் காட்சி ஒன்று திரையிடப்பட்டிருக்கிறது. படத்தை பார்த்துவிட்டு என்ன படம் இது, கதை சூப்பர். ஜோதிகாவின் நடிப்பு அவ்வளவு அட்டகாசமாக இருக்கிறது என்று சொல்லி கண்கலங்கியபடி எமோஷனல் ஆனாராம். இதனை ராதாமோகன் ஒரு பேட்டியில் சொன்னதாக தகவல் பரவிவருகிறது.

நடிப்புக்கு ஓய்வு டூ ரீ என்ட்ரி: முன்னதாக, பூவெல்லாம் கேட்டுப்பார் படத்திலிருந்து சூர்யாவும், ஜோதிகாவும் காதலிக்கத் தொடங்கினர். இரு வீட்டு சம்மதத்தையும் பெறுவதற்கு இரண்டு பேரும் பல வருடங்கள் காத்திருந்தனர். ஒருவழியாக வீட்டார் சம்மதம் கிடைத்தவுடன் கடந்த 2006ஆம் ஆண்டு இரண்டு பேரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு தேவ் என்ற மகனும், தியா என்ற மகளும் இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு சில வருடங்கள் நடிப்புக்கு ஓய்வு கொடுத்திருந்தார் ஜோதிகா. பிறகு 36 வயதினிலே மூலம் ரீ என்ட்ரி கொடுத்த அவர் தொடர்ந்து நடித்துவருகிறார். கடைசியாக சைத்தான் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X