கோமாவில் விழுந்த சிறுமி.. காப்பாற்றிய வடிவேலு.. செம நெகிழ்ச்சி சம்பவம் தெரியுமா?

சென்னை: வடிவேலு கோலிவுட்டின் காமெடி சூப்பர் ஸ்டார். பல வருடங்களாக நடித்து மக்களை சிரிக்க வைத்த அவர்; கடைசியாக மாமன்னன் படத்தில் நடித்து கலங்கவும் வைத்தார். அடுத்ததாக மாரீசன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். நிச்சயம் இந்தப் படமும் வடிவேலுவுக்கு மிகச்சிறந்த பெயரை பெற்றுக்கொடுக்கும் என்று வைகைப்புயலின் ரசிகர்கள் நம்பிக்கொண்டிருக்கின்றனர். இந்தச் சூழலில் வடிவேலுவால் ஒரு சிறுமி பிழைத்த சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நகைச்சுவையில் தவிர்க்க முடியாத நடிகர் வடிவேலு. அவர் வரும் ஒவ்வொரு ஃப்ரேமிலும் ரசிகர்கள் வெடித்து சிரிப்பார்கள். பிறரை உருவ கேலி செய்யாமல் தன்னை தானே கலாய்த்துக்கொண்டு பிறரை சிரிக்க வைப்பதில் வல்லவர். இதனாலேயே அவருக்கு ரசிகர் கூட்டம் பெருகுகிறது. பெரிய ஹீரோ, சின்ன ஹீரோ என்ற எந்த பாரபட்சமும் இல்லாமல் எல்லோருடனும் சேர்ந்து நடித்து அதகளம் செய்தார்.

It has come to light that Vadivelu saved the girl from coma

பஞ்சாயத்து: வடிவேலுவின் கேரியர் உச்சத்தில் இருந்தபோது அரசியல் மேடையில் ஏறினார். அவர் என்று அரசியல் மேடை ஏறினாரோ அன்றிலிருந்து அவரது கரியர் இறங்க ஆரம்பித்தது. ஒருகட்டத்தில் வடிவேலுவை வைத்து படம் எடுப்பதையே தயாரிப்பாளர்கள் தவிர்த்தனர். இதனால் திரைத்துறையிலிருந்து ஒதுங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டார் வடிவேலு. அதுமட்டுமின்றி, இம்சை அரசன் 24ஆம் புலிகேசி பட பஞ்சாயத்தும் சேர்ந்துகொள்ள அவருக்கு ரெட் கார்ட் போடப்பட்டது.

ரீ என்ட்ரி: ஒருவழியாக வடிவேலுவுக்கு இருக்கும் பஞ்சாயத்துகள் பேசி சரி செய்யப்பட மீண்டும் சினிமாக்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் அவர் நடித்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் படுதோல்வியடைந்தது. இந்தப் படம் தவிர்த்து மாரி செல்வராஜின் மாமன்னன், பி.வாசுவின் சந்திரமுகி 2 ஆகிய படங்களில் நடித்தார். இவற்றில் மாமன்னன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வடிவேலுவுக்கு தரமான கம்பேக்காக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களுக்கு அதிர்ச்சி: வடிவேலு மீண்டும் சினிமாக்களில் நடிக்க வந்ததால் ரசிகர்கள் உற்சாகமடைந்தாலும் அவ்வப்போது வந்த செய்திகள் பெரும் அதிர்ச்சியை கொடுத்தன. அதாவது அவருடன் நடித்த பலரும் வடிவேலு தங்களை வளர விடவில்லை என்று ஓபனாகவே பேச ஆரம்பித்தனர். அதனை பார்த்த ரசிகர்கள் இதுதான் வடிவேலுவின் இன்னொரு முகமா என்று அதிர்ச்சியுடன் கேட்க ஆரம்பித்தனர். இருந்தாலும் மற்றவர்கள் கூறும் குற்றச்சாட்டுக்கள் குறித்து வடிவேலு பெரிதாக ரியாக்ட் செய்துகொள்ளவில்லை.

நெகிழ்ச்சி சம்பவம்: வடிவேலு இப்போது ஃபகத் பாசிலும் மாரீசன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தச் சூழலில் வடிவேலுவால் ஒரு சிறுமி உயிர் பிழைத்த சம்பவம் தெரியவந்திருக்கிறது. அதாவது ஒருமுறை 11 வயது சிறுமி கோமாவுக்கு சென்றுவிட்டாராம். அப்போது அந்த சிறுமியின் பெற்றோரிடம் மருத்துவர், 'உங்கள் மகளுக்கு என்னவெல்லாம் பிடிக்கும்' என்று கேட்டாராம். அதற்கு அவர்கள், வடிவேலுவின் காமெடி பிடிக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

பிழைத்த சிறுமி: உடனே அவர்களிடம் மருத்துவர், சரி வடிவேலுவின் காமெடியை போட்டுக் காண்பித்துக்கொண்டே இருங்கள் என்று சொல்லிவிட்டாராம். பெற்றோரும் அதன்படியே செய்ய ஒருகட்டத்தில் அந்த சிறுமி கோமாவிலிருந்து வெளியே வந்துவிட்டாராம். இதனை வடிவேலுவே சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியில் அளித்த பேட்டி ஒன்றில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X