Vijay - பிரசாந்த் படத்தின் வெற்றி விழா.. விஜய்யை உள்ளேயே விடவில்லை.. பிறகு நடந்ததெல்லாம் வரலாறு

சென்னை: Vijay (விஜய்) பிரசாந்த் நடித்த ஒரு படத்தின் வெற்றி விழாவுக்கு உள்ளேயே விஜய்யை விடவில்லை என கூறப்படுகிறது.

கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய்தான் இப்போது அதிகம் சம்பளம் வாங்கும் ஹீரோக்களில் ஒருவர். குறிப்பாக ரஜினியின் இடத்தை அவர் பிடிப்பதற்கான அத்தனை சாத்தியக்கூறுகளும் இருப்பதாக திரை ஆர்வலர்கள் கூறுகின்றனர். அதன் காரணமாகத்தான் விஜய்க்கு எவ்வளவு கோடி வேண்டுமானாலும் சம்பளத்தை கொட்டி கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கின்றனர்.

It is said that Vijay was not left inside the success party of a film starring Prashanth

ஏஸ்.ஏ.சி துணை: இப்படி விஜய்யின் கோட்டை பலமாக இப்போது இருந்தாலும் அதற்கான ஒவ்வொரு செங்கல்லையும் வைக்க ஆரம்பித்தவர் அவரது தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர். விஜய்க்காக கதை கேட்பது, சிறந்த கதைகள் வைத்திருக்கும் இயக்குநர்களை விஜய் பக்கம் மடைமாற்றுவது என சந்திரசேகர் செய்த விஷயங்கள் ஏராளம். அவரது பக்கபலம் இருந்ததால்தான் எந்த வித சிக்கலும் இல்லாமல் சினிமாவில் விஜய்யால் நிலைக்க முடிந்தது என்று ஒருசிலர் கூறுவதுண்டு.

அரசியல் ஆசை: எந்த நேரத்தில் விஜய் குடும்பங்களை கவரும் ஹீரோவாக இருக்க வேண்டும், எந்த நேரத்தில் கமர்ஷியல் பாதையில் பயணிக்க வேண்டும் என எஸ்.ஏ.சி விஜய்யின் வளர்ச்சியை செதுக்கினார் என்றே சொல்லலாம். ஒருகட்டத்தில் கமர்ஷியலில் கொடிகட்டி பறக்க ஆரம்பித்த விஜய்க்குள் அரசியல் ஆசையை விதைத்தும் எஸ்.ஏ.சந்திரசேகர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் ஐடியாவில்தான் விஜய் ரசிகர் மன்றம் விஜய் மக்கள் மன்றமாக மாறி இப்போது மக்கள் இயக்கமாக இருக்கிறது.

மாணவர்களுடன் சந்திப்பு: அதேபோல் 234 தொகுதிகளிலும் பத்து மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளை விஜய் சந்திக்க திட்டமிட்டிருப்பதும், சமீபத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மாரியாதை செலுத்த சொன்னதும் அரசியலுக்கான பாதைதான் என்றும் கோலிவுட்டில் பேச்சு எழுந்திருக்கிறது. மேலும், தனது மக்கள் இயக்கத்தின் ஒவ்வொரு செயலையும் அரசியல் நோக்கியே நகர்த்துகிறார் விஜய் என்றும் பெரும்பாலானோரால் எண்ணப்படுகிறது.

அசிங்கப்பட்ட விஜய்: நடிகராக உள்ளே நுழைந்து தற்போது அரசியல் ஆசையில் இருக்கும் விஜய்க்கு ஆரம்பத்தில் ஏகப்பட்ட சோதனைகள் வந்தன. இவரது முதல் படமான நாளைய தீர்ப்பு வெளிவந்த பிறகு விஜய்யை உருவ கேலி செய்து ஒரு பத்திரிகை எழுதியது. இதுபோல் பல விமர்சனங்களையும், அசிங்கங்களையும் விஜய் சந்தித்திருக்கிறார். இந்தச் சூழலில் பிரசாந்த் பட விழாவில் விஜய் அசிங்கப்பட்டதாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.

என்ன தகவல்?: அந்தத் தகவலின்படி, பிரசாந்த் நடித்த அவரது முதல் படமான வைகாசி பொறந்தாச்சு படம் மெகா ப்ளாக் பஸ்டர் என்பது அனைவருமே அறிந்தது. அந்தப் படத்தின் வெற்றி விழா சென்னை கமலா திரையரங்கில் நடந்ததாம். அப்போது சினிமாவுக்குள் நுழைந்திடாத விஜய் அந்த வெற்றி விழாவுக்கு சென்று பிரசாந்த்தை பார்த்துவிட வேண்டும் என ஆசைப்பட்டாராம்.

ஆனால் விழாவுக்கு சென்ற அவரை உள்ளேயே யாரும் விடவில்லையாம். அப்போது நமக்கு தெரிந்த ஒருவர் சினிமாவில் வென்றுவிட்டார். நம்மை யாருமே மதிக்க மாட்டேன் என்கிறார்கள். நாமும் நடிகனாக வேண்டும் என்று சபதம் எடுத்து அதன் பிறகுதான் எஸ்.ஏ.சியை நச்சரிக்க ஆரம்பித்தாராம் விஜய். அதன் பிறகு எஸ்.ஏ.சி ஒத்துக்கொள்ள படிப்படியாக வளர்ந்த விஜய் தற்போது வரலாறு படைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X