ரவி மோகன் எங்க வீட்டு மாப்பிள்ளை.. ரொமான்டிக் ஹீரோங்க அவரு.. குஷ்பு பாராட்டு மழை

சென்னை: சில திங்களுக்கு முன்னர் நடிகர் ரவி மோகன் அளித்த பேட்டி பெரும் பேசு பொருளாக மாறி சர்ச்சையாக மாறியது. குறிப்பாக தனக்கு விவாகரத்து கிடைக்கும் வரை நடிக்க மாட்டேன் என்றும், அதுவரை தனது படங்களும் வெளியாகாது என்றும் தெரிவித்தார். மேலும் தனது சொந்த வாழ்க்கை குறித்து கமெண்ட் அடிக்க யாருக்கும் உரிமை இல்லை என்று காட்டமாக விமர்சித்தார். அதில் அவர் இட்லி நடிகை என்று கூறி நடிகை ஒருவரை குறிப்பிட்டு மிகவும் மோசமான முறையில் விமர்சித்திருந்தார்.

இப்படி இருக்கையில் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தி உடன் சைமா விருதுகள் நிகழ்ச்சிக்கு ஒருமுறை சென்றது தொடர்பான வீடியோ, தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில் அவருக்கு ரொமான்டிக் ஹீரோ என்ற விருதை நடிகை குஷ்பு மற்றும் நடிகை அமலா பால் என இருவரும் இணைந்து வழங்குகிறார்கள்.

Jayam Ravi Called Our Family Son-in-Law by Khushbu Sundar Throwback Viral SIIMA Video Trends Again

அப்போது ரவி மோகன் குறித்து பேசுகையில், " இவருக்கு ரொமான்ஸ் என்றால் கண்களில் அப்படியே வந்துவிடும். எந்த கதாநாயகி அவருடன் நடித்தாலும் பார்த்தாலும் அவரின் மனதில் சம்திங் சம்திங் வந்துவிடும். நம்ம வீட்டு பிள்ளை மாதிரி, ஐய்யய்யோ இப்படி ஒரு பையன் நமக்கு கிடைக்கமாட்டானா என்று ஏங்குவார்கள்.

எங்க வீட்டு மாப்பிள்ளை: பெண்கள் பார்க்கும் போது, இப்படி ஒரு புருஷன் நமக்கு கிடைக்க மாட்டானா என்று ஏங்குவார்கள். அதுவும் நான் மிகவும் உரிமையுடன் கூற வேண்டும் அவர் எங்கள் வீட்டு மாப்பிள்ளை, தம்பி, ரவி, ஜெயம் ரவி வாங்க என்று கூறி அவரை மேடைக்கு அழைக்கிறார். அதேபோல் அவரது ரொமான்ஸ்க்கு காரணம் அவரது மனைவி ஆர்த்தி தான், எனவே ஆர்த்தியும் மேடைக்கு வந்து இந்த விருதைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கிறார்.

Jayam Ravi Called Our Family Son-in-Law by Khushbu Sundar Throwback Viral SIIMA Video Trends Again

ஆர்த்தி ரவி: அதன் பின்னர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி என இருவரும் ஒன்றாகவே, அந்த விருதைப் பெற்றுக் கொள்கிறார்கள். மேலும் ரவி மோகனுக்கு விருது வழங்கப்படுகிறது என்று தனக்குத் தெரியாது என்றும் கூறுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்த இணையவாசிகள் பலரும் இவ்வளவு ஒற்றுமையுடனும் மகிழ்ச்சியுடனும் இருந்தவர்களுக்கு மத்தியில் எங்கு மனஸ்தாபம் நடைபெற்றது என்று தெரியவில்லை என்று கேட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X