ரவி எங்கள் வீட்டு மாப்பிள்ளை.. எல்லா பெண்களும் ஏங்குவாங்க.. குஷ்பூ இப்படி சொல்லிருக்காரே ப்பா
சென்னை: ரவி மோகன் விஷயம்தான் கடந்த சில நாட்களாக கோலிவுட்டின் ஹாட் டாபிக்குளில் ஒன்றாக இருக்கிறது. சமீபத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது ஆர்த்தி, அவரது தாய் சுஜாதா உள்ளிட்டோரை பற்றி பல விஷயங்களை பேசினார். முக்கியமாக மூன்றெழுத்து இட்லி நடிகை என் வாழ்க்கையை நாசம் செய்துவிட்டதாக கூற; அந்த நடிகை குஷ்பூதான் என்று பலரும் ஆரூடம் கூறினார்கள். குஷ்பூவும் ரவி அப்படி பேசிய சில மணி நேரத்திலேயே காட்டமான ரிப்ளையை கொடுத்திருந்தார்.
ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்துவிட்டு; பின்னணி பாடகி கெனிஷாவுடன் நெருக்கமான உறவில் இருந்தார். விரைவில் அவர்கள் திருமணம் செய்துகொள்வார்கள் என்று பலரும் பேசினார்கள். இப்படிப்பட்ட சூழலில் சில நாட்களுக்கு முன்பு வீடியோவை வெளியிட்டிருந்த கெனி, 'ரவியிடமிருந்து தான் விலகுவதாகவும். தான் அவரது குடும்பத்தை பிரிக்கவில்லை. சென்னையிலிருந்தே வெளியேறுகிறேன். இனிமேல் எப்போதும் இங்கே வரமாட்டேன்' என துக்கத்தோடு பேசியிருந்தார்.

ரவியின் வெக்ஸ்: அவரது இந்த வீடியோ பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அப்படிப்பட்ட சூழலில், 'தூங்கிக்கொண்டிருக்கும் சிங்கத்தை எழுப்பாதீர்கள்' என ஆர்த்தியும் பதிவு போட்டிருந்தார். தனது மனதுக்கு இதம் கொடுத்த கெனிஷாவும் தன்னை விட்டு விலகிவிட்டாரே என்ற ஆதங்கத்திலும் வெக்ஸிலும் செய்தியாளர்களை சந்தித்தார் ரவி மோகன். எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் அவர்; அன்று முகம் முழுக்க இழப்பின் ரேகைகளோடு காட்சியளித்தார். மேலும் வெடித்து அழுது; பல விஷயங்கள் குறித்தும் ஓபனாகவே பேசினார். பிள்ளைகளைகூட ஆர்த்தி தரப்பு பார்க்க விடுவதில்லை; ஆனாலும் மகன்களுக்கு 50 லட்சம் ரூபாய் ஃபீஸ் நான்தான் கட்டுகிறேன் எனவும் குமுறியிருந்தார்.
இட்லி நடிகை: முக்கியமாக அவர் அன்று, 'எனது வாழ்க்கையை நாசமாக்கியது ஒரு நடிகைதான். அந்த நடிகையின் பெயரை சொல்லமாட்டேன். வேண்டுமானால் இப்படி சொல்கிறேன் அவர் மூன்றெழுத்து இட்லி நடிகை. அந்த நடிகையால் எங்களது வாழ்க்கை எல்லாம் நாசமாகியிருக்கும் என சீனியர் நடிகர்கள் மூன்று பேரே என்னிடம் கூறியிருக்கிறார். அந்தப் பெண்ணுக்கு என்னைப் பற்றி பேசுவதற்கு எந்த உரிமையும், அருகதையும் இல்லை' என சீறியிருந்தார். அவர் அப்படி பேசியதை பார்த்த ரசிகர்களோ, 'யார் அந்த மூன்றெழுத்து இட்லி நடிகை' என்றெல்லாம் தேட ஆரம்பித்து விடையும் கண்டுபிடித்தார்கள்.
குஷ்பூவின் பதிலடி: ஆனால் அதிகாரப்பூர்வமாக வராத வரை நடிகையின் பெயரை பயன்படுத்த வேண்டாம் என்று கண்ணியமும் காத்தார்கள். நிலைமை இப்படி இருக்க ரவி அப்படி பேசிய சில மணி நேரத்திலேயே நடிகை குஷ்பூ தனது எக்ஸ் பக்கத்தில், 'தங்களது டிஎன்ஏவை நிரூபிப்பதிலேயே சிலர் மும்முரமாக இருக்கிறார்கள். நான் பேசியதெல்லாம் சரி என்று உணர வைத்ததற்கு நன்றி' என கூறியிருந்தார். அதன் மூலம் அவர் ரவிக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்திருந்தார். இதற்கிடையே ரவியின் பேச்சுக்களை எல்லாம் ஆர்த்தியின் தாய் சுஜாதா திட்டவட்டமாக மறுத்திருந்தார்.
ட்ரெண்டாகும் வீடியோ: ரவி - ஆர்த்தி திருமணம் நடப்பதற்கு குஷ்பூதான் பெரிய காரணமாவார். இப்போது ரவி - குஷ்பூ இடையே உருவாகியிருக்கும் மோதல் திரைத்துறையில் கவனம் ஈர்த்திருக்கிறது. இந்நிலையில் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் திடீரென ட்ரெண்டாகியுள்ளது. அதாவது சைமா விருது வழங்கும் விழாவில் ரவிக்கு விருது வழங்கினார் குஷ்பூ. அப்போது ரவியை அழைக்கையில், "இந்த ஹீரோவின் கண்களை பார்த்தாலே ரொமான்ஸ் வந்துவிடும். எந்த ஹீரோயின் அவருடன் நடித்தாலும் அதுதான் நிலைமை. இன்னும் நான் உரிமையோடு சொல்வேன். எங்கள் வீட்டு மாப்பிள்ளை ரவி. அவரை பார்த்து ச்ச இப்படி ஒருவர் நமக்கு கிடைக்கவில்லையே என்று பெண்கள் எல்லாம் ஏங்குவார்கள்"என ஏகத்துக்கும் புகழ்ந்திருந்தார்.
ரவியும் வெட்கப்பட்டுக்கொண்டே மேடைக்கு வந்து விருது வாங்க; ஆர்த்தியையும் அழைத்தார் குஷ்பூ. பிறகு ரவியும், ஆர்த்தியுமாக அந்த விருதை பெற்றுக்கொண்டார்கள். விருது பெற்ற பிறகு பேசிய ரவி, 'நமக்கு இந்த சினிமாவில் வரும் மாதிரியான ரொமான்ஸ் எல்லாம் வராது. முட்டி போட்டு ப்ரோபோஸ் செய்யவெல்லாம் தெரியாது. எனது மனைவி கொஞ்சம் அது மாதிரிதான் எதிர்பார்ப்பார்' என கலகலப்பாக பேசியிருந்தார்.


Click it and Unblock the Notifications
