Nayanthara - படப்பிடிப்பு தளத்தில் ஓவர் தொல்லை கொடுக்கும் நயன்தாரா?..நம்ம நயனா இது?..ஆச்சரியத்தில் ரசிகர்கள்

சென்னை: ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன் தாரா. அவரது நடிப்பில் கடைசியாக அன்னபூரணி திரைப்படம் வெளியானது. ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்தப் படம் அவருக்கு 75ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் ஓடிடியிலும் அந்தப் படம் வெளியாகவிருக்கிறது.

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நயன்தாரா ஐயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்து ஹிட் ஹீரோயினாக வலம் வந்தார். தனது கரியரின் பீக்கில் இருந்தபோது அவர் இரண்டு காதல் தோல்விகளை சந்தித்தார். அந்த விவகாரத்தில் கடுமையான தனிநபர் தாக்குதலுக்கு ஆளானார். ஆனால் மனம் தளராமல் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி கதைகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற நாற்காலிக்கு நகர்ந்தார்.

Jouranlist Anthanan Talks about Nayanthara Behaviour In Shooting Spot

விக்கியுடன் காதல் திருமணம்: விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவருக்கு உயிர், உலக் என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். எப்போது நயன் மீது கல் எறிய காத்திருப்பவர்கள் விக்னேஷ் சிவனுடனான திருமணம் மற்றும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட விவகாரத்தில் விமர்சனத்தை முன்வைத்தனர். ஆனால் நயன் மௌனமே காத்தார். குழந்தை பெற்றுக்கொண்ட பிறகும் நயன் சினிமாவில் தீவிர கவனம் செலுத்திவருகிறார். அந்தவகையில் அட்லீ ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி தந்தார்.

பாலிவுட்டில் அறிமுகம்: அதில் ஷாருக்கான் ஹீரோவாக நடித்திருந்தார். அந்தப் படத்தின் மூலம் நயனும் ஹிந்தியில் அறிமுகமாகியிருக்கிறார். அவருக்கு அங்கும் சிறப்பான வரவேற்பே கிடைத்திருக்கிறது. அவரது ஆக்‌ஷன் காட்சிகளை பார்த்த பாலிவுட் திரையுலகம் இன்னும் சில படங்களில் நடிக்க வைக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக ரன்வீர் சிங்குடன் அவர் நடிக்கவுள்ளது உறுதியாகிவிட்டதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.

நயன் 75: இதற்கிடையே தமிழிலும் அவர் பிஸியாகவே இருக்கிறார். ஜெயம் ரவியுடன் நடித்த இறைவன் படம் தமிழில் கடைசியாக வெளியானது. அந்தப் படம் போதிய வரவேற்பை பெறவில்லை. இந்தப் படம் இல்லாமல் அன்னபூரணி, மண்ணாங்கட்டி ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார் நயன். இதில் அன்னபூரணி திரைப்படம் அவருக்கு 75ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னபூரணி: இப்படத்தை இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்த நிலேஷ் கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். நயன் தாராவுடன் கே.எஸ்.ரவிக்குமார், சத்யராஜ், ஜெய் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட சமூத்தை சேர்ந்தவராக நடித்திருக்கும் நயன், சமையல் கலைஞராக ஆசைப்படுவதும்; அதற்கு விழும் முட்டுக்கட்டைகள் மற்றும் அதை நயன் தாண்டுவதையும் மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது.

வேஸ்ட்: மிகப்பெரிய எதிர்பார்ப்போடு படம் வெளியானது. ஆனால் படத்துக்கு போதிய ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை. ஏன் எந்த ப்ரோமோஷனுக்கும் செல்லாத நயன் தாராவேக்கூட இந்தப் படத்துக்கு ப்ரோமோஷன் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் அவர் படப்பிடிப்பு தளத்தில் ஓவர் தொல்லை கொடுப்பதாக கூறப்படுகிறது.

என்ன ஆச்சு?: அதாவது தனது கரியரின் ஆரம்பக்கட்டத்தில் நயன்தாரா ரொம்பவே சின்சியராக இருந்தாராம். உதாரணமாக ஹைதராபாத்தில் ஒரு படத்தின் ஷூட்டிங்கில் தனக்கான காஸ்ட்யூம் வருவதற்கு லேட் ஆன சூழலில் காத்திருந்து எந்த அவசரமும் படாமல் காத்திருந்து நடித்துக்கொடுத்தாராம். அதேபோல் எந்த நேரத்தில் ஷூட்டிங் முடிந்தாலும் முகம் சுளிக்காமல் இருப்பாராம். ஆனால் இப்போது நயன் தலைகீழாக மாறிவிட்டார் என்கிறார்கள்.

அதாவது ஷூட்டிங் நடந்தால் மதியத்துக்கு மேல் ஒழுங்காக ஒத்துழைப்பு கொடுக்காமல் எனது மகன்களை பார்க்க வேண்டும் சீக்கிரம் முடித்துவிடுங்கள் என்று சொல்கிறாராம். அதேபோல் அழுகும் சீன் வந்தால் வாயை துடிக்க வைத்து நடிக்கிறேன். கிளிசரின் போட்டால் கண்கள் கெட்டுப்போய்விடும். கண்ணீரை சிஜியில் சேர்த்துக்கொள்ளுங்கள் எனவும் சொல்கிறாராம்.

அதேபோல் ஓ2 படத்தில் பேருந்து மண்ணுக்குள் புதைந்த காட்சி ரியலாக இருக்க வேண்டும் என்பதால் கொஞ்சம் மண்ணை பூசிக்கொள்ளுங்கள் என்று படக்குழு சொன்னதற்கு முடியவே முடியாது என்று மறுத்துவிட்டாராம். மேற்கூறிய அத்தனையும் பத்திரிகையாளர் அந்தணன் ஒரு வீடியோவில் பகிர்ந்திருந்ததாக சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X