பாலுமகேந்திராவை ஷோபா மிரட்டினார்.. சில விஷயங்களை செய்தார்.. பிரபலம் இப்படி சொல்றாரே?
சென்னை: கோலிவுட்டின் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவராக திகழ்ந்தவர் பாலுமகேந்திரா. அடிப்படையில் ஒளிப்பதிவாளரான இவர் இயக்குநராகவும் ஜொலித்தார். அவர் இயக்கிய அழியாத கோலங்கள், வீடு, சந்தியா ராகம், மூன்றாம் பிறை, தலைமுறைகள் உள்ளிட்ட படங்கள் இன்றுவரை கல்ட் க்ளாசிக்காக திகழ்ந்துகொண்டிருக்கின்றன. சினிமாவில் எவ்வளவுக்கு எவ்வளவு புகழ் அடைந்திருந்தாரோ அதேபோல் அவரை சுற்றி ஏராளமான சர்ச்சைகளும் இருந்தன. முக்கியமாக ஷோபா தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் பாலுமகேந்திராவை சுற்றி பல விஷயங்கள் பேசப்பட்டன.
தமிழ் ஈழத்தை பூர்வீகமாகக் கொண்டவர் பாலு மகேந்திரா. சில காரணங்களால் இந்தியாவுக்கு வந்த அவர் ஒளிப்பதிவு படிப்பு படித்து தலை சிறந்த கேமரா மேனாக திகழ்ந்துகொண்டிருந்தார். பிறகு இயக்குநராக அவதாரம் எடுத்த அவர் அழியாத கோலங்கள், வீடு, சந்தியா ராகம், மூன்றாம் பிறை, மறுபடியும், சதிலீலாவதி, அது ஒரு கனாக்காலம், தலைமுறைகள் என அவர் இயக்கிய படங்கள் இன்றுவரை கல்ட் க்ளாசிக்காக கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அதேபோல் கேமராவிலும் ஜாலம் காட்டியவர் அவர்.

சர்ச்சைகள்: பாலுமகேந்திரா சினிமாவில் எவ்வளவுக்கு எவ்வளவு புகழின் உச்சத்தில் இருந்தாரோ அதே அளவுக்கு சர்ச்சைகளின் உச்சத்திலும் இருந்தவர். முதலில் அகிலா என்பவரை திருமணம் செய்துகொண்ட அவர்; பிறகு நடிகை ஷோபாவை திருமணம் செய்துகொண்டார். அதனையடுத்து நடிகை மௌனிகாவுடன் லிவின் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். இவர்களில் அகிலா - பாலுமகேந்திராவுக்கு ஷங்கி என்ற மகன் இருக்கிறார்.
பத்திரிகையாளர் சொன்ன சீக்ரெட்: இந்தச் சூழலில் பாலுமகேந்திரா - ஷோபா குறித்து பத்திரிகையாளர் ராஜ கம்பீரன் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "அனைத்திலும் அதீத தன்மையோடு இருப்பவரால் மட்டும்தான் கலைஞனாக முடியும். ஷோபாவை பாலுமகேந்திரா அறிமுகப்படுத்தினார். அவரை பாதுகாக்க சில விஷயங்களை பாலுமகேந்திரா செய்தார். அந்த சமயத்தில் அவருக்கு திருமணம் ஆகியிருந்தாலும் ஷோபாவிடம் மனதை பறிகொடுத்தார்.
பெரிய தகராறு: இருந்தாலும் தனது முதல் மனைவியை பாலுமகேந்திரா விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. இரண்டாவது மனைவியாக ஷோபாவை ஏற்றுக்கொண்டு அவருடனும் வாழ்ந்துவந்தார். இந்தச் சூழலில் ஒரு இரவு ஷோபாவுக்கும் பாலுமகேந்திராவுக்கும் பெரிய தகராறு நடந்தது. அப்போது, 'நீங்கள் உங்களது முதல் மனைவியை விட்டுக்கொடுங்கள். நீங்கள் முழுக்க முழுக்க எனக்குத்தான் சொந்தமாக வேண்டும் என்றார்.
காதலித்ததே தவறு: ஈழத்திலிருந்து பாலுமகேந்திரா வந்தவர். அப்போது இந்தியாவில் அவருக்கான சூழல் எப்படி இருக்கும் என்பதை யூகித்துக்கொள்ளலாம். அப்போதுதான் பாலுமகேந்திரா ஷோபாவிடம் ஒருவரை கரம்பிடித்துவிட்டு உன்னை காதலித்ததே தவறு. அப்படி ஒரு தவறு நிகழ்ந்திருக்கும்பட்சத்தில் அவளை நான் கைவிட எப்படி மனசாட்சி இடம் கொடுக்கும் என்று ஷோபாவிடம் கேட்டார் பாலு.
பிடிவாதம்: ஆனாலும் ஷோபாவோ பிடிவாதமாக நின்றார். நீங்கள் உங்களது முதல் மனைவியை தேடி போனீர்கள் என்றால் இங்கே நடப்பதே வேறு என்று சொல்லி மிரட்ட ஆரம்பித்துவிட்டார். பாலுமகேந்திராவோ அதை கண்டுகொள்ளாமல் அந்த இரவு தனது முதல் மனைவியின் வீட்டுக்கு சென்றார். அப்போதுதான் ஷோபா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அந்த சமயத்தில் பாலுமகேந்திரா திரைத்துறையில் செலுத்திய தாக்கம் அதிகம். அந்த ஆளுமையை வெல்ல முடியாதவர்கள், பொறுக்க முடியாதவர்கள் அவரை களங்கப்படுத்த வேண்டும் என்று அந்தத் தற்கொலையை கொலையாக மாற்றிவிட்டார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











