Rajinikanth - இந்த படம் நல்லாவே இல்லை.. கண்டிப்பா ஓடாது - ரஜினியிடம் நேரடியாக சொன்ன லாரன்ஸ்

சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) நடன அமைப்பாளரும், நடிகருமான லாரன்ஸ் ரஜினிகாந்த்திடம் பாபா படம் ஓடாது என நேரடியாக சொன்ன சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

பேருந்து நடத்துநராக தனது வாழ்க்கையை தொடங்கிய ரஜினிகாந்த், சினிமா மீது இருக்கும் ஆர்வத்தால் வேலையை உதறிவிட்டு சினிமா கல்லூரியில் இணைந்து படித்தார். அதனையடுத்து பாலசந்தர் கண்ணில் பட அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தில் ரஜினியுடன் கமல் ஹாசனும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Journalist Andhanan Talks About Rajinikanth and Raghava Lawrence

போராட்டங்களை சந்தித்த ரஜினி: கமல் ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிவிட்டதால் அவருக்கான போராட்டங்கள் சினிமாவில் கொஞ்சம் குறைவாகத்தான் இருந்தது. ஆனால் ரஜினிக்கு அப்படி இல்லை. எந்த பின்னணியும் இல்லை, ஹீரோவுக்கான முக லட்சணம் என பல போராட்டங்களை சந்தித்தவர். இப்போது அவர் சூப்பர் ஸ்டாராக அதிக சம்பளம் வாங்கும் ஹீரோவாக இருந்தாலும் ஆரம்ப காலகட்டத்தில் அவர் கடுமையாக அவமானப்பட்டிருக்கிறார்.

கோழி இன்னும் முட்டை போடலை: உதாரணமாக, ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது ரஜினி பட யூனிட்டில் சாப்பிட்டார். அப்போது ப்ரொடக்‌ஷன் மேனேஜரிடம் இன்னொரு ஆம்லெட் கேட்டார் ரஜினி. அதற்கு அவரோ, கோழி இன்னும் முட்டை போடல. போட்டதும் தரேன் என கூறியிருக்கிறார். இப்படி பல அவமானங்களை சந்தித்திருக்கிறார் ரஜினி. இதனை அவரும் ஏகப்பட்ட மேடைகளில் சொல்லியிருக்கிறார்.

Journalist Andhanan Talks About Rajinikanth and Raghava Lawrence

போராட்டங்களை தாண்டிய வெற்றி: இப்படி பல அவமானங்களையும், போராட்டத்தையும் சந்தித்த ரஜினிகாந்த் தனது திறமையாலும், ஸ்டைலாலும், விடாமுயற்சியாலும் பெரும் வெற்றி கண்டு மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். அவர் இதுவரை 169 படங்களில் நடித்திருக்கிறார். அவற்றில் பெரும்பாலான படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

படுதோல்வியடைந்த பாபா: ஆனால் அவர் கொடுத்த தோல்வி படங்களில் பாபா படம் முக்கியமானது. படத்தின் கதையை ரஜினிகாந்த் எழுத சுரேஷ் கிருஷ்ணா படத்தை இயக்கினார். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு 2002ஆம் ஆண்டு படம் வெளியானது. ஆனால் படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால் விநியோகஸ்தர்களுக்கு ரஜினிகாந்த் பணத்தை திருப்பி கொடுக்கும் அளவுக்கு நிலைமை சென்றது. இந்தச் சூழலில் படம் உருவானபோதே இந்தப் படம் ஓடாது என லாரன்ஸ் ரஜினிகாந்த்திடம் நேரடியாக சொன்ன சம்பவம் தெரியவந்திருக்கிறது.

Journalist Andhanan Talks About Rajinikanth and Raghava Lawrence

ரஜினியின் ப்ளான்: அதாவது படத்தில் இடம்பெற்ற பாடல்களுக்கு நடனம் அமைக்க ஒரே நடன அமைப்பாளரை தேர்வு செய்யாமல் பலருக்கும் வாய்ப்பு கொடுக்க முடிவெடுத்திருக்கிறார் ரஜினிகாந்த். அப்படி அவர் தேர்ந்தெடுத்த நடன அமைப்பாளர்களில் லாரன்ஸும் ஒருவர். அந்தப் படத்தில் மாயா மாயா பாடலுக்கு அவர் நடனம் அமைத்திருந்தார். படம் எடுத்த பிறகுதான் பாடலுக்கான ஷூட் நடந்தது என்பது கவனிக்கத்தக்கது.

படம் ஓடாது சார்: ரஜினியின் தீவிர ரசிகரான லாரன்ஸ் நடனம் அமைப்பதற்கு முன்னதாக படத்தை முழுதாக பார்க்க வேண்டும் என கேட்டிருக்கிறார். ரஜினியும் படத்தை போட்டு காண்பித்திருக்கிறார். படம் பார்த்து முடித்த பிறகு ரஜினிகாந்த்திடம் லாரன்ஸ், 'சார் இந்த படம் நிச்சயமாக ஓடாது' என ஓபனாகவே கூறியிருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரஜினிகாந்த் ஏதோ சொல்லி சமாளித்திருக்கிறார். லாரன்ஸ் சென்ற பிறகு அருகில் இருந்தவர்களிடம், 'லாரன்ஸ் ரஜினி ரசிகராக படத்தை பார்த்திருக்கிறார். சராசரி ரசிகனாக படத்தை பார்க்கவில்லை' என சொல்லிவிட்டு சென்றாராம். இந்தத் தகவலை பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X