உடல்நலம் சரியில்லாமல் போன ரஜினி.. நயன்தாரா இவ்வளவு பில்டப் செய்தாரா?.. பிரபலம் சொன்ன ஷாக் சீக்ரெட்
சென்னை: நடிகை நயன்தாரா அடுத்ததாக ராக்காயி, மண்ணாங்கட்டி, டாக்சிக், மூக்குத்தி அம்மன் 2 உள்ளிட்ட படங்களில் கமிட்டாகியிருக்கிறார். சூழல் இப்படி இருக்க சமீபமாக அவர் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிவருகிறார். அதுவும் ஆவண பட விவகாரத்தில் தனுஷுடன் எழுந்த மோதல், தான் கொடுத்த ஒரு பேட்டியில் பத்திரிகையாளர்கள் குறித்து தரக்குறைவாக பேசியது; மேலும் ரஜினி ஒரு சூப்பர் ஸ்டார் என்றே தனக்கு சந்திரமுகி படத்தில் நடித்தபோது தெரியாது என்று கூறியது என தொடர்ந்து பிரச்னைகள் சூழ்ந்துகொண்டிருக்கின்றன. இது ஒருபக்கம் இருக்க கடைசியாக அவரது நடிப்பி வெளியான டெஸ்ட் திரைப்படம் தோல்வி அடைந்தது. அதனால் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்துக்கும் 50 கோடி ரூபாய்வரை நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாகவும் ஒரு தகவல் தொடர்ந்து ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
நயன்தாராவின் நடிப்பில் கடைசியாக ஹிந்தியில் ஜவான் திரைப்படமும், தமிழில் அன்னபூரணி, டெஸ்ட் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. இவற்றில் ஜவான் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. குறிப்பாக நயன்தாராவின் நடிப்புக்கும், அழகுக்கும் பாலிவுட்டில் ஓரளவுக்கு நல்ல வரவேற்பே கிடைத்தது. அதன் காரணமாக அம்பானி வீட்டு திருமணத்துக்குக்கூட அவர் அழைக்கப்பட்டிருந்தார். இருப்பினும் தொடர்ந்து அவருக்கு ஹிந்தியில் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. கண்டிப்பாக பாலிவுட்டில் தனக்கான இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர் இருக்கிறார். தமிழில் அவரது நடிப்பில் அன்னபூரணி, டெஸ்ட் ஆகிய படங்கள் கடைசியாக வெளியாகின. இரண்டு படங்களுமே தோல்வியைத்தான் சந்தித்தன.

நெட்ஃப்ளிக்ஸுக்கு நஷ்டம்?: அதிலும் குறிப்பாக டெஸ்ட் படத்தை அவர் ரொம்பவே எதிர்பார்த்திருந்தார். மாதவன், சித்தார்த் உள்ளிட்டோர் நயனுடன் நடித்திருந்தார்கள். கிரிக்கெட் மற்றும் அதில் நடக்கும் பெட்டிங் போன்றவைகளை மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டிருந்தது. தியேட்டர்களில் வெளியிடாமல் நேரடியாக நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிட்டார்கள். நெட்ஃப்ளிக்ஸும் நயன், மாதவன் என பான் இந்தியா ஸ்டார்கள் இருப்பதால் தைரியமாக வெளியிட ஒத்துக்கொண்டது. ஆனால் படம் ரசிகர்களிடையே கொஞ்சம்கூட வரவேற்பை பெறவில்லை. இதன் காரணமாக அந்த நிறுவனத்துக்கு கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய்வரை நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாக திரைத்துறையில் தொடர்ந்து பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன.
விக்னேஷ் சிவனுடன் நடந்த திருமணம்: இதற்கிடையே விக்னேஷ் சிவன் இயகக்த்தில் நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது அவரை காதலித்தார் நயன். பிறகு சில வருடங்கள் கழித்து இரண்டு பேரும் திருமணம் செய்துகொண்டார்கள். மேலும் வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளையும் பெற்றுக்கொண்டார்கள். அவர்களுக்கு உயிர், உலக் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. திருமணத்துக்கு பின்பும் பிஸியாக நடித்தாலும் தனது குடும்பத்துடன் நேரம் செலவிடுவதை தவறாமல் கடைப்பிடித்துவருகிறார் அவர். சமீபத்தில்கூட கணவர், குழந்தைகளுடன் ஐரோப்பாவில் ஒரு டூர் அடித்துவிட்டு வந்தார். அதேபோல் அன்னையர் தினத்தன்றும் தனது குழந்தைகளோடு இருந்த புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். இப்படி ஒருபக்கம் குடும்பம், சினிமா என மகிழ்ச்சி இருந்தாலும் மறுபக்கம் சர்ச்சைகளையும் அதிக அளவில் சமீபத்தில் சந்திக்க ஆரம்பித்தார் அவர்.
நயன்தாரா பற்றிய ஆவணப் படம்: சர்ச்சைகளில் முதல் சர்ச்சையாக அவரைப் பற்றிய ஆவணப் பட சர்ச்சைதான் வெடித்தது. அதாவது அவரது வாழ்க்கையில் நடந்த அனுபவங்கள் மற்றும் திருமணம் தொடர்பாக ஒரு ஆவணப் படம் உருவானது. கௌதம் மேனன் இயக்கியிருந்தார். நெட்ஃப்ளிக்ஸில் அந்த டாக்குமென்ட்டரி படம் அவரது பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ட்ரீமானது. அந்தப் படத்தில் நானும் ரௌடிதான் படத்தின் ஃபுட்டேஜுகளை பயன்படுத்துவதற்கு தனுஷ் அனுமதி மறுக்க; அதையும் மீறி பயன்படுத்தப்பட்டது. இதனால் நீதிமன்றத்தில் தனுஷ் வழக்கு தொடர்ந்தார். அதுமட்டுமின்றி தனுஷுக்கு எதிராக காட்டமாக ஒரு அறிக்கையையும் வெளியிட்டிருந்தார் நயன்தாரா.
அடுத்த சர்ச்சை: அந்த சர்ச்சை ஓய்ந்த சூழலில் அடுத்ததாக அவரை சுற்றி இன்னொரு சர்ச்சை எழுந்தது. தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், 'சந்திரமுகி படத்தில் எனது முதல் ஷாட்டே ரஜினிகாந்த்துடன்தான் இருந்தது. ஆனால் அவர் பெரிய சூப்பர் ஸ்டார் என்று அப்போது எனக்கு தெரியாது. ஒருவேளை தெரிந்திருந்தால் நான் பதற்றமாகியிருப்பேன் என்று நினைக்கிறேன். அப்படி தெரியாமல் இருந்ததுதான் நான் சரியாக நடிக்க உதவியதாக நினைக்கிறேன்' என்றிருந்தார். அது எப்படி ரஜினி ஒரு சூப்பர் ஸ்டார் என்று தெரியாமல் இருந்திருக்கும். இதெல்லாம் வேண்டுமென்றே சொல்வது என்று விளாசினார்கள் ரசிகர்கள். மேலும் அதே பேட்டியில் மூன்று பத்திரிகையாளர்கள் குறித்தும் தரக்குறைவாக பேசியிருந்தார் நயன்.

அந்தணன் வீடியோ: இந்நிலையில் நயன்தாரா குறித்து அந்தணன் தனது யூடியூப் சேனலில் பேசியிருக்கிறார். அவர் அந்த வீடியோவில், "நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் யாழ்ப்பாண தமிழ் பேசி ஒரு படத்தில் நடிக்கிறார். அந்தப் படம் லோ பட்ஜெட் படம்தான். எனவே அந்தப் படக்குழு அவரை தொடர்புகொண்டு பட்ஜெட் விஷயத்தை சொல்லி; உங்களுக்கு பெரிய ஹோட்டலில் ரூம் போடுவது கஷ்டம் என்று சொன்னார்கள். அவரும் உடனே பரவாயில்லை உங்கள் நண்பர்கள் வீடுகளில்கூட தங்கிக்கொள்கிறேன். ஷூட்டிங் பிரேக்கில் மரத்துக்கு அடியில் ஒரு கட்டில் மட்டும் இருந்தால் போதும் அதில்கூட நான் ரெஸ்ட் எடுத்துக்கொள்வேன் என்று சொன்னாராம். தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர் அவர். அவர் அப்படி சொன்னதை பார்த்து படக்குழு ஆச்சரியம்தான் பட்டது.
நயன்தாரா செய்தது: இப்படிப்பட்ட நடிகர் இருக்கும் தமிழ் சினிமாவில்தான் நயன்தாராவும் இருக்கிறார். அதாவது ஒரு தயாரிப்பு நிர்வாகியிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர் சொன்னதை சொல்கிறேன். அண்ணாத்த பட ஷூட்டிங் ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்தது. அப்போது கொரோனா காலம் வேறு. அந்த சமயத்தில் ரஜினிகாந்த்துக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அது வெளியே தெரிந்தால் பெரிய சர்ச்சை ஆகிவிடும் என்பதால் ராமோஜி பிலிம் சிட்டிக்குள்ளேயே இருக்கும் மருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார். இதனால் ஷுட்டிங் கேன்சல் ஆனது. நயன்தாராவும் ஹைதராபாத்திலிருந்து கேரளாவுக்கு சென்றுவிட்டார். பிறகு ரஜினிக்கு சிகிச்சை முடிந்து நலமான பிறகு மீண்டும் ஷூட்டிங்கை தொடங்கினார் இயக்குநர்.
நயன் வைத்த கண்டிஷன்: அடுத்த ஷெட்யூலுக்கு நயன்தாரா கேரளாவிலிருந்து ஹைதராபாத் வர வேண்டும். இதற்கிடையே படம் எப்படி வந்தாலும் பரவாயில்லை; எங்கள் பட ஷூட்டிங்கில் ரஜினிக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது. எனவே எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ரஜினியை பத்திரமாக அனுப்புங்கள் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் சொல்லிவிட்டது. சூழல் இப்படி இருக்க ஹைதராபாத்துக்கு கேரளாவிலிருந்து வர நயன்தாரா தனி விமானம் கேட்டிருக்கிறார். ஆனால் தயாரிப்பு நிறுவனமோ எதற்காக தனி விமானம் பயணிகள் விமானத்திலேயே உங்களுக்கும் நீங்கள் எத்தனை பேருக்கு டிக்கெட் போட சொல்கிறீர்களோ அவர்களுக்கும் பிஸ்னெஸ் க்ளாஸில் டிக்கெட் போடுகிறோம் என்று சொன்னார்கள்.
சிவா செய்த வேலை: ஆனால் நயன்தாராவோ அதற்கு மறுப்பு தெரிவித்து ப்ரைவேட் ஜெட் இருந்தால்தான் ஷூட்டிங் வருவேன் என்று சொல்லிவிட்டார். வேறு வழியே இல்லை அவர் வந்துதான் ஆக வேண்டும் என்ற நிலைமை இருந்தது. சன் பிக்சர்ஸும் தன்னுடைய முடிவில் உறுடியாக இருந்தது. அந்த சமயத்தில் இயக்குநர் சிவாவோ, கேமரா மற்றும் ஆர்ட் டிப்பார்ட்மெண்ட்டுகளில் பேசி கொஞ்சம் செலவை குறைத்து வேலை செய்யுங்கள் என கூறி அதில் மிச்சமான கணிசமான பணத்தை கொண்டு நயனுக்கு ப்ரைவேட் ஜெட்டை ஏற்பாடு செய்துகொடுத்ததாக அந்த தயாரிப்பு நிர்வாகி என்னிடம் சொன்னார். அதனை கேட்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நயன்தாராவுக்கு ஏன் இவ்வளவு மவுசு என்றுதான் தோன்றியது" என்றார்.


Click it and Unblock the Notifications











