Vimal - குடித்துக்கொண்டே விமல் கதை கேட்பார்.. நிதானம் இல்லாமல் பல கையெழுத்து.. பிரபலம் பகிர்ந்த சீக்ரெட்

சென்னை: Vimal (விமல்) தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தவர் நடிகர் விமல். கில்லி, கிரீடம் உள்ளிட்ட படங்களில் ஒரு சில காட்சிகளில் தலைகாட்டியிருந்தார்.

பல வருடங்கள் சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தவர் சற்குணம் இயக்கத்தில் களவாணி படத்தில் ஹீரோவாக நடித்தார். சற்குணம் இயக்கத்தில் உருவான அந்தப் படம் மெகா ஹிட்டானது. குறிப்பாக களவாணியில் விமலின் நடிப்பு ரொம்பவே ரசிக்கப்பட்டது. முதல் பட ஹீரோ மாதிரியே நடிக்கவில்லை அவ்வளவு இயல்பாக நடிக்கிறார் என ரசிகர்கள் புகழ்ந்தனர்.

Journalist Anthanan Shares about Vimal And His Unknown Sides

வாகை சூடிய விமல்: களவாணியின் வெற்றிக்கு பிறகு மீண்டும் சற்குணத்துடன் இணைந்த விமல் வாகை சூட வா படத்தில் நடித்தார். கல்வியை அடிப்படையாக உருவாக்கப்பட்டிருந்த அந்தப் படத்தில் ஆசிரியர் வேடத்தில் நடித்திருந்தார் விமல். இந்தப் படமும் விமர்சன ரீதியாக ஹிட்டாக விமலின் நடிப்பும் பெரிதும் பேசப்பட்டது. அதுமட்டுமின்றி இந்தப் படம் தேசிய விருதையும் வென்றது. இதுவரை விமலின் நடிப்பில் வெளியான மிகச்சிறந்த படமாக இது கருதப்படுகிறது. பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட விமலுக்கு திடீரென பட வாய்ப்புக்கள் குறைந்தன.

விமலின் ரீ என்ட்ரி: சில காலம் நடிக்காமல் இருந்த விமல் விலங்கு வெப் சீரிஸ் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அந்த வெப் சீரிஸை பாண்டிராஜிடம் உதவியாளராக இருந்த பிரசாத் இயக்கியிருந்தார். மொத்தம் 7 எபிசோட்களாக உருவான விலங்கு வெப் சீரிஸ், கடந்தாண்டு பிப்ரவரி மாதம் ஜீ5 ஓடிடியில் வெளியானது. இதில் விமல், இனியா, முனிஸ்காந்த், பாலசரவணன், மனோகர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். த்ரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டிருந்த அந்த வெப் சீரிஸ் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

விமலின் படங்கள்: விலங்கு வெப் சீரிஸ் கொடுத்த வெற்றியை அடுத்து உற்சாகமான விமல் அடுத்தடுத்து படங்களில் கமிட்டானார். அந்தவகையில் அவரது நடிப்பில் தெய்வ மச்சான், குலசாமி ஆகிய படங்கள் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகின. ஆனால் அந்தப் படங்கள் தோல்வியையே சந்தித்தன. இதனையடுத்து துடிக்கும் கரங்கள் படம் செப்டம்பர் 8ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.

பல கையெழுத்து: துடிக்கும் கரங்கள் படத்தின் விழாவில் பேசிய விமல் சினிமாவுக்கு வந்த புதிதில் என்ன ஏது என்றே தெரியாமல் பல கையெழுத்தை போட்டேன் என்று பேசினார். மேலும் இனி தெளிவாக இருப்பதாகவும் கூறியிருந்தார். இந்தச் சூழலில் விமல் குடித்துவிட்டுத்தான் கதையே கேட்பார் என்று விஷயம் தெரியவந்திருக்கிறது.

Journalist Anthanan Shares about Vimal And His Unknown Sides

என்ன செய்வார்?: அதாவது தினமும் மாலை காரை எடுத்துக்கொண்டு வெளியே வரும் விமல் தன்னிடம் ஏற்கனவே கதை சொல்லியிருந்தவர்களை கோடம்பாக்கத்தில் பார்த்தால், 'ஹலோ பிரதர் வாங்க' என காரில் ஏற்றிக்கொண்டு எங்கேயாவது சென்று குடித்துவிடுவாராம். அதுவரை அந்த இயக்குநரிடம் பேசிக்கொண்டே இருப்பாராம். பிறகு மீண்டும் அவரை ஒரு இடத்தில் இறக்கிவிடும்போது கையில் 2000 ரூபாயை கொடுத்து இன்னொரு நாள் வாங்க கதை சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு சென்றுவிடுவாராம்.

இதனாலேயே அவரை ஃபாலோ செய்வதை பலரும் நிறுத்திவிட்டார்களாம். மேலும் நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்து போட்டேன் என விமல் சொன்னதிலும் ஒரு காரணம் இருக்கிறதாம். அதாவது அவர் கையெழுத்து போட்ட பல சமயங்கள் விமல் நிதானத்திலேயே இருந்ததில்லையாம். அதனால்தான் அவருக்கு வீழ்ச்சி ஏற்பட்டதாம். இந்தத் தகவலை பத்திரிகையாளர் அந்தணன் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X